செவ்வாய், ஜூலை 11, 2017

கணவனைத் திருப்திப்படுத்து .......

கணவனைத்  திருப்திப்படுத்து .......

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

தாங்கொணாத துயரத்திலும் தங்கள் கணவருக்கு ஆற்ற வேண்டிய கடமைகளை குறைவின்றி ஆற்றி இறைதிருப்தியைப் பெற்றுக் கொண்டவர்கள் ஸஹாபிப் பெண்மணிகள்.

ஒருமுறை அன்சாரி ஸஹாபி ஹஜ்ரத் அபூதல்ஹா [ரலி] அவர்கள் தம் நோய்வாய்ப்பட்ட பாலகன் அபூ உமைர் என்பவரை வீட்டில் விட்டு வேலை தேடப்போனார்கள். அவர்கள் வெளியே சென்ற பின் இளம் பாலகர் அபூ உமைர் இறந்து விட்டார்.


அது கண்டா அபூ தல்ஹா [ரலி] அவர்களின்  மனைவி உம்மு ஸலீம்  அம்மையார் துயரம் தாங்காது துடியாய் துடித்தார். இச்செய்தியை கணவர் செவியுற்றால் மிகவும் துயரப்படுவார் என்று கருதி அந்த அம்மையார் தம் புத்தி சாதுரியத்தை பயன்படுத்தினார். உடலை குளிப்பாட்டி நறுமணம் பூசி ஓரிடத்தில் துணியால் மூடி மறைத்து வைத்து விட்டு சுவையான உணவு சமைத்து கணவரின் வரவு நோக்கி காத்திருந்தார்.

கணவர் ஹஜ்ரத் அபூதல்ஹா [ரலி] அவர்கள் வந்தார்கள். குழந்தையின் நலன் விசாரித்தார்கள்.

அது கேட்ட அவ்வம்மையார் , குழந்தை நேற்றைவிட நலமாக இருக்கிறது. அதுபற்றி கவலை வேண்டாம் என்று கூறிவிட்டு கணவருக்கு உணவிட்டு உண்ணச் செய்தார்கள். அதுமட்டுமின்றி அன்றிரவும்  தம் கணவருடன் கழித்தார் .

மறுநாள் விடியலில் குளித்துவிட்டு தம் கணவரிடம் அன்போடு  ''ஒருவன் மற்றொருவனுக்கு ஒரு பொருளை இரவலாகக் கொடுத்தான். அந்தப் பொருளை அவனிடமே திருப்பிக் கொடுத்துவிட வேண்டியதுதானே?'' என்று கேட்டார்.

அதற்கு கணவர் ,  ''ஆம்!''  கண்டிப்பாக கொடுத்துவிட வேண்டியதுதான் என்றார். அதன் பின்னர் அவ்வம்மையார், குழந்தையை நமக்கு எவன் கொடுத்தானோ அவனே திரும்பவும் அதனைப் பெற்றுக் கொண்டான்  '' என்று கூறி தங்களுடைய இளம் பாலகன் அபூ உமைரின் இறப்பு பற்றிய செய்தியை எடுத்துரைத்தார்.

பதமான முறையில் அவர் அத்துயரச் செய்தியை எடுத்துரைத்தது  கணவரின் உள்ளத்திற்கு இதமாக இருந்தமையால் அவருக்கு அதிகம் துயரம் ஏற்படவில்லை.

 இவ்வாறு பெண்கள் தங்கள் கணவன்மார்களை மகிழ்விப்பதிலும் திருப்திப்படுத்துவதிலும் முழுமூச்சாக செயல்பட வேண்டும்.

இன்றே நிலைமை தலைகீழாக உள்ளது. கணவன்மார்களுக்கு துன்பங்களையும், தொல்லைகளையும் தருவதே பெரும்பாலான மனைவிமார்களின் வேலையாக இருக்கிறது.  அணுவளவு துயரச்  செய்தியையும் ஆகாயத்திலிருந்து பூமி வரை பெரிதாக்கி ஆண்களை தளர்ச்சியடைச்  செய்து கோழைகளாகவும்  ஆகிவிடுகிறார்கள் இன்றைய பெண்கள் பலர்.

அளவுக்கு அதிகமாக பொருள்களை வாங்கி கணவன்மார்களை கடன் சுமையை சுமத்திவிடுகிறார்கள்.  என்னத்தான் நல்லது செய்தாலும் சில மனைவிமார்களுக்கு  அது குறையாகத்தான் தெரிகிறது. போதும் என்ற மனம் வருவதில்லை.

சம்பாதிப்பது கடினம் அதை செலவழிப்பது எளிது.  கணவன்மார்களின் கஷ்டங்களை புரிந்து கொள்ளாமல் . சில மனைவிமார்கள் வீண்விரயம் செய்கிறார்கள்.

அல்லாஹ் மிக்க அறிந்தவன்..... 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!