அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்! எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.��

வியாழன், செப்டம்பர் 08, 2016

தம் வீட்டில் நுழையும் பொழுது ஸலாம் கூறுவது!

தம் வீட்டில் நுழையும் பொழுது ஸலாம் கூறுவது!
அல்லாஹ்வின் திருப்பெயரால்...

நீங்கள் வீடுகளில் நுழைந்தால் அல்லாஹ்விடமிருந்துள்ள அபிவிருத்திக்குரிய மணமான காணிக்கையாக நீங்கள் உங்களின் மீது ஸலாம் கூறிக்கொள்ளுங்கள்!
அல்குர்ஆன் .. 24..61]

ஸலாம் கூறுவது சுன்னத்து , அதற்கு பதில் கூறுவது கட்டாயம்!
நாம் ஒருவருக்கு ஒரு தடவை ஸலாம் சொன்னால் , அவர் அதற்கு பதில் ஸலாம் கூறுவார். கொஞ்சம் நேரம் கழித்து அதே நபர் திரும்பி வந்து ஸலாம் கூறினால் '' நாம் என்ன சொல்வோம்? ''இவர் இப்பத்தானே  ஸலாம் சொன்னார் மறும்படியும்  ஸலாம் கூறுகிறார் என்று நம் மனதிற்குள் நினைப்போம்!


நபி [ஸல்] அவர்கள் நவின்றதாக ஹஜ்ரத் அபூஹுரைரா [ரலி] அறிவிக்கிறார்கள்..  உங்களில் ஒருவர் தம் சகோதரரைச்  சந்தித்து அவருக்கு ஸலாம் கூறியபின் அவ்விருவருக்கும் மத்தியில் ஒரு மரமோ ஒரு சுவரோ அல்லது ஒரு கல்லோ குறுக்கிட்டு, பின்னர் அவர் அவரை மீண்டும் சந்திப்பாரானால், அப்பொழுது அவர் அவருக்கு [மீண்டும்] ஸலாம் கூறட்டும்.
நூல் .. அபூதாவூத்]
 இந்த ஹதீஸை நன்றாக மனதில் பதிய வைத்துக்கொள்ளுங்கள்!

நபித்தோழர் அனஸ் [ரலி] அறிவிக்கிறார்கள்.. அண்ணல் நபி [ஸல்] அவர்கள் எனக்குக்  கூறினார்கள்.. என் அன்பு மகனே! நீ உன் குடும்பத்தாரிடம் சென்றால், அவர்களுக்கு ஸலாம் கூறுவாயாக! அது உனக்கும் உன் குடும்பத்தாருக்கும் பரகத்தாக  [அபிவிருத்தியாக] இருக்கும்.
நூல்.. திர்மிதி]

நாம் நம் வீட்டுக்குள் நுழைந்தால் , அதற்கான ஒரு அழகிய துஆ இருக்கிறது , பிறகு வீட்டில் இருப்பவர்களுக்கு ஸலாம் கூறிக் கொண்டு உள்ளே நுழையவேண்டும்!  அப்படி வீட்டில் யாரும் இல்லாவிட்டாலும் பரவாயில்லை. ஸலாம் கூறவேண்டும்!

ஹஜ்ரத் அனஸ் [ரலி] அவர்களைப்பற்றி அறிவிக்கப்படுகிறது. அவர்கள் சிறுவர்களுக்கு அருகில் சென்றால், அவர்களுக்கு ஸலாம் கூறுவார்கள். மேலும் நபி [ஸல்] அவர்கள் , இவ்வாறு செய்பவர்களாக இருந்தார்கள் என கூறுவார்கள்.
நூல்கள்.. புகாரி, முஸ்லிம் ]

நாம் பெரியவர்களுக்கே ஸலாம் கூறுவது அரிது! நமக்கு யார் அறிந்தவர்களாக இருக்கிறார்களோ அவர்களுக்கு மட்டும் நாம் ஸலாம் கூறுவோம்! சிறுவறுகளுக்கு ஸலாம் கூறுவதை நாம் ஒரு  பொருட்டாக நினைக்க மாட்டோம்.  அறிந்தவர்களுக்கு அறியாதவர்களுக்கு ஸலாம் கூறுங்கள் என்ற ஒரு ஹதீஸின் கருத்து.

ஸலாம் சொல்லும் பழக்கம் நம் வாழ்க்கையில் கடைபிடித்தால் இன்ஷாஅல்லாஹ் நிச்சயமாக ஒரு மாற்றமும், ஒரு விதமான சந்தோஷமும் வரும்!  முகநூல் வழியாக ஸலாம் கூறுவது பற்றி , அதற்கு பதில் கூறவேண்டுமா என்பதை பற்றி சொல்லவேண்டுமானால் ஒரு சிறிய விஷயத்தை சொல்லி உங்களுக்கு சொல்லி முடிக்கிறேன்..
சிலர் முகநூலில் பிரார்த்தனை துஆ போடுகிறார்கள் '' யா அல்லாஹ்! எங்கள் பாவத்தை மன்னிப்பாயாக! எங்களுக்கு உதவி செய்வாயாக! என்று அப்படி போடுவதினால்  என்ன ஆகப்போகிறது ..? ஆமீன் என்று போடுவதினால் என்ன நடக்க போகிறது!  முகநூல் வழியாக ஒரு விடயத்தை மட்டும் செய்யலாம்.. நன்மையை ஏவி தீமையைத் தடுக்கலாம்..  [ஒருவர் அறிந்த ஹதீஸை ஒரு நல்ல விடயத்தை மற்றவர்களுக்கு ஷேர் செய்யலாம்]  அழைப்பு பணிகள் மூலம் ]
முகநூல் நண்பர்கள் சில விடயத்தை அவசியம் தவிர்க்கவும்.. ஹஜ், உம்ரா இன்னும் பல நல்ல காரியங்களை செய்யும்போது '' அவைகளை முகநூலில் போடக்  கூடாது.  அது விளம்பரமாக ஆகிவிடும். ''ரியா வாக ஆகிவிடும். செய்த நல்ல அமல்கள்  வீணாகிவிடும்! புரிந்து கொண்டால் சரி!

அல்லாஹ் மிக்க அறிந்தவன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!