அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்! எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.��

சனி, ஆகஸ்ட் 20, 2016

மனிதனுக்கு மிகப் பிரியமானவைகள் [அவசியம் படியுங்கள்]

மனிதனுக்கு மிகப் பிரியமானவைகள் [அவசியம் படியுங்கள்]
அல்லாஹ்வின் திருப்பெயரால்...

மனிதனுக்கு இந்த உலகத்தில் ரொம்ப பிரியமான விஷயங்கள்..
அல்லாஹுத்தஆலா தன்னுடைய திருமறையில் கூறுகின்றான்.. [மனிதனுக்கு ரொம்ப பிடித்தமான விருப்பமான எட்டு விஷயங்கள் அவைகளில் மனிதன் இறைவனுக்கு மாறுபட்டு நடப்பதிலும் , அவனுடைய தூதருக்கும் மாறுபட்டு நடப்பதிலும் அந்த எட்டு விஷயங்கள் இருக்கின்றன]. அதைப்பற்றி தான் இறைவன் கூறுகின்றான்..


[நபியே !] நீர் கூறும்.. உங்களுடைய தந்தைமார்களும், உங்களுடைய பிள்ளைகளும், உங்களுடைய சகோதர்ரர்களும், உங்களுடைய மனைவிமார்களும், உங்களுடைய குடும்பத்தார்களும் , நீங்கள் திரட்டிய செல்வங்களும், நஷ்டம் [எங்கே] ஏற்பட்டு விடுமோ என்று நீங்கள் அஞ்சுகின்ற [உங்கள்] வியாபாரமும், நீங்கள் விருப்பத்துடன் வசிக்கும் வீடுகளும், அல்லாஹ்வையும் அவன் தூதரையும், அவனுடைய வழியில் அறப்போர் புரிவதையும் விட உங்களுக்கு பிரியமானவையாக இருக்குமானால் அல்லாஹ் அவனுடைய  கட்டளையை [வேதனையை] கொண்டு வருவதை எதிர்பார்த்து இருங்கள்-அல்லாஹ் பாவிகளை நேர்வழியில் செலுத்துவதில்லை.
அல்குர் ஆன்..9,24] சூரா அத்  தவ்பா ]

நபிமொழி கூறுகிறது.. எது உண்மையான விசுவாசம்?
தங்களுடைய தந்தை, மக்கள், மற்ற எல்லோரையும்விட என்னை அதிகமாக நேசிக்காதவரை, உங்களில் எவரும் [முழுமையான] விசுவாசியாக இருக்கமுடியாது.
ஆதாரம்-புகாரி, முஸ்லிம் ]
மற்றொரு அறிவிப்பில்..
சொத்தும், மக்களையும் விட அதிகமாக நேசிக்காதவரை' என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆதாரங- நஸயீ ]

சிந்திக்கவேண்டிய திருமறை வசனமும், நபிகள் நாயகம் [ஸல்] அவர்களின்  பொன்மொழிகளும் .
உதாரணத்துக்கு .. ஒரு  இளைஞன்  திருமணத்தின்போது பெண்வீட்டாரிடம் எதுவும் வாங்காமல்  நபிவழி முறைப்படி நிக்காஹ் செய்ய விரும்புகிறான். இதை பெற்றோர்கள்  விரும்பவில்லை , மகனிடம் கூறுகிறார்கள்  ''இப்படியெல்லாம் நீர் செய்ய கூடாது ஊர் வழக்கப்படி தான் எங்கள் ஆசைப்படிதான் நீர் நடக்கவேண்டும் என்று கூறும்போது '' அப்படி அந்த மகன் பெற்றோர்கள் சொல்படி நடந்தால் , அவன் நிச்சயமாக குழப்பத்தில் விழுந்துவிட்டான். அவன் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும்  விட பெற்றோர்கள் தான் அவனுக்கு பிரியமாகிவிட்டது!   அப்படி அவன் பெற்றோர்களுக்கு மாற்றமாக செய்து  ''எனக்கு அல்லாஹ்வும், அவன் தூதரும் தான் முக்கியம் என்று செய்வான் என்றால் அவன் நிச்சயமாக வாழ்க்கையில் வெற்றி பெறுவான் , அவனுக்கு அல்லாஹ்வின் உதவியும் அருளும் கிட்டும்.  சின்ன சின்ன சோதனைகள் வந்தாலும் அவைகளை அல்லாஹ் நீக்கி விடுவான். எல்லோருடைய உள்ளமும் அல்லாஹ்வின் கரத்தில் இருக்கிறது. அவன் பெற்றோர்களின் உள்ளத்தை மாற்றிவிடுவான். எல்லாம் நன்மையாக தான் முடியும்!  மனைவி , வியாபாரம், வீடு இப்படி எல்லா விஷயத்தையும் நாம் எடுத்துக்கொண்டால் நாம் முதன்மைக் கொடுப்பது, முக்கியத்துவம் அளிப்பது  எல்லாம் அல்லாஹ்வின் விஷயத்துக்கும் அவனுடைய தூதர் விஷயத்துக்கு அல்ல மாறாக  அந்த எட்டு விஷயத்துக்கும் தான் என்பது எதார்த்த உண்மை! அதில் சிலரைத் தவிர பெரும்பாலும் முஸ்லிம்  மக்கள்கள் மூழ்கித்தான் இருக்கிறார்கள்!

நாம் ஒவ்வொரு விஷயத்திலும் முக்கியத்துவம் கொடுப்பது இந்த அற்ப உலக காரியத்துக்குக்காக!     அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நம் கையில் வைத்திருக்கிறோம். உள்ளத்தில் இந்த அற்ப துன்யாதான் இருக்கிறது! நாம் வீர வசனம் வாயால் மட்டும் தான் கூறுவோம் செயலில் பூஜ்யம்! நம்மிடத்தில்  புது புது நூதனங்கள் வந்துக்  கொண்டுதான் இருக்கிறது அவைகளில் நாம் விழுந்து விடுகிறோம்!

அல்லாஹ் மிக்க அறிந்தவன்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!