அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. மேலும் அவர்கள், 'உங்களில் நற்குணமுள்ளவரே உங்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) நூல்: புகாரி 3759 கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்? . எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.

திங்கள், அக்டோபர் 03, 2016

நற்செயல்களை விரைவுபடுத்துவதும் ! நற்செயல்கள் புரிய ஆர்வமூட்டுவதும்!

நற்செயல்களை விரைவுபடுத்துவதும் ! நற்செயல்கள் புரிய ஆர்வமூட்டுவதும்!
அல்லாஹ்வின் திருப்பெயரால்...

அல்லாஹுதஆலா  கூறுகிறான்..

.........[முஃமின்களே!] நன்மைகளுக்கு நீங்கள் விரைந்து செல்வீர்களாக!...
[அல்குர்ஆன்.. 2..148]

[முஃமின்களே!] நீங்கள் உங்கள் இரட்சகனின் மன்னிப்பின் பக்கமும் சுவனத்தின் பக்கமும் விரைவீர்களாக! அதன் [சுவனத்தின்] விசாலமாகிறது, வானங்களும் பூமியுமாகும்  ,,  பயபக்தியாளர்களுக்காக அது தயார் செய்யப்பட்டுள்ளது.
[அல்குர்ஆன்.. 3..133]

திருக்குரானில் ஆரம்ப வசனத்தில் இந்த இறைவேதம்  [முத்தகீன்]  அல்லாஹ்வை பயப்படக்கூடியவர்களுக்கு தான் நேர்வழிகாட்டும் என்று அல்லாஹ் கூறுகிறான்..


சுவனம் பயபக்தியாளர்களுக்காக  தான் தயார் செய்யப்பட்டுள்ளது என்று அல்லாஹ் கூறுகிறான்.  நிச்சயமாக திருக்குரான் இறையச்சமுள்ளவர்களுக்கு தான் வழிகாட்டும்.  ஒரு முஃமினடத்தில்  ஈமான் உறுதியும் இறையச்சமும் இருக்கவேண்டும். அவர் தான் உண்மையான முஃமின் ஆவார்.  சூரா முஃமினுன்  [விசுவாசிகள்]   அந்த சூராவை பாருங்கள். அல்லாஹ் முஃமினை பற்றி , அவனின் பண்புகளை பற்றியும் [ஒரு முஃமின் எப்படி இருப்பார் , அவரின் பண்புகள் என்ன என்று]  அல்லாஹ் அழகாக வர்ணித்துயிருப்பான். முதல் வசனத்தில் ''ஈமான்  கொண்டவர்கள் நிச்சயமாக வெற்றி பெற்று விட்டனர் என்று  கூறி .. பிறகு தொடர்ச்சியாக  முஃமினின்  பண்புகள் பற்றி இருக்கும்.. நாம் ஒவ்வொருவரும் சிந்திக்கவேண்டும் என்பதற்காக  ''நாம் உண்மையாகவே முஃமின்கள் தானா என்று நாமே நம்மை பரிசீலினை செய்வதற்காக , நம்மை நாமே கேள்விக்  கேட்க வேண்டும்.

நபியவர்கள் நவின்றதாக ஹஜ்ரத் அபூஹுரைரா [ரலி] அறிவிக்கிறார்கள்.. இருள் நிறைந்த இரவின் பகுதிகள் போல் [அடுக்கடுக்காக வரும்] குழப்பங்களுக்கு முன்பாக நல்  அமல்களைக் கொண்டு முன்திக் கொள்வீர்களாக! [அந்நேரத்தில்] ஒரு மனிதன் காலையில் முஃமினாக இருப்பான். மாலையில் இறை நிராகரிப்பாளனாக மாறி விடுவான். அல்லது மாலையில் முஃமினாக இருப்பான், காலையில் இறை நிராகரிப்பாளனாக மாறிவிடுவான். உலகின் அற்பமான பொருளுக்காகத் தனது தீனை விற்று விடுவான்.
நூல்.. முஸ்லிம் ]

நாம் ஒவ்வொருவரும் சிந்திக்கவேண்டிய ஒரு அழகான ஹதீஸ்.  உலகத்தில் இருக்கும் அற்பமான பொருள்களுக்காக அல்லது பதவிக்காக  தமது தீனை விற்க கூடிய  நிலைகளை பார்க்கிறோம்!  இன்றைய காலத்தில் சிலருடைய ஈமானின் நிலை '' உள்ளத்தில் துன்யா இருக்கிறது கரத்தில் தீன் இருக்கிறது , துன்யாவுக்கு ஏதாவது ஆபத்து வந்தால் , கரத்தில் இருக்கும் தீனை விட்டு விடுகிறார்.  ஸஹாபாக்கள் , அவர்கள் உள்ளத்தில் தீனை வைத்திருப்பார்கள். கரத்தில் துன்யாவை வைத்திருப்பார்கள். தீனுக்கு ஏதாவது ஆபத்து வந்தால் கரத்தில் இருக்கும் துன்யாவை தூக்கி வீசிவிடுவார்கள்.

எப்பொழுதும் முஃமின்களுக்கு  சோதனைகள் தான்.. ஒரு முஃமின் இந்த உலகத்தில்  நிம்மதியாகவும் , சந்தோஷமாகவும் வாழமுடியாது, இருக்கவும் முடியாது.  அவனின் நிம்மதியும் , ஓய்வும் மண்ணறையில்தான் கிடைக்கும் என்பதை ஒவ்வொரு முஃமின்கள் புரிந்துகொள்ள வேண்டும்!

இறுதியாக ஒரு ஹதீஸை கூறி  நிறைவுசெய்கிறேன்......

அண்ணல் நபி [ஸல்] அவர்கள் நவின்றதாக ஹஜ்ரத் அபூஹுரைரா [ரலி] அறிவிக்கிறார்கள்.. முஃமினான ஆண் , பெண்களுக்கு சோதனை இருந்து கொண்டுதானிருக்கும். அவரது விஷயத்திலும், அவரது பிள்ளைகள், பொருள்கள் விஷயத்திலும் [சோதனை தொடரும்] எது வரையெனில் அவர் தம் இரட்சகனை எந்தத்  தவறும் இல்லாத நிலையில் [பரிசுத்தமாக] சந்திக்கும் வரை.  [சோதனை கஷ்டங்களில் பொறுமை செய்ததின் காரணமாக அல்லாஹ் அவர் பிழைகள் அனைத்தையும் முன்னதாகவே மன்னித்து விடுவான். ஆகவே கியாமத் நாளில் பாவமற்ற பரிசுத்த நிலையில் அவர் தம் ரப்பைச் சந்திப்பார்.]

எப்பொழுது, எப்படி எங்கே, எந்த நேரத்தில் நமக்கு மரணம் வரும் என்று யாருக்கும் தெரியாது.  ஆகையால் அதிகம் அதிகம் நாம் ஒவ்வொருவரும் நற்செயல்களை விரைவுபடுத்த வேண்டும். நற்செயல்கள் புரிய ஆர்வம் மூட்டவேண்டும்!
அல்லாஹ் மிக்க அறிந்தவன்.
அல்லாஹ்வின் நல்லடியார்களே ! நீங்கள் தொடர்ந்து முன்மாதிரி முஸ்லிம்  படித்து வாருங்கள்! மற்றவர்களுக்கும் ஏத்தி வையுங்கள்! அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவான்.     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!