செவ்வாய், ஆகஸ்ட் 09, 2016

ஹிஜாப்-ஒரு விளக்கம் [மூன்றாம் பகுதி]

ஹிஜாப்-ஒரு விளக்கம் [மூன்றாம் பகுதி]
அல்லாஹ்வின் திருப்பெயரால்.....
பர்தாவின் இன்றைய நிலைமை.
இன்று பர்தா அணிகின்ற பெண்களில் பலருக்கு அது பற்றிய சட்டங்கள் தெரியாததால் தாங்கள் விரும்பிய மாதிரியெல்லாம் பர்தா அணிகிறார்கள். அதிகமானவர்கள் தங்கள் பர்தாவில் அலங்காரமான [embroidery ] பூ வேலைப்  பாடுகளை செய்துகொள்கிறார்கள். அவை பார்ப்பவர்களின் கண்களைக் கவர்கின்றன. இன்னும் பலர் பர்தாவில் ஓரங்களைக் கிழித்து, அவற்றை நாடாக்களால் முடிச்சிட்டு, உள்ளே அணிந்துள்ள ஆடைகள் வெளியே தெரியும்படி அணிகிறார்கள்.  இத்தகையவர்கள் தாங்கள் பர்தாவே அணியவில்லை என்பதை அறிய வேண்டும்.


இன்னும் பலர், ஸ்காரஃப்  மட்டும் தலையில் கட்டிக்கொண்டு தங்களின் பொதுவான சேலைகள் மற்றும் சுடிதார் ஆடைகளுடனேயே வெளியே வருகிறார்கள். இவர்களும் பர்தா அணிந்தவர்களாக மாட்டார்கள். சிலர் வீட்டிலிருந்து புறப்படும்போது பர்தா அணிகிறார்கள். பிறகு வழியில் தலை முக்காடு கழன்றுவிடுகிறது. தலையும் கழுத்துப்பகுதியும் நெஞ்சுப் பகுதியும் திறந்த நிலையில் செல்கிறார்கள்.

பலர் நெக்லஸ், வளையல்கள் போன்ற நகைகளை வாங்குவதற்காகக் கடைகளுக்குச் செல்லும்போது அங்குள்ள கடை ஊழியர்களிடம் மிகச் சாதாரணமாகவும் இயல்பாகவும் பேசிக்கொண்டு, அவர்கள் முன் பர்தாவை விலக்கிவிட்டு நகைகளை அணிந்து பார்க்கிறார்கள். கடையுள்ள ஆண்கள் அந்நியர்கள்தாம் என்ற நினைவே இல்லாதபடி சொந்தக் சகோதரிகளிடம் சிரித்துப் பேசிப் பழகுவதைப்  போல் அவர்களிடம் நடந்து கொள்கிறார்கள்.

கடை ஊழியனிடம் தங்கள் கைகளை கொடுத்து வளையல்கள் அணிந்து கொள்கிறார்கள்,, அவனிடம் கழுத்தைக் காட்டி நெக்லஸ்களை அணிந்துவிடச் சொல்கிறார்கள்,, கால்களைத் திறந்து காட்டிக் கொலுசை மாட்டிவிடச் சொல்கிறார்கள். மானங்கெட்ட இந்தச் செயலைப் பற்றி எந்த அருவருப்பும் கொள்வதில்லை.

கிராமங்களில் உள்ள பெண்கள் தங்கள் ஊரிலுள்ள கடைக்கார்களிடமும், நகரத்துப் பெண்கள் தங்கள் தெருக்களிலுள்ள கடைக்கார்களிடமும் அன்றாடம் சென்று தேவைப்படுகின்ற பொருட்களை வாங்கி வருகின்ற பழக்கம் உடையவர்களாக இருக்கின்றார்கள்  . பலர் அவர்களிடம் பர்தாவை பேணுவதை அவசியமாகக் கருதுவதே இல்லை. அதிலும் , வசதிமிக்க வீட்டாரின் பெண்கள் தங்கள் கார் ஓட்டுநர்களைத் தங்களின் சகோதர்களைப்  போல் பாவித்து அவர்களுடன் ஷாப்பிங் போகிறார்கள்,, அவர்களிடம் சிரித்துப் பேசி விளையாடுகிறார்கள்,, இப்படி நடந்து கொள்வதினால் , இது இறுதியில் தகாத எண்ணங்களையும் மானக்கேடான செயல்களையும் தூண்டி விடுகிறது. நல்ல குடும்பங்களையும் சீர்குலைத்து விடுகிறது.

இன்னும் சில இடங்களில் சிறுமிகளைப்  பள்ளிக்கூடங்களுக்கு அழைத்துச் சென்று விடுவதற்கும் அழைத்துச் வருவதற்கும் வாலிபர்கள் வேலைக்கு நியமிக்கிறார்கள்  . [ஆட்டோ ஓட்டுனர்கள்]  அச்சிறுமிகளோ வயது வந்த பிறகும்  அந்தப் பணியாட்களுடன் அல்லது ஆட்டோ ஓட்டுனர்கள் முன்னர் பழகியத்தைப்  போன்றே பழகுகிறார்கள். இதனால் நாளடைவில் பல விரும்பத்தாகாத  சம்பவங்கள் நிகழ்ந்துவிடுகின்றன.
இந்த விபரீதங்களுக்கு  அடிப்படைக்கு காரணம், முறையான பர்தாவை பற்றிய தெளிவான அறிவையும், அது சார்ந்த ஒழுக்கங்களையும் அறியாமல் இருப்பதே ஆகும்.
பெண் என்பவள் அவள் ஒரு விலைமதிக்கமுடியாத மாணிக்க கல் , அதை கவனமாகவும் பாத்திரமாகவும் பாதுகாக்கவேண்டும்! நாம் வைரத்தை எப்படி பாதுகாப்போமோ அதைவிட பெண்ணை ரொம்ப அதிகமாக பாதுகாக்க வேண்டும்!
இன்ஷாஅல்லாஹ் இன்னும் தொடரும்  . இன்ஷாஅல்லாஹ் அடுத்த இதழில் பர்தாவின் முறையைப் பற்றியும் நிபந்தனைகள் பற்றியும் அறிவோம்......

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!