அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்! எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.��

வியாழன், செப்டம்பர் 29, 2016

எல்லா நேரங்களிலும் மன அமைதியா ?

அல்லாஹ்வின் திருப்பெயரால்...[அவசியம் படியுங்கள் ]
எல்லா நேரங்களிலும் மன  அமைதியா ?

தீனுடைய வாழ்க்கையை பின்பற்றக் கூடியவர்களுக்குக்  கிடைக்கக்கூடிய பாக்கியங்கள்.

1. இவ்வுலகில் , தன்னுடைய வாழ்க்கையில் எத்தகைய பிரச்சனைகள் ஏற்பட்டபோதிலும் தாங்கிக்  கொள்ளும் மனநிலை .

2. மற்றவர்கள் இவர்களை எவ்வளவு இழிவாகவும் மோசமாகவும் பேசியபோதிலும் அதற்காக அவர்கள்மீது கோபப்படாமலிருத்தல்.

3. மிகக்  குறைவான வருமானமாக இருந்தபோதிலும் போதுமாக்கிக் கொள்ளும் மனநிலை.

4. இவர்களுடைய எதிரிகள் கூட இவர்களை கண்டா உடன் பயப்படுத்தல்.

5. நல்லோர்கள் இவர்களை நேசிப்பதுடன் இவர்களின் இரு உலக வாழ்க்கையின் வெற்றிக்காக துஆச் செய்தல்.

6. ஏதாவது சிறிய அல்லது பெரிய இலாபம் கிடைத்தால் அதற்காக அதையளித்த அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தி அவனுடைய பாதையில் அதைச் செலவு செய்தல்.


7. ஏதாவது பெரியளவோ  அல்லது சிரியளவோ  எந்த நஷ்ட மேற்பட்டாலும் அதை பொருந்தி கொள்ளுதல்.

8. இவர்களுக்கு  ஏற்படக்கூடிய சிரமங்களையும் கஷ்டங்களையும் மனிதர்களிடம் சொல்லாமல் அல்லாஹ்விடம் சொல்லிக் காட்டுதல்.

9. இவர்களுக்கு உலகத்தில் வாழ்க்கை வசதிகள் குறைவாக இருந்தபோதிலும் மிக்க மகிழ்ச்சியாக காணப்படுதல்.

10. இவர்களுக்கு ஏற்படக்கூடிய சிரமங்கள் நீண்ட நாட்களுக்கு தொடர்படியாக இல்லாமல் உடனுக்குடன் தீர்ந்து போகுதல்.

11. இவர்கள் செல்வமில்லாத சீமான்களாக வாழ்வதைப்  பார்த்து மற்றவர்கள் ஆச்சிரியப்படுதல் .

12. இவர்களுடைய வாழ்க்கையில் ஏற்படக்  கூடிய பிரச்சனை கள்  வருவதும் தெரியாது போவதும் தெரியாது.

13. மற்றவர்கள் [தீனில்லாதவர்கள்] துன்யாவுடைய கவலையில் மூழ்கி இருப்பதை பார்த்து இவர்கள் ஆச்சிரியப்படுவார்கள்.

14. துன்யாவின் கவலைகள் இவர்களின் உள்ளத்தில் [எப்பொழுதாவது] வந்தாலும் அது அப்பொழுதே மறைந்து விடும்.

15. துன்யாவின் கவலைகள் இருள்மயமானது, ஆனால் மறுமையின் கவலையோ இன்பகரமானது. இவர்களின் உள்ளங்களில் எப்பொழுதும் மறுமையின் கவலைதான் அதிகமாயிருக்கும், அக்கவலையினால் இவர்களின் உள்ளங்களில் ஒளிமயமான [நூர்] பிரகாசமாயிருக்கும்.

16 இவர்களுக்காக மலக்குகள் துஆச் செய்வார்கள்.

17. முஸ்லிம்களும், முஸ்லிம்  அல்லாதவர்களும் , செல்வந்தர்களும் , மற்றும் ஏழைகளும் எல்லா நிலைமைகளிலும்  இவர்களைக் கண்ணியப்படுத்துதல்.

18. சுருங்கக்கூறின் லாபம், நஷ்டம், சுகம், துக்கம், இரவு, பகல், காலை, மாலை எல்லாம் நேரங்களிலும் எல்லா நிலைமைகளிலும்  இவர்களின் உள்ளம் ஒரே நிலையில் மிகவும் அமைதியோடிருக்கும்.

இவர்கள்  மரணிக்கும் சமயம் மலக்குல் மவ்த் [அலை] அவர்களுடன் பல வானவர்கள் வருகை தந்து இவர்களுக்கு முன்னால்  வரிசையாக நின்று கண்ணியமளித்தல்.  மேலும் இவர்களுக்கு சுவன லோகத்தின் அருட்கொடைகளைக் காண்பித்து மகிழ்விக்கப்பட்டு  கண்ணியமான முறையில் லேசான முறையில் ரூஹை கைப்பற்றுதல்.

இவர்களின் ரூஹை வானுலகத்திற்கு கொண்டு செல்லும்போது வானவர்கள் வருக! வருக! எனக்கூறி சுபுச் செய்திகள் சொல்லி வரவேற்றல் .

இவர்களிடம் மண்ணறையில் இரு வானவர்கள் [முன்கர், நகீர்] கேள்விக்  கணக்குகளை இலகுவான முறையில் கேட்டு அங்கும் கண்ணியப்படுத்துதல்.
இவர்களுடைய கப்ருகளை பூஞ்சோலையாக அமைத்துச் சுவனத்தின் விரிப்பையும் அதில் விரித்து புதுமாப்பிளையைப் போன்று தூங்க வைத்தல் .

மறுமை நாள்வரை  இவர்களின் ஆத்மாக்கள் அமைதியுடனும் மகிழ்ச்சியுடனுமிருத்தல்.
மறுமை நாளையில் மஹ்ஷர் மைதானத்திலும் இவர்களுக்கு கண்ணியமளிக்கப்பட்டு, இவர்களில் சிலர் முத்துக்களாலான ஆசனங்களிலும் , சிலர் கஸ்தூரி மேடைகளிலும் அமர்த்தப்படுவர் . இன்னும்  சிலர்  அர்ஷுடைய நிழலிலும் அமர்த்தப்படுவர். மேலும் வலது கையில் பட்டோலைகள் கொடுக்கப்பட்டுக் கேள்விக்  கணக்குகள் இலேசாக்கப்பட்டு சிராத்  பாலத்தின் மின்னல் வேகத்தில் கடக்கச்  செய்து இன்பகரமான சுவனலோகத்தில்  கண்ணியத்துடனும், மரியாதையுடனும் நுழைய செய்து முடிவேயில்லாத இன்பகரமான வாழ்க்கையில் உன்னதமான ஸ்தானத்தில் அமரச்செய்து மகிழ்ச்சிக்  கடலில் ஆழ்த்தப்படுவார்கள். கடைசியாக எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மேலான சந்திப்பையும் அடைதல்.
அல்லாஹ் மிக்க அறிந்தவன்.
அல்லாஹ்வின் நல்லடியார்களே ! உங்களுக்கும் இதுபோன்ற நிலைகள் அமையவேண்டுமா? அப்படியானால் தீனுடைய வாழ்க்கையை மேற்கொள்ளுங்கள்! இன்ஷாஅல்லாஹ் சாந்தியுடன் சுவனம் நுழையமுடியும்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!