அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. மேலும் அவர்கள், 'உங்களில் நற்குணமுள்ளவரே உங்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) நூல்: புகாரி 3759 கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்? . எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.

வெள்ளி, ஜூலை 14, 2017

பிறர் குறைகளை மறைப்பதே அழகிய பண்பாடு...

பிறர் குறைகளை மறைப்பதே அழகிய பண்பாடு...
அல்லாஹ்வின் திருப்பெயரால்...........

பிறரைப் பற்றி நாம் குறை பேசுவதினால் நமக்கு ஏதாவது பலன் உண்டா..? பாவம்தான் உண்டு! அவரைப் பற்றி குறை பேசுவதினால் , அவருக்கு கோபம்தான் வரும் ஒழிய வெறும் எதுவும் நல்லது நடக்கப்போவதில்லை. எப்பொழுதும் நல்லதே எண்ணுவோம் நல்லதே பேசுவோம் நன்மையை பெறுவோம்....

ஒரு மனிதர் காஜியிடம் வந்தார் . தம் மனைவியுடன் வாழ  தமக்கு விருப்பமில்லை எனவும் அதனால் மணவிடுதலை  [தலாக்] செய்யத் தாம் விரும்புவதாகவும் கூறினார்.


''எதற்க்காக மணவிடுதலை  செய்ய விரும்புகிறீர்கள்?'' என்று காஜி வினவ,  ''என் மனைவியின் குறைபாடுகளை வெளியே எடுத்துரைக்க நான் விரும்பவில்லை என்று அவர் பதிலிறுத்தார். அதன் பின்னர் அவர் விரும்பியவாறு மணவிடுதலை  முடிந்தது. இப்பொழுது மற்றொருவர் அவரை அணுகி  ''என்ன காரணத்தால் மனைவியை மணவிடுதலை  செய்தீர்? '' என்று வினவ .அதற்கு அவர்  ''இப்பொழுது அவள் என் மனைவி அல்ல , அன்னியப் பெண் . ஒரு அந்நிய பெண்ணின் குறைபாட்டை வெளியில் எடுத்துரைத்து விளம்பரப்படுத்த நான் விரும்பவில்லை '' என்று பதில் கூறினார்.

இனி அவளின் குறையை வெளியே கூறினால், அதனால் அவளின் வாழ்வு வீணே பாதிக்கப்பட்டுவிடும் என்று அஞ்சி அவர் அவ்விதம் கூறினார். இவ்வாறு புறம் கூறுவதை விட்டுவிட்டு, முழு அளவில் அவர் தம்மைப் பாதுகாத்துக் கொண்டார்.

பிறரைப் பற்றி குறை கூறித்  திரிவது விபச்சாரம் செய்வதைவிட கொடிய குற்றமாகும்.

''ஒருவன் தன்  சகோதரரின் குறைபாட்டை தெரிந்திருந்தும் அதனைப் பிறரிடம் கூறாது மறைப்பானாயின் அவன் குறைப்பாடுகளை அல்லாஹ் பிறர் கண்களிலிருந்து மறைப்பான் என்று அண்ணல் நபி [ஸல்] அவர்கள் நவின்றுள்ளார்கள்..

மாறாக... மற்றவர்களின் குறைகளை கூறித்  திரிவதினால் என்ன ஆகும் என்பது உங்களுக்கும் தெரியும்...

யாராவது உங்களிடம் வந்து  ''யாரைப்பற்றியாவது எதாவது  குறை கூற வந்தால்  ''நீங்கள் இப்படி கூறுங்கள் !   நீங்கள் அவரைப் பற்றி குறை கூறுவதானால் உங்களுக்கு எதாவது  நன்மை உண்டா அல்லது பலன் கிடைக்குமா அல்லது எதாவது  ஆதாயம்தான் இருக்கா..? தயவு செய்து என்னிடம் யாரைப்பற்றியும் குறை சொல்ல வராதீர்கள் என்று கண்டிப்பாக கூறிவிடுங்கள். தயவு செய்து அவருக்கு இடம் கொடுத்து விடாதீர்கள் .. ஷைத்தானுக்கு வழிவகுத்து விடாதீர்கள்!

சத்திய பாதை இஸ்லாம்     ...............

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!