வெள்ளி, செப்டம்பர் 16, 2016

எந்த சக்தியின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும்

எந்த சக்தியின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் .....
அல்லாஹ்வின் திருப்பெயரால்............

[பூமியில்] உள்ளயாவரும்  அழிந்து போகக்  கூடியவரே- மிக்க வல்லமையும், கண்ணியமும் உடைய உம்  இறைவனின் முகமே நிலைத்திருக்கும்.
அல்குர்ஆன் ..55..26,27]

நான்கு விஷயங்களின் மீதுள்ள நம்பிக்கையை உள்ளத்திலிருந்து எடுத்துவிட்டு அல்லாஹ்வின் மீது மட்டும் நம்பிக்கை வைக்க வேண்டும்.
பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகள் மீது '' எங்கள் பிள்ளைகள் நாங்கள் வயதானால் அவர்கள் எங்களை காப்பாத்துவார்கள் என்று கூட சொல்லக் கூடாது.


1.தன்னுடைய பொருளின்மீது ,
2.தன்னுடைய உடலின் சக்தியின் மீது,
3.மற்றவர்களின் பொருள்மீது,
4.மற்றவர்களின் உடலின் சக்தியின் மீது,
[மேற்கண்டவைகளின் மீது நம்பிக்கை வைக்கக் கூடாது]

1-வது தன்னிடம் எவ்வளவுதான் பொருளிருந்தாலும் என்றோ ஒருநாள் நம்மை விட்டும் அது பிரிந்து விடும் அல்லது நாம் அதை விட்டுவிட்டு மரணித்து விடுவோம் . நாம் மரித்தவுடனேயே வேறு உரிமையாளர்கள் அதை அடைந்துகொள்வார்கள்.

2-வது நாம் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கின்றோம் எனவே, எந்தக்  காரியத்தையும் சாதித்துவிடலாம் என்று எண்ணிக்கொண்டிருக்கின்றோம். ஆனால் நமக்கு திடீரென்று ஏதாவது வியாதி ஏற்பட்டு அந்த வியாதியின் காரணமாக ஒரு சிறிய வேலையைக்கூட செய்ய முடியாமலாகி விடலாம்.

3-வது மற்றவர்களின் பொருளின் மீது நம்பிக்கை வைப்பதும் ஏமாற்றம்தான். நம்முடைய பொருள் அழிந்து விடுவது போன்று அவருடைய பொருளும் எப்படியும் ஒரு நாள் அழிந்துவிடும்.

4-வது  மற்றவர்களின் உடலின் சக்தியின் மீது நம்பிக்கை வைப்பதும் கூடாத விஷயமே. காரணம், நமக்கு வியாதி ஏற்பட்டது போன்று அவருக்கும் வியாதி ஏற்பட்டு எதுவுமே செய்ய முடியாமலாகிவிடலாம்.

எனவே, அழிவே இல்லாத எல்லாம் வல்ல அல்லாஹ்வுடைய சக்தியின் மீது மட்டும் நம்பிக்கை  வைத்து அவனிடமே நமது தேவைகளைப்  பூர்த்தி செய்து தரும்படி ஒவ்வொரு நேரமும் பிரார்த்தனை செய்து கொண்டே இருக்கவேண்டும்.
ஒரு ஹதீஸின் கருத்து.. ஒரு பறவை காலையில் தன்  கூட்டிலிருந்து வெளியே வயிறு ஒட்டிய நிலையில் போகிறது , அது மாலையில் திரும்பும்போது வயிறு நிரம்பி வருகிறது. செல்வங்களை அதிகமாக சேமித்து வைத்து பிறகு அது  நமக்கு வருங்காலத்தில் உதவும் என்று நம்பி வாழக்  கூடியவர்கள் முஸ்லிம்களும் உண்டு! அல்லாஹ் நமக்கு எப்படியும் கொடுப்பான் என்று உறுதியான நம்பிக்கையில் வாழும் முஸ்லிம்களும் உண்டு!

அல்லாஹ் மிக்க அறிந்தவன்.
அல்லாஹ்வின் நல்லடியார்களே ! முன்மாதிரி முஸ்லிம்  கட்டுரைகளை படிக்க தவறாதீர்கள்! படித்துவிட்டு மற்றவர்களுக்கு  ஷேர் செய்ய மறந்துவிடாதீர்கள்! அல்லாஹ் உங்களுக்கு அருள் செய்வான். www.muslim-life-model.blogspot.com 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!