அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்! எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.��

வெள்ளி, செப்டம்பர் 02, 2016

அரஃபா நாளின் நோன்பு!

அரஃபா நாளின் நோன்பு! 
அல்லாஹ்வின் திருப்பெயரால்....

இறையச்சமுடைய முஸ்லிம்  ரமலான் அல்லாத மாதங்களிலுள்ள நஃபிலான  நோன்புகளைத் தவறவிடக்கூடாது.  அரஃபா நாள் [துல்ஹஜ் பிறை 9] மற்றும் முஹர்ரம் பிறை 9,10 போன்ற காலங்களில் நோன்பு நோற்பது பாவங்களைத் துடைத்தெறியும் சிறந்த அமலாகும்.

இது குறித்து நபிமொழிகள்..

அபூகதாதா [ரலி] அவர்கள் கூறினார்கள்.. நபி [ஸல்] அவர்களிடம் அரஃபா நாளின் நோன்பைப்பற்றி கேட்கப்பட்டபோது , 'அது கடந்த ஒரு வருடம் மற்றும் வரக்கூடிய ஒரு வருடம் பாவங்களுக்கு பரிகாரமாகும்'' என்று கூறினார்கள்.
நூல் ஸஹீஹ் முஸ்லிம் ]


அரஃபா நாளில் தான் நாம் அனைவரும் நோன்பு நோற்கவேண்டும் . அந்த நாளில்தான் ஹாஜிகளுக்கு பெருநாள்!  அரஃபா நாளை விட்டு விட்டு அடுத்த நாளில் நோன்பு நோற்கக்கூடாது. நபிமொழியின் கருத்து.. அரஃபா நாளில்தான்  முஸ்லிம்கள் அனைவரும் நோன்பு பிடிக்கவேண்டும்.

இந்தியாவில்  மற்றும் அண்டை நாடுகளில் [இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ்  ]  பிறை தெரியவில்லை  என்பதற்காக அரஃபா நாளை விட்டு மறுநாள் அர ஃ பா நாள் நோன்பு பிடிப்பார்கள். அடுத்த மறுநாள் ஹஜ்பெருநாள்  கொண்டாடுவார்கள். உலகமே அரஃபா நாளில் நோன்பு நோற்பார்கள், இவர்கள் மட்டும் மறுநாளில் அர ஃபா நோன்பு என்று   நோன்பு பிடிப்பார்கள்.

அல்லாஹ்வின் தூதர் நபிகள் நாயகம் [ஸல்] அவர்கள் கூறிய ஹதீஸின் கருத்து.. அரஃபா நாளில் தான் நோன்பு நோற்கவேண்டும் என்பதின் கருத்து.

           அல்லாஹ்வின் நல்லடியார்களே ! அர ஃபா நாளில் நாம் எல்லோரும் இன்ஷாஅல்லாஹ் நோன்பு பிடிப்போம்! [பிறை 9 ஞாயிற்று கிழமை அன்றுதான் அரஃபா நாள் அப்பொழுதுதான் நாம் நோன்பு நோற்கவேண்டும்!]
அந்த நோன்பை பிடிப்பதினால் நம் பாவங்கள் [கடந்த] சிறிய பாவங்கள் ] வரக்கூடிய ஒரு வருடம் பாவங்களுக்கு பரிகாரமாகும் என்று மேலே கூறப்பட்ட நபிமொழியின் கருத்து!

இன்ஷாஅல்லாஹ் இன்றைய இரவிலிருந்து பிறை 10 வரை அதிகம் அதிகம் நல்ல அமல்கள் செய்யவேண்டும்! பத்து நாளின் சிறப்பு அதை பற்றி ஏற்கனவே  கட்டுரை வெளியாகிவிட்டது! படித்து தெரிந்துக் கொள்ளவும். உங்களில் முடிந்தளவு இன்று இரவுலிருந்து பிறை 9 வரை நோன்பு நோற்க விருப்பம் உள்ளவர்கள் அவர்கள் நோற்கலாம்.. இந்த மாதத்தில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு நல்ல அமல்கள் செய்ய வேண்டும். திலாவதில் குரான் ஓதுவது, திக்ர் செய்வது இன்னும் பல நல்ல அமல்கள் முடிந்தளவு இன்ஷாஅல்லாஹ் செய்ய அல்லாஹ் அருளும், உதவியும் செய்வானாக...

நோன்பை பற்றி விபரமாக விளக்கமாக இன்ஷாஅல்லாஹ் முன்மாதிரி முஸ்லிம்  என்ற தளத்தில் காணலாம்..
அல்லாஹ் மிக்க அறிந்தவன்.           

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!