அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்! எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.��

சனி, பிப்ரவரி 25, 2017

இணை கற்பிக்கும் காரியங்கள் [தொடர் 1]
இறந்தவர்கள் செவியேற்பார்களா?
இறந்தவர்கள் செவியேற்க மாட்டார்கள்

وَمَا يَسْتَوِي الْأَحْيَاءُ وَلَا الْأَمْوَاتُ إِنَّ اللَّهَ يُسْمِعُ مَنْ يَشَاءُ وَمَا أَنْتَ بِمُسْمِعٍ مَنْ فِي الْقُبُورِ(22) سورة فاطر
உயிருடன் உள்ளோரும், இறந்தோரும் சமமாக மாட்டார்கள். தான் நாடியோரை அல்லாஹ் செவியேற்கச் செய்கிறான். மண்ணறைகளில் உள்ளவர்களை நீர் செவியேற்கச் செய்பவராக இல்லை. (அல்குர்ஆன் 35:22)

إِنَّكَ لَا تُسْمِعُ الْمَوْتَى وَلَا تُسْمِعُ الصُّمَّ الدُّعَاءَ إِذَا وَلَّوْا مُدْبِرِينَ(80) سورة النمل
நீர் இறந்தோரைச் செவியேற்கச் செய்ய முடியாது! (அல்குர்ஆன் 27:80)

இறந்தவர்கள் பிரார்த்தனைக்கு பதிலளிப்பார்களா?
பின்வரும் வசனங்கள் இறந்தவர்கள் யாராக இருந்தாலும் செவியேற்க மாட்டார்கள் என்று தெளிவாக எடுத்துரைக்கிறது.

وَالَّذِينَ تَدْعُونَ مِنْ دُونِهِ مَا يَمْلِكُونَ مِنْ قِطْمِيرٍ(13)إِنْ تَدْعُوهُمْ لَا يَسْمَعُوا دُعَاءَكُمْ وَلَوْ سَمِعُوا مَا اسْتَجَابُوا لَكُمْ وَيَوْمَ الْقِيَامَةِ يَكْفُرُونَ بِشِرْكِكُمْ وَلَا يُنَبِّئُكَ مِثْلُ خَبِيرٍ(14) سورة فاطر
            அவனே அல்லாஹ்; உங்கள் இறை வன். அவனுக்கே அதிகாரம்.அவனன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள், அணுவளவும் அதிகாரம் படைத்தவர்களல்லர். நீங்கள் அவர்களை அழைத்தால் உங்கள் அழைப்பை அவர்கள் செவியுற மாட்டார்கள். செவியேற்றார்கள் என்று வைத்துக் கொண்டாலும் உங்களுக்குப் பதில் தர மாட்டார்கள். கியாமத் நாளில் நீங்கள் இணை கற்பித்ததை அவர்கள் மறுத்து விடுவார்கள். நன்கறிந்தவனைப் போல் உமக்கு எவரும் அறிவிக்க முடியாது. (அல்குர்ஆன் 35:13,14)

إِنَّ الَّذِينَ تَدْعُونَ مِنْ دُونِ اللَّهِ عِبَادٌ أَمْثَالُكُمْ فَادْعُوهُمْ فَلْيَسْتَجِيبُوا لَكُمْ إِنْ كُنتُمْ صَادِقِينَ(194) سورة الأعراف
அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களைப் போன்ற அடிமைகளே. நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அவர்களை அழைத்துப் பாருங்கள்! அவர்கள் உங்களுக்குப் பதில் தரட்டும்! (அல்குர்ஆன் 7:194)

கப்ரை கட்டுவது, பூசுவது கூடாது!
கப்ருகளின் மீது கட்டம் கட்டுவது தொடர்பாகவும், சமாதிகளை வணங்குமிடங்களாக எடுத்துக் கொள்வது தொடர்பாகவும் நபியவர்கள் செய்த எச்சரிக்கைகள் என்ன?

நபி(ஸல்) அவர்கள் கப்ருகளை பூசுவதையும் அதன் மீது உட்காருவதையும் அதன் மீது கட்டடம் கட்டப்படுவதையும் தடை செய்தார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ர­)  நூல்: முஸ்­ம் (1610)
அபுல் ஹய்யாஜ் அல் அஸதி அறிவிக்கிறார்கள் : அ­(ர­) அவர்கள், என்னிடம், நபி (ஸல்) அவர்கள் எந்தப் பணிக்காக அனுப்பினார்களோ அதே பணிக்கு உன்னை அனுப்புகிறேன். எந்த சிலையையும் அதனை அழிக்காமலும் உயர்த்தப்பட்ட எந்தக் கப்ரையும் அதனைத் தரைமட்டம் ஆக்காமலும் விட்டு விடாதே! என்று கூறினார்கள்.
நூல் : முஸ்­ம் (1609)
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் :    உங்களுடைய கப்ருகளை தரையோடு மட்டமாக ஆக்குங்கள்.
அறிவிப்பவர் : ஃபழாலா பின் உபைத் (ர­)  நூல் : அஹ்மது : (22834)
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் :    யூத, கிறிஸ்தவர்களை அல்லாஹ் சபித்துவிட்டான். (ஏனென்றால்) தங்களுடைய நபிமார்களின் கப்ருகளை வணங்குமிடமாக எடுத்துக் கொண்டனர்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ர­)  நூல் : புகாரீ (1330)
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் : உங்களுக்கு முன் வாழ்ந்தவர்கள் தங்களுடைய நபிமார்கள் மற்றும் நல்லவர்களின் சமாதிகளை வணங்குமிடங்களாக ஆக்கிக் கொண்டார்கள். நான் அதை விட்டும் உங்களைத் தடுக்கிறேன்.
அறிவிப்பவர் :  ஜுன்துப் (ர­)  நூல் :  முஸ்­ம் (827)
அறிந்து கொள்ளுங்கள், மக்களிலேயே மோசமானவர்கள் தங்களின் நபிமார்களின் கப்ருகளை வணங்குமிடங்களாக ஆக்கிக் கொண்டவர்கள்தான். என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஉபைதா(ர­) நூல் அஹ்மத் (1599)

தாயத்து , தாவீஸ் போன்றவற்றை அணிவது கூடுமா?
நமக்கு எந்த ஒரு துன்பம் ஏற்பட்டாலும் நாம் அல்லாஹ்விடம்தான் உதவி தேட வேண்டும். தாயத்து, தாவீஸ் அணிவதினால் நமக்கு பாதுகாப்பு கிடைக்கும் என்று நம்புவது அலலாஹ்விற்கு இணைகற்பித்தல் ஆகும்.
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் : யார் தாயத்தைத் தொங்கவிடுகின்றாரோ அவர் அல்லாஹ்வுக்கு இணை கற்பித்து விட்டார்.
அறிவிப்பவர் : உக்பா பின் ஆமிர்(ர­)  நூல் : அஹ்மத் (16781)
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் : யார் தாயத்தைத் தொங்கவிடுகின்றாரோ அவருடைய காரியத்தை அல்லாஹ் பூர்த்தியாக்கமாட்டான். யார் சிப்பியை தொங்க விடுகின்றாரோ அல்லாஹ் அவருடைய காரியத்தை நிறைவேற்றமாட்டான்.
அறிவிப்பவர் :  உக்பா பின் ஆமிர்(ர­) நூல் :  அஹ்மத் (16763)

இம்ரான் பின் ஹுஸைன்(ர­) அவர்கள் அறிவிக்கிறார்கள். நபி(ஸல்) அவர்கள் ஒரு மனிதரைக் கண்டார்கள். அவருடைய கையில் ஒரு மஞ்சள் நிற வளையம் இருந்தது. இது என்ன? என்று கேட்டார்கள். அதற்கு அவர் வாஹினா (தொடையில் ஏற்படும் ஒருவித நோய்) ஏற்பட்டதால் (அணிந்துள்ளேன்) என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள் இதை கழற்றி விடு. இது உனக்கு பலஹீனத்தைத்தான் ஏற்படுத்தும். இது உன் மீது இருக்கும் நிலையில் நீ மரணித்து விட்டால் நீ ஒரு போதும் வெற்றி பெறமாட்டாய் என்று கூறினார்கள்.
நூல் : அஹ்மத் (19149)
தாயத்து, தாவீசுகளைக் கட்டுதல், தட்டுகளில் எழுதிக் கரைத்துக் குடித்தல், வீடுகளில் வெள்ளைக்கல்லை தொங்கவிடுவது, சிறிய பாட்டில்களையும் பூசணிக்காய், உருவப்பொம்மைகள் போன்றவற்றை தொங்கவிடுவதும் இணைவைப்புக் காரியங்களாகும். இவற்றைத் தவிர்ந்து கொள்வது மிகவும் அவசியமாகும்.

இறைவனல்லாதவர்களை அவனுக்கு நிகராக வரம்பு மீறி புகழ்வது கூடுமா?
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் : கிறிஸ்தவர்கள், மர்யமுடைய மகன் ஈஸாவை வரம்பு மீறி புகழ்ந்ததைப் போன்று என்னை நீங்கள் வரம்பு மீறிப் புகழாதீர்கள். நான் அல்லாஹ்வுடைய அடியான்தான். அல்லாஹ்வுடைய அடியார் என்றும் அவனுடைய தூதர் என்றும் கூறுங்கள்.
அறிவிப்பவர் : உமர் (ர­)  நூல் : புகாரீ (3445)
            இன்று முஸ்­ம்கள் பரவலாக ஓதக்கூடிய சுப்ஹான மவ்­து, முகைதீன் மவ்­து, புர்தா, சாகுல் ஹமீது மவ்­து போன்ற எந்த மவ்­தாக இருந்தாலும் நபி(ஸல்) அவர்களையும் மற்றவர்களையும் இறைவனுடைய ஆற்றல் அளவிற்கு வரம்பு மீறிப் புகழ்ந்த வரிகள் அதில் நிறைந்துள்ளன.
உதாரணத்திற்கு,

أَنْتَ غَفَّارُ الْخَطَايَا
நீங்கள்தான் எங்கள் பாவங்களை மன்னிக்கக்கூடியவர்.

أَنْتَ سَتَّارُ الْمَسَاوِىْ
எங்களுடைய தீமைகளை மறைக்கக்கூடியவரும் நீங்கள்தான்
இதுபோன்ற இணைவைப்பு வரிகள் மவ்­துகளில் வருகின்றன. இவற்றைச் சாதாரணமாகப் படிப்பது கூட தவறாகும்.

ஜோசியம் பார்த்தல், பால் கிதாப் பார்த்தல், குறிப்பார்த்தல் போன்ற காரியங்களுக்கு மார்க்கத்தில் அனுமதி உண்டா?
நமக்கு நாளை என்ன நடக்கும் என்ற மறைவான விசயங்களை அறிந்தவன் அல்லாஹ் ஒருவன்தான். ஜோசியக்காரர்கள், குறிகாரர்கள் நமக்கு நாளை நடக்கவிருப்பது நல்லதா? கெட்டதா? என்பதை அறிவார்கள் என்று நம்புவது இணைவைத்தலாகும்.
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் : யார் குறிகாரன் அல்லது வருங்காலத்தை கணித்துச் சொல்பவனிடம் சென்று அவன் கூறுவதை உண்மை எனக் கருதினால் அவன் நபி(ஸல்) அவர்கள் மீது இறக்கப்பட்ட (வேதத்தை) நிராகரித்துவிட்டான்.
அறிவிப்பவர் :  அபூஹுரைரா(ர­)
நூல் : அஹ்மத் (9171)
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் : யார் ஜோதிடனிடம் வந்து எதைப் பற்றியாவது கேட்டால் அவனுடைய நாற்பது நாட்கள் தொழுகை ஏற்றுக் கொள்ளப்படாது.
அறிவிப்பாளர் :  ஸஃபிய்யா  நூல் : முஸ்­ம் (4137)
பரவலாக முஸ்­ம்களுக்கு மத்தியில் பால்கிதாப் பார்த்தல் என்ற ஒரு நடைமுறை காணப்படுகிறது. இதுவும் ஜோதிடத்தில் சேர்ந்ததுதான். எனவே, பால்கிதாப் பார்ப்பதும் இணைவைப்புக் காரியமேயாகும்.

இன்ஷாஅல்லாஹ் தொடர்ச்சி பார்க்கலாம்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!