அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்! எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.��

செவ்வாய், டிசம்பர் 20, 2016

இசையில் மயங்கும் இளைய சமுதாயம் 📺📻💻[தொடர் 1

அன்பிற்குரிய சகோதர, சகோதரிகளே!இசையில் மயங்கும் இளைய சமுதாயம் 📺📻💻[தொடர் 1
இயந்திரமயமாகி விட்ட மனித வாழ்க்கையில் மக்கள் தமது வேலைகள் அனைத்தையும் முடித்து விட்டு மனம் நிம்மதியடைய வேண்டும் என்பதற்காக டி.வி. பார்ப்பது, இசை கேட்பது, இன்னும் இது போன்ற பல செயல்களில் ஈடுபடுகின்றார்கள். இசை தான் மனதுக்கு அமைதியைத் தந்து, கவலைகளை மறக்கச் செய்யும் என்றும் சிலர் கூறுகின்றனர்.

இசை கேட்கும் போது அது ஒரு பொழுது போக்காகவும், உற்சாகத்தைத் தூண்டுவதாகவும் இருக்கின்றது; எனவே இசை அமைதியளிக்கின்றது; மகிழ்ச்சியைத் தருகின்றது என்று எண்ணுகின்றார்கள். அதனால் தான் தங்களுக்கு ஏதேனும் மன இறுக்கம் ஏற்படும் போது அல்லது சலிப்பு ஏற்படும் போது இசை கேட்க விரும்புகின்றார்கள்.
இசை நம்முடைய உடலுக்கும் உள்ளத்திற்கும் அமைதி, ஓய்வைத் தருகின்றது என்ற எண்ணம் பரவலாக இருந்து வருவதும் இதற்குக் காரணம்.
பெண்களும் கூட வீட்டு வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது வேலையில் சிரமம் தெரியாமல் இருக்க வேண்டும் என்பதற்காக இசையைக் கேட்டுக் கொண்டே வேலை செய்வார்கள். இதில் யாரும் விதிவிலக்கல்ல. மார்க்கம் தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என அனைவருமே இந்த இசையில் மூழ்கியுள்ளனர்.


இந்த இசையைக் கேட்பதால் மனம் நிம்மதியடையுமா? என்றால் நிச்சயம் இல்லை. மாறாக இசையைக் கேட்பதால் நரம்புகள் பாதிப்படைதல், தூக்கமின்மை, அமைதியின்மை ஆகியவை தான் ஏற்படுகின்றன.
இசை கேட்கும் போது மனித உடலில் அட்ரினலின் என்ற ஹார்மோன் அதிகமாகச் சுரக்கின்றது என்பதை சமீபத்தில் ஓர் ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர். அட்ரினலின் என்ற ஹார்மோன் பொதுவாக ஏதாவது மன இறுக்கம் ஏற்படும் போதோ அல்லது சாதாரண நிலைகளிலோ சிறிதளவு தான் உற்பத்தியாகின்றது.

இசை கேட்கும் போது அட்ரினலின் தொடர்ந்து உற்பத்தியாகின்றது. அட்ரினலின் அதிகமாக உற்பத்தியாவதால் மனித உடலில் ஒரு பரபரப்பும், அமைதியின்மை, தூக்கமின்மை போன்றவையும் ஏற்படுகின்றன என்று கண்டறியப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி இதனால் மேலும் பல தீமைகள் ஏற்படுகின்றன.

இசை கேட்பது மனதுக்கு நிம்மதி அளிக்காது. மாறாக அமைதி யின்மையை ஏற்படுத்தும். இறைவனை நினைவு கூர்வது தான் மனதுக்கு அமைதியைத் தரும். பாவமான, மானக்கேடான காரியங்களை விட்டும் தடுக்கும்.
اُتْلُ مَاۤ اُوْحِىَ اِلَيْكَ مِنَ الْكِتٰبِ وَاَقِمِ الصَّلٰوةَ ‌ؕ اِنَّ الصَّلٰوةَ تَنْهٰى عَنِ الْفَحْشَآءِ وَالْمُنْكَرِ‌ؕ وَلَذِكْرُ اللّٰهِ اَكْبَرُ ‌ؕ وَاللّٰهُ يَعْلَمُ مَا تَصْنَعُوْنَ‏
(முஹம்மதே!) வேதத்திலிருந்து உமக்கு அறிவிக்கப்படுவதைக் கூறுவீராக! தொழுகையை நிலை நாட்டுவீராக! தொழுகை வெட்கக்கேடான காரியங்களை விட்டும், தீமையை விட்டும் தடுக்கும். அல்லாஹ்வை நினைப்பதே மிகப் பெரியது. நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் அறிவான்.(29:45)
اَلَّذِيْنَ اٰمَنُوْا وَتَطْمَٮِٕنُّ قُلُوْبُهُمْ بِذِكْرِ اللّٰهِ‌ ؕ اَلَا بِذِكْرِ اللّٰهِ تَطْمَٮِٕنُّ الْقُلُوْبُ ؕ‏
நம்பிக்கை கொண்டோரின் உள்ளங்கள் அல்லாஹ்வின் நினைவால் அமைதியுறுகின்றன. கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் நினைவால் தான் உள்ளங்கள் அமைதியுறுகின்றன.
(13:28)
இறைவனை நினைவு கூர்வதால் தான் உள்ளங்கள் அமைதி பெறுகின்றன என்று அல்லாஹ் கூறுகின்றான். மேலும் நாம் அல்லாஹ்வை நினைவு கூர்ந்தால் அவனும் நம்மை நினைவு கூர்கின்றான்.
فَاذْكُرُوْنِىْٓ اَذْكُرْكُمْ وَاشْکُرُوْا لِىْ وَلَا تَكْفُرُوْنِ
என்னை நினையுங்கள்! நானும் உங்களை நினைக்கிறேன். எனக்கு நன்றி செலுத்துங்கள்! எனக்கு நன்றி மறக்காதீர்கள்!
(2:152)
நாவுக்கு இலேசானது தராசில் கனமானது
இன்று ஆண்களாயினும் பெண்களாயினும் அவர்கள் எந்த நேரமும் வாயில் நுழையாத, இரட்டை அர்த்தங்கள் கொண்ட பாடல்களைத் திரும்பத் திரும்பக் கேட்கின்றார்கள். அந்தப் பாடல்களை எப்படியாவது பாடியே ஆக வேண்டும் என்பதற்காக அவற்றைக் கேட்டு, மனப்பாடம் செய்து பாடிக் கொண்டிருக்கின்றார்கள். இவ்வாறு வாயில் நுழையாத, இரட்டை அர்த்தங்கள் கொண்ட பாடல்களைப் பாடி தீமையைச் சேர்ப்பதை விட மிகவும் சிறந்த இரண்டு வார்த்தைகளைச் சொல்வது நாவுக்கு மிகவும் எளிதானது. மறுமையில் மீகான் எனும் தராசினைக் கனமாக்குவதாகும்.
حَدَّثَنِي أَحْمَدُ بْنُ إِشْكَابٍ ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ عَنْ عُمَارَةَ بْنِ الْقَعْقَاعِ ، عَنْ أَبِي زُرْعَةَ ، عَنْ أَبِي هُرَيْرَةَ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، قَالَ : قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم كَلِمَتَانِ حَبِيبَتَانِ إِلَى الرَّحْمَنِ خَفِيفَتَانِ عَلَى اللِّسَانِ ثَقِيلَتَانِ فِي الْمِيزَانِ سُبْحَانَ اللهِ وَبِحَمْدِهِ سُبْحَانَ اللهِ الْعَظِيمِ
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இரண்டு வாக்கியங்கள் அளவற்ற அருளாளனின் பிரியத்திற்குரியவை; நாவுக்கு எளிதானவை; (நன்மை, தீமை நிறுக்கப்படும்) தராசில் கனமானவை ஆகும். அவை:
1. சுப்ஹானல்லாஹி வபி ஹம்திஹி (அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து துதி செய்கிறேன்)
2. சுப்ஹானல்லாஹில் அழீம் (கண்ணியமிக்க அல்லாஹ்வைத் துதிக்கிறேன்)
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 7563
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ وَغَيْرُ وَاحِدٍ ، قَالُوا : حَدَّثَنَا رَوْحُ بْنُ عُبَادَةَ ، عَنْ حَجَّاجٍ الصَّوَّافِ ، عَنْ أَبِي الزُّبَيْرِ ، عَنْ جَابِرٍ ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، قَالَ : مَنْ قَالَ : سُبْحَانَ اللهِ العَظِيمِ وَبِحَمْدِهِ ، غُرِسَتْ لَهُ نَخْلَةٌ فِي الجَنَّةِ
சுப்ஹானல்லாஹில் அழீம் என்று சொல்லக் கூடியவருக்கு அவர் புகழ்ந்ததன் காரணமாக சுவனத்தில் அவருக்காக ஒரு பேரீச்ச மரம் நடப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்: திர்மிதீ 3464
வார்த்தைகளில் சிறந்தது
4910 – حَدَّثَنَا زُهَيْرُ بْنُ حَرْبٍ حَدَّثَنَا حَبَّانُ بْنُ هِلَالٍ حَدَّثَنَا وُهَيْبٌ حَدَّثَنَا سَعِيدٌ الْجُرَيْرِيُّ عَنْ أَبِي عَبْدِ اللَّهِ الْجِسْرِيِّ عَنْ ابْنِ الصَّامِتِ عَنْ أَبِي ذَرٍّ
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سُئِلَ أَيُّ الْكَلَامِ أَفْضَلُ قَالَ مَا اصْطَفَى اللَّهُ لِمَلَائِكَتِهِ أَوْ لِعِبَادِهِ سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ
நபி (ஸல்) அவர்களிடம், “வார்த்தைகளிலேயே சிறந்தது எது?” என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், “மலக்குமார் களுக்கும், தன்னுடைய அடியார்களுக்கும் “சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி’ என்ற வார்த்தையை அல்லாஹ் தேர்ந்தெடுத்துள்ளான்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூதர் (ரலி)
நூல்: முஸ்லிம் 2731
– حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا يَحْيَى بْنُ أَبِي بُكَيْرٍ عَنْ شُعْبَةَ عَنْ الْجُرَيْرِيِّ عَنْ أَبِي عَبْدِ اللَّهِ الْجِسْرِيِّ مِنْ عَنَزَةَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الصَّامِتِ عَنْ أَبِي ذَرٍّ قَالَ
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَلَا أُخْبِرُكَ بِأَحَبِّ الْكَلَامِ إِلَى اللَّهِ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَخْبِرْنِي بِأَحَبِّ الْكَلَامِ إِلَى اللَّهِ فَقَالَ إِنَّ أَحَبَّ الْكَلَامِ إِلَى اللَّهِ سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ
நபி (ஸல்) அவர்கள் என்னிடம், “அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான வார்த்தையை அறிவிக்கட்டுமா?” என்று கேட்டு விட்டு, “அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமான வார்த்தை, சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூதர் (ரலி)
நூல்: முஸ்லிம் 4911
பாவங்கள் மன்னிக்கப்பட…
நாம் நம்மையும் அறியாமல் எத்தனையோ சிறு சிறு தவறுகளைச் செய்கின்றோம். இன்னும் சில நேரங்களில் அந்தச் சிறு தவறுகளை நாம் தவறு என்று தெரிந்து செய்கின்றோம். ஆனால் அதன் விளைவை நாம் பெரிதாக எண்ணுவதில்லை. மிகவும் சாதாரணமானது என்று நினைக்கிறோம். ஆனால் நம்முடைய பதிவேடு அதையும் விட்டு வைக்காமல் அனைத்தையும் பதிவு செய்து விடும்.
பதிவேடு வைக்கப்படும். அதில் உள்ளவற்றின் காரணமாக குற்றவாளிகள் அச்சமடைந்திருக்கக் காண்பீர்! “இந்த ஏட்டுக்கு என்ன வந்தது? சிறியதையோ, பெரியதையோ ஒன்று விடாமல் பதிவு செய்துள்ளதே!” எனக் கூறுவார்கள். தாங்கள் செய்தவற்றைக் கண் முன்னே காண்பார்கள். உமது இறைவன் எவருக்கும் அநீதி இழைக்க மாட்டான். (18:49)
தூய்மையான எண்ணத்துடன் “சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி’ என்று ஒரு நாளைக்கு நூறு முறை கூறினால் நம்முடைய பாவங்கள் கடலின் நுரையளவு இருந்தாலும் அதை அல்லாஹ் மன்னித்து விடுவான்.
– حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ مَسْلَمَةَ ، عَنْ مَالِكٍ عَنْ سُمَيٍّ ، عَنْ أَبِي صَالِحٍ ، عَنْ أَبِي هُرَيْرَةَ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَالَ : مَنْ قَالَ سُبْحَانَ اللهِ وَبِحَمْدِهِ فِي يَوْمٍ مِئَةَ مَرَّةٍ حُطَّتْ خَطَايَاهُ وَإِنْ كَانَتْ مِثْلَ زَبَدِ الْبَحْر
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி (அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து துதிக்கின்றேன்) என்று யார் ஒரு நாளில் நூறு முறை சொல்வாரோ அவருடைய தவறுகள் அழிக்கப் பட்டு விடுகின்றன. அவை கடலின் நுரை போன்று (அதிகமாக) இருந்தாலும் சரியே!
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 6405
இன்ஷாஅல்லாஹ் தொடர் 2 பார்க்கவும்...[நாம் மறுமைக்காக பிறந்தோம்!]

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!