அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்! எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.��

வியாழன், நவம்பர் 03, 2016

நான் தொழுகையாளியாக இருக்கவில்லையே ...!

நான் தொழுகையாளியாக இருக்கவில்லையே ...! என்று [மறுமையில் ] புலம்பு மனிதர்களில் ''நாம் இருக்கக் கூடாது என்பதற்காக ... ஒரு நினைவுவூட்டுதல் .....!

எல்லோரும் தொழுக வேண்டும்மென்றுதான் ஆசைப்படுவார்கள் , ஆனால், அவர்களை தொழவிடாமல் தடுப்பது  எது...? உங்கள் சிந்தனைக்கு விட்டுவிடுகிறேன் ...!!!

நிச்சயமாக தொழுகை, மானக்கேடானதை விட்டும் வெறுக்கப்பட்டதை விட்டும் [தொழுபவரைத் ] தடுக்கும்.
[அல் அன் கபூத் 45]

ஒருவர் தொழுகிறார் என்றால் , அவரை இந்த தொழுகை மானக்கேடானதை விட்டும் வெறுக்கக்கூடிய காரியங்களை விட்டும் தடுக்கவில்லை என்றால் , நிச்சயமாக அவரின் தொழுகை சரியில்லை என்று பொருள். அல்லாஹ் அவரின் தொழுகையை ஏற்றுக்கொள்ளவில்லை என்று எடுத்துக்கொள்ளலாம்.
நிச்சயமாக எவர்கள் (ஓரிறை) நம்பிக்கைக் கொண்டு, நற்செயல்கள் செய்து தொழுகையைக் கடைப்பிடித்து, ஜகாத்தையும் கொடுத்து வருகின்றார்களோ அவர்களுக்கு அவர்களுடைய (நற்) கூலி அவர்களுடைய ரப்பிடத்தில் இருக்கிறது - இன்னும் அவர்களுக்கு எவ்வித பயமும் இல்லை; அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்.
[அல் பகரா 277]


தொழுகையை பற்றி நிறைய நபிமொழிகள் இருக்கிறது.
சொர்க்கத்தின் திறவுகோல் தொழுகை, தொழுகையின் திறவுகோல் உளூ '' என்று நபி [ஸல்] அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் ஜாபிரிப்னு அப்துல்லாஹ்  [ரலி] அறிவிக்கிறார்கள்.
நூல்.. முஸ்னத் , அஹ்மத்]

அண்ணல் நபி [ஸல்] அவர்கள் தொழுகையைப் பற்றி கூறும்போது ..

''என் கண்களின் குளிர்ச்சி  தொழுகையில்   வைக்கப்பட்டுள்ளது என்று நபி [ஸல்] அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அனஸ் [ரலி] அவர்கள் அறிவிக்கிறார்கள் .
நூல் நஸாயீ ]

தொழுகையில்லாமல் நிறைய முஸ்லிம்கள் காலத்தைக் கடத்திக் கொண்டு இருக்கிறார்கள். அதற்கு காரணம் அவர்களின் இதயத்தில் இறையச்சமும் , மறுமையின் நம்பிக்கையும் உறுதியாக இல்லாத காரணத்தினால்தான் என்று கூறலாம்.


மறுமையில் முதல் விசாரணை ''தொழுகையைப் பற்றித்தான் என்று நபிமொழி கூறுகிறது.

கியாமத் நாளில் முதன் முதலாகத் தொழுகையைப் பற்றி விசாரணை செய்யப் படும், தொழுகை சரியாக இருந்தால், மற்ற அமல்களும் சரியாக இருக்கும், தொழுகை சீர் குலைந்து இருந்தால் இதர அமல்களும் சீர் குலைந்து இருக்கும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அப்துல்லாஹிப்னு குர்த் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல்.. தப்ரானீ ]

இன்ஷாஅல்லாஹ் இன்றுமுதல் நான் உறுதியாக இமாம் ஜமாஅத்துடன் ஐந்து வேளை நேரத் தொழுகையை எனக்கு மரணம் வருவரை நிச்சயமாக தொழுவேன் என்று உறுதி எடுத்து விட்டு இந்த கட்டுரையை படித்து முடியுங்கள் !
அல்லாஹ் மிக்க அறிந்தவன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!