சனி, செப்டம்பர் 17, 2016

ஆண்ட்ராய்டு போனும் அண்ணலாரின் உம்மத்தும்!

ஆண்ட்ராய்டு போனும் அண்ணலாரின் உம்மத்தும்!

செல்பியும் செல்போனும் பேஸ்புக்கும் வந்ததில இருந்து இந்த வருசம் வரை நம்ம சமுதாயம் உம்ரா வித் செல்பி, ஹஜ் வித் செல்பின்னு ஹரம் ஷரீபில் நின்னு கஃபா பின்னணில செல்பி நன்மைகளை (?) வாரி குவிச்சிட்டு இருந்தது.

இஹ்ராம் கட்டுனதில இருந்து, கால் டாக்சில ஏறுனது முதல் ஏரோப்ளேன்ல ஏறி உட்கார்றதுன்னு ஒரே அப்டேட் அலப்பறைதான் போங்க.

இப்ப முத்திப் போச்சோ இல்ல முன்னேறிப் போச்சோ தெரியல,

இந்த வருசம் செல்பி இப்தார் ஆரம்பிச்சுட்டாங்க.

பள்ளிவாசலோ, பக்கத்துவீடோ, தனது வீடோ எங்க நோம்பு திறந்தாலும் போட்டோ தான்.

அவங்க நோம்பு திறக்க யாராவது ஸ்பான்சர் பண்ணியிருந்தாலோ, அல்லது  பள்ளி வாசல்ல  பக்கத்துல யாராவது இருந்தாலோ,  ஆறு அம்பதுக்கு போட்டோ அப்லோடு ஆகியிருக்கும்.


கூடவே, கூட இருந்த இன்னாருக்கு இன்னத செய் அல்லாஹ்னு துஆவும்.

அருமை சமுதாயமே! ஆண்டவன் பேஸ்புக்ல அக்கவுண்ட் வச்சி, அப்பப்ப ஓபன் பண்ணி பாத்து, அதுல வர்ர துஆக்களை அக்செப்ட் பண்றான்னு நெனச்சீங்களா?
இந்த ஆண்டுராய்டு போன் வந்தும் போதும் , அது கையிலே என்னமா பாடுபடுது..  ஒரு குடும்பம் ஒன்றாக கூடி பேசி , மகிழ்ந்து பிள்ளைகளுடன் சேர்ந்து அமர்ந்து சிரிச்சி பேசி சந்தோசமாக இருந்த காலம் போய்விட்டது! இப்போது ஒரு வீட்டில் எல்லோரும் ஒன்றாக இருக்கிறார்கள் , ஆனால், அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பக்கம் கையில் செல் போனுடன் .  வாப்பா ஒரு பக்கம் செல் போனில் முகநூல் பார்த்துக் கொண்டியிருக்கிறார் , அம்மா ஒரு பக்கம் வாட்ஸ் ஆப் சாட் பண்ணிக்கொண்டுயிருக்கிறாள். பிள்ளைகள்  ஒரு பக்கம் செல் போனை வைத்துக்கொண்டு ''என்ன செய்கிறார்களோ '' அல்லாஹ் மிக்க அறிந்தவன். இப்பொழுது இதுதான் குடும்பம்!

முகநூலில் சிறு பிள்ளைகள் போட்டோ போட்டு '' அந்த பிள்ளை தொழுவது போல் குரான் ஓதுவதுபோல் படம் பிடித்து போடுகிறார்கள் . இதில் என்ன சந்தோசம் இருக்கிறது என்று தெரியவில்லை ..? அதற்கு நிறைய கமன்ட் , லைக்  நிறைய விழுகிறது. அதில் ஒரு சந்தோசம்!

அப்பொழுது சீக்கிரம் படுத்து, சீக்கிரம் விழித்து விடுவார்கள் . இப்பொழுது நேரமாக படுத்து ரொம்ப நேரமாக விழிப்பது !  காரணம் , பல மணி நேரம் முகநூலில் அரட்டை அடித்து விட்டு அல்லது வாட்ஸ் ஆப்பிள்  அதிக நேரம் சாட் பண்ணுவது . இப்போ நிறைய குறுப்பு குறுப்பாக கிளம்பிட்டாங்கோ ...போட்டி போட்டுக் கொண்டு நிறைய பேர்கள் ஹதீஸ்கள் , குரான் வசனங்கள்  முகநூலிலும் , வாட்ஸ் அப்பிலும் போட்டு தள்ளுகிறார்கள் .. ஆனால் அவர்கள் கொஞ்சம் கூட சிந்திப்பதில்லை .. '' நான் எப்படி இருக்கிறேன் என் நிலை இஸ்லாத்தில் இப்படி இருக்கு ? நானே முதலில் குரான் ஓதுவதில்லை, ஐந்து வேளை தொழவில்லை , அப்படி  இருக்க நான் மற்றவர்களுக்கு எப்படி உபதேசம் செய்யமுடியும் ? சிந்திக்கவேண்டாமா ..!

ஒரு நண்பர் என்னிடம் கூறினார்.. ''ஒரு பள்ளி இமாம் அவர் தொழுதுக் கொண்டிருக்கும்போது அவருடைய செல் போனை எடுத்து பார்க்கிறார் அதை படம் பிடித்து வாட்ஸ் ஆப்பிள் போட்டு அசிங்கப்படுத்துவது . இப்படியெல்லாம் நடக்கிறது.   மஸ்ஜிதில் கூட இந்த செல் போனுக்கு வேலைக் கொடுக்கிறார்கள் , அங்கேயும் சும்மா இருபத்தில்லை . செல் போனை வைத்து பார்ப்பது , வாட்ஸ் ஆப்பிள் சாட் பண்ணுவதுமாக தான் இருக்கிறது. ஒவ்வொரு வீட்டிலும் தொலைந்த சந்தோஷமும் , மகிழ்ச்சியும் திரும்ப கிடைக்குமா ?? செல் போனினால் இழந்த நிம்மதி மீண்டும் வருமா ?? நிச்சயமாக நாம் ஒவ்வொருவரும் சிந்திக்கவேண்டும்.

உங்கள் சிந்தனைக்காக இந்த கட்டுரை ... போன நேரம் திரும்ப வராது! பொழுதுபோக்கு சாதனங்களினால் மறுமையில் எந்த பலனும் தராது! நம் நேரத்தை பற்றி மறுமையில் அல்லாஹ் விசாரிப்பான் என்பதை மறந்துவிடாதீர்கள்! ஐந்து கேள்விகள் மறுமையில் இருக்கிறது  , அவைகளில் ஒன்றுதான் கொடுக்கப்பட்ட நேரம் , அதை எப்படி கழித்தாய் என்று அல்லாஹ் கேட்கும்போது ''நாம் என்ன பதில் சொல்வோம் என்பதை இப்பொழுதே  விழித்துக் கொள்வோம்!  

அல்லாஹ் மிக்க அறிந்தவன். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!