அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்! எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.��

வியாழன், ஆகஸ்ட் 10, 2017

இந்திய சுதந்திர போரில் முஸ்லிம்களின் பங்கு!

இந்திய சுதந்திர போரில் முஸ்லிம்களின் பங்கு!
இந்திய ‬முஸ்லீம்களின்‪ மறைக்கப்பட்ட ‬வீர வரலாறுகள் எண்ணிலடங்கா..!!""

இஸ்லாமிய தியாகிகள் இந்திய சுதந்திரப் போராட்டத்துக்காக தங்களின் உடல் , பொருள், ஆவியை தியாகம் செய்த பல இஸ்லாமியப் பெருமகன்களின் வரலாற்றை கண்டு வருகிறோம்.

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் சிறைக்கு சென்றவர்களிலும் உயிர்களை தியாகம் செய்தவர்களிலும் முஸ்லிம்கள்அவர்களின் மக்கள் தொகையின் விகிதாச்சாரத்தோடு ஒப்பிடும்போது மிக அதிகமாகவே இருந்தார்கள்
என்று பிரபல எழுத்தாளர் குஷ்வந்த் சிங் இல்லஸ்ட்ரேடட் வீக்லி பத்திரிகையில் எழுதி அது 20/12/1975 அன்று வெளிவந்தது.ஆனால் மறு புறத்தில் முஸ்லிம்கள் செய்த தியாகங்களை குறைத்து மதிப்பிடுகிற ஒரு கூட்டம் பொய்களை அள்ளி விட்டுக் கொண்டிருக்கிறது.

முஸ்லிம்களை ஏதோ ஒரு வேண்டாத தலைச்சுமை போல ஆட்சியாளர்களும் அவர்களின் அடிவருடிகளும் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

இன்னும் ஒரு சிலர் இந்த நாட்டை விட்டு அப்புறப்படுத்தவேண்டுமென்றும் அள்ளிவிட்டுக் கொண்டிருக்கொண்டிருக்கிறார்கள்.

அரசியல் சட்டத்துக்கு விரோதமான அவர்களின் இந்தக் கருத்துக்கள், சட்டபூர்வமான நடவடிக்கைகளை அவ்விதம் பேசுவோர் மீது ஏவி விடப்பட்டாலும்,அவை யாவுமே கண் துடைக்கும் காரியங்கள்தான்.

அந்நியனுக்கு அடிமைச் சேவகம் செய்தவர்கள் எல்லாம் இன்று ஆட்சிக் கட்டிலிலும், அதிகார இடங்களிலும் அமர்ந்து கொண்டு சுதந்திரத்திற்கு தங்கள் எதிர்கால சந்ததியினரின் நலன்களை அர்ப்பணித்த சமுதாயத்தை அடக்கியாள்கின்ற
அவலம் ஒருபுறம் ;

😞சுதந்திரத்துக்காக வாளேந்திய சமுதாயம் வாழ்வுரிமை கேட்டு வீதியில் நிற்கும் அவலம் மறுபுறம்.

கிழக்கிந்திய கம்பெனிக்கு அவர்களின் பிரதிநிதிகளாக இருந்த கிஸ்தி வசூ¬லித்து தந்தவர்கள் எல்லாம் , இன்று தியாக வேஷம் போட்டு முஸ்லிம்களின் தியாகத்தின் சூரியனின் கதிர்களை , கரங் கொண்டு மறைத்து விடலாம் என்று நினைக்கலாம், ஆனால் ஆயிரம் கரம் கொண்டு மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை.

இந்திய மண்ணின் கடைசி இஸ்லாமியர் இருக்கும் வரை இந்தியாவின் விடுதலைக்கு இஸ்லாமியர்கள் ஆற்றிய அரும்பணிகள் மறையாது. எவ்வளவு காவிச்சாயம் அடித்தாலும் இந்த தியாகங்களை மறைக்க முடியாது.

இந்த சரித்திர நாயகர்கள் நமது இந்திய சுதந்திர போராட்ட களத்தில் தலையாய கடமையாற்றியவர்கள்:ا

1.ஆங்கிலேயர்களுக்கு எதிராக முதல் புரட்சிக் குரல் கொடுத்தவர்-
நவாப் சிராஜுத் தௌலா
2.மைசூர் புலி ஷஹீத் திப்பு சுல்தான்
3.ஹஜரத் ஷாஹ்வலியுல்லாஹ் முஹத்திஸ் தெஹ்லவி
4.ஹஜரத் ஷாஹ் அப்துல் அஜீஸ் முஹத்திஸ் தெஹ்லவி
5.ஹஜரத் சையத் அஹ்மத் ஷஹீத்
6.ஹஜ்ரத் மவுலானா விலாயத் அலி சாதிக்பூரி
7.அபு ஜஃபர் சிராஜுத்தீன் முஹம்மத் பஹதுர்ஷா ஜஃபர்
8.அல்லாமா ஃபஜ்ல ஹக் கைராபாதி
9.ஷஹ்ஜாதா ஃபைரோஜ் ஷாஹ்
10.மவுல்வி முஹம்மத் பாகர் ஷஹீத்
11.பேகம் ஹஜ்ரத் மஹால்
12.மவுலானா அஹ்மதுல்லாஹ் ஷாஹ்
13.நவாப் கான் பஹாதுர் கான்
14.அஜீஸான் பாய்
15.ஷாஹ் அப்துல் காதிர் லுதியானவி
16.ஹஜ்ரத் ஹாஜி இம்தாதுல்லாஹ் முஹாஜிர மக்கி
17.ஹஜ்ரத் மவுலானா முஹம்மத் காஸிம் நானொத்தவி
18.ஹஜ்ரத் மவுலானா ரஹ்மதுல்லா கைரானவி
19.ஷேகுல் ஹிந்த் ஹஜ்ரத் மவுலான மஹ்மூதுல் ஹஸன்
20.ஹஜ்ரத் மவுலானா உபைதுல்லாஹ் ஸிந்தி
21.ஹஜ்ரத் மவுலானா ரஷீத் அஹ்மத் கங்கோஹி
22.ஹஜ்ரத் மவுலானா அன்வர் ஷாஹ் கஷ்மீரி
23.மவுலானா பர்கதுல்லாஹ் போபாலி
24.ஹஜ்ரத் மவுலானா முஃப்தி கிஃபாயதுல்லாஹ்
25.ஸஹ்பானுல் ஹிந்த் மவுலானா அஹ்மத் ஸயீத் தெஹ்லவி
26.ஹஜ்ரத் மவுலானா சையத் ஹுஸைன் அஹ்மத் மதனி
27.ஸய்யீதுல் அஹ்ரார் மவுலானா முஹம்மத் அலி ஜவ்ஹர்
28.மவுலானா ஹஸரத் மூஹானி
29.மவுலானா ஆரிஃப் ரிஜ்வி
30.மவுலானா அபுல் கலாம் ஆஜாத்
31.ரயீஸுல் அஹ்ரார் மவுலானா ஹபீபுர் ரஹ்மான் லுதியானவி
32.டாக்டர் ஸயீஃபுத்தீன் கிச்லு
33.மஸீஹுல் முல்க் ஹகீம் அஜ்மல்கான்
34.மவுலானா மஜாஹிருல் ஹக்
35.மவுலானா ஜஃபர் அலி கான்
36.அல்லாமா இனாயதுல்லாஹ் கான் மஷ்ரீகி
37.டாக்டர் முக்தார் அஹ்மத் அன்ஸாரி
38.ஜெனரல் ஷாஹ்னவாஜ் கான்
39.ஹஜ்ரத் மவுலானா முஹம்மத் மியான்
40.மவுலானா ஹிஃப்ஜுர் ரஹ்மான் ஸுயுஹாரி
41.ஹஜ்ரத் மவுலானா அப்துல் பாரி ஃபிரங்கிமஹாலி
42.கான் அப்துல் கப்பார் கான்
43.முஃப்தி அதீகுர் ரஹ்மான் உஸ்மானி
44.டாக்டர் சையத் மஹ்மூத்
45.கான் அப்துல் சமத் கான்
46.ரஃபீ அஹ்மத் கித்வாயீ
47.சுஃப் மெஹர் அலி
48.அஷஃபாகுல்லாஹ் கான்
49.பாரிஸ்டர் ஆஸிஃப் அலி
50.ஹஜரத் மவுலானா அதாவுல்லாஹ் ஷாஹ் புகாரி
51.மவுலானா கலீலுர் ரஹ்மான் லுதியானவி
52.அப்துல் கையூம் அன்ஸாரி
53.பாரிஸ்டர் பதுருத்தீன் தையப்ஜி
54.சுரைய்யா தையப்ஜி (நமது இந்திய தேசிய கொடியை வடிவமைத்த பெண்மணி)
இவர்களைப் போல இன்னும் பல லட்சம் முஸ்லீம்கள் நமது நாட்டு சுதந்திரத்திற்காக ரத்தம் சிந்தி போராடியுள்ளனர்.ا

இத் தகவலை  அனைத்திந்திய  அளவிலும், ஏன் உலகலளவிலும் உரத்து தெரிவிக்க வேண்டியது நமது தற்போதைய கட்டாய கடமையாகும்.ر
 சிறிய குறிப்பு...******
வெள்ளைக்காரனிடம் இருந்து நாம் சுதந்திரம் பெற்றோம் ! இப்பொழுது கொள்ளைக்காரனிடம் இருந்து நாம் சுதந்திரம் பெற வேண்டும்! இந்தியாவில்  சுதந்திரம் இல்லாமல் நாம் வாழ்ந்து கொண்டுயிருக்கிறோம் . ஆனால் ஒவ்வொரு வருடமும் சுதந்திரம் நாளை கொண்டாடுகிறோம்! வேடிக்கையாக இருக்கிறது! எது உண்மையான சுதந்திரம் என்பது இன்னும் தெரியவில்லை , மக்களுக்கு புரியவில்லை! 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!