அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. மேலும் அவர்கள், 'உங்களில் நற்குணமுள்ளவரே உங்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) நூல்: புகாரி 3759 கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்? . எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.

செவ்வாய், ஜூலை 04, 2017

உண்ணும் ஒழுக்கங்கள்

உண்ணும் ஒழுக்கங்கள்

ஒருவர் உண்ணத் தொடங்கும்போது அல்லாஹ்வின் பெயரைக் குறிப்பிட்டு தொடங்க வேண்டும். அதாவது, பிஸ்மில்லாஹ் (அல்லாஹ்வின் பெயரால்) என்று கூற வேண்டும். உண்டு முடித்தவுடன் அல்லாஹ்வைப் புகழ்ந்து அவனுக்கு நன்றி செலுத்த வேண்டும். அல்ஹம்துலில்லாஹ் (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று கூற வேண்டும். உண்ணும்போது தமது தட்டில் தமக்கு அருகில் உள்ளதிலிருந்து உண்ண வேண்டும். வலது கையைப் பயன்படுத்த வேண்டும். இடது கை என்பது பொதுவாக அசுத்தங்களைச் சுத்தம் செய்யவே பயன்படுத்தப்படும்.

நபி (ஸல்) அவர்களின் வளர்ப்பு மகனாகியஉமர் இப்னுஅபீசலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் மடியில் வளர்ந்துவந்த சிறுவனாக இருந்தேன். (ஒரு முறை) என் கை உணவுத் தட்டில் (இங்கும் அங்குமாக) அலைந்து கொண்டிருந்தது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், "சிறுவனே! அல்லாஹ்வின் பெயரைச் சொல். உன் வலக்கரத்தால் சாப்பிடு. உன(து கை)க்கு அருகிலிருக்கும் பகுதியிலிருந்து எடுத்துச் சாப்பிடு!'' என்று சொன்னார்கள். அதன் பிறகு இதுவே நான் உண்ணும் முறையாக அமைந்தது.(ஸஹீஹுல் புகாரீ 5376)
 
உணவு எவ்வளவுதான் அதிருப்தியை ஏற்படுத்தினாலும் அதைக் குறை கூறுவது கூடாது.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:நபி (ஸல்) அவர்கள் எந்த உணவையும் ஒரு போதும் குறை கூறியதில்லை. அவர்கள் ஓர் உணவை விரும்பினால் உண்பார்கள்; இல்லையென்றால் விட்டுவிடுவார்கள்.(ஸஹீஹுல் புகாரீ 3563)
 
அபரிமிதமாக உண்ணவோ பருகவோ கூடாது.

அல்லாஹ் கூறுகிறான்:உண்ணுங்கள்; பருகுங்கள்.எனினும், (அவற்றில்) அளவு கடந்துசெலவுசெய்யாதீர்கள்.(அல்குர்ஆன் 7:31)

ஆதமின் மகன் (மனிதன்) மிகவும் கெட்டதொரு பையை நிரப்புகிறானெனில் அது வயிறாகத்தான் இருக்கும். ஆதமின் மகனுக்கு அவனுடைய முதுகை நிமிர்த்த ஒரு சில கவளங்களே போதுமானது. அதிகம் உண்ணத்தான் வேண்டுமெனில் (வயிற்றின்) மூன்றில் ஒரு பகுதியை உணவுக்காகவும், மற்றொரு பகுதியைத் தண்ணீருக்காகவும், இன்னொரு பகுதியைத் தனக்காக (காலியாக)வும் ஆக்கிக்கொள்ளட்டும். (முஸ்னது அஹ்மது 17225, ஸஹீஹ் அத்தர்கீப் வத்தர்ஹீப் 2135)
 
உண்ணும் பாத்திரத்தினுள் மூச்சுவிடவோ ஊதவோ கூடாது.

நபி (ஸல்) அவர்கள் பாத்திரத்தினுள் மூச்சுவிடவோ ஊதவோ கூடாது என்று தடைசெய்ததாக இப்னு அப்பாஸ் (ரலி) கூறுகிறார்கள். (சுனன் அபூதாவூது 3719)
 
கெட்டுவிட்ட உணவையோ பானத்தையோ பிறருக்கு வழங்கக் கூடாது.
 
பிறருடன் சேர்ந்து சாப்பிட வேண்டும். தனியாகத் தாமே சாப்பிட்டுவிடக் கூடாது.

ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, நாங்கள் சாப்பிடுகிறோம். என்றாலும் எங்கள் பசி அடங்காமல் இருக்கிறது என்று கூறினார். அதற்கு நபியவர்கள், நீங்கள் சேர்ந்து சாப்பிடுவீர்களா அல்லது தனியாகவா என்று கேட்டார்கள். அவர், தனியாகத்தான் என்றார். அப்போது நபியவர்கள், ''சேர்ந்து ஒன்றாகச் சாப்பிடுங்கள். அல்லாஹ்வின் பெயர் சொல்லி சாப்பிடுங்கள். உங்கள் உணவில் அருள்வளம் (பரக்கத்) செய்யப்படும்'' என்று கூறினார்கள். (சுனன் அபூதாவூது 743)
 
விருந்துக்குச் செல்லும்போது தம்முடன் வேறு ஒருவரையும் அழைத்துச் செல்ல விரும்பினால், அதற்கு அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டும். அபூஷுஐப் எனும் அன்சாரித் தோழர் ஐந்து நபர்களை விருந்துக்கு அழைத்திருந்தார். அவர்களில் நபி (ஸல்) அவர்களும் ஒருவர். அப்போது நபியவர்களுடன் இன்னொருவரும் வந்தார். நபியவர்கள், ''இந்த மனிதர் எங்களுடன் வந்துவிட்டார். நீங்கள் அனுமதியளித்தால் இவரும் கலந்துகொள்வார். இல்லையெனில் அவர் இவர் திரும்பிச் சென்றுவிடுவார்" என்று கூறினார்கள். அதற்கு விருந்து உபசரிப்பாளர், "இல்லை, அவருக்கு நான் அனுமதி அளிக்கிறேன்" என்றார். (ஸஹீஹுல் புகாரீ 739)
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!