சனி, ஆகஸ்ட் 19, 2017

துஆ இது ஒரு சிறந்த வணக்கம்! [அவசியம் படியுங்கள் நல்ல உள்ளங்களே !]

துஆ இது ஒரு சிறந்த வணக்கம்!  [அவசியம் படியுங்கள் நல்ல உள்ளங்களே !]

[ஓரிறை நம்பிக்கை கொண்டவர்களே ] உங்களுடைய ரப்பை பணிவாகவும் [தாழ்ந்த குரலில் ] மெதுவாகவும் நீங்கள் பிரார்த்தியுங்கள்.
அல்குரான் ]

அச்சத்தோடும் ஆசையோடும் அவனையே நீங்கள் அழையுங்கள்.
[அல்குரான்]

''துஆ வணக்கத்தின் [மூளை] சாரமாகும்'' என்று நபி [ஸல்] அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அனஸ் [ரலி] அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல்- திர்மிதீ ]


நிச்சயமாக அல்லாஹுத்தஆலா மிக அதிகமாக வெட்கமுடையவனாக இருக்கிறான். கேட்காமலேயே அதிகமாத் தருபவன் . மனிதன் அல்லாஹுத்தஆலா முன்னால் கேட்பதற்கு கையேந்தினால் அவன் கைகளை  வெறுமையாகவும் பயனற்றவையாகவும் திருப்பி அனுப்புவதற்கு அல்லாஹுத்தஆலா வெட்கப்படுகிறேன். [ஆகவே நிச்சயம் கொடுத்துவிட வேண்டும் எனத்  தீர்மானிக்கிறான் ] என நபி [ஸல்] அவர்கள் கூறியதை ஹஜ்ரத் ஸல்மான் ஃ பார்ஸீ [ரலி] அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல்-திர்மிதீ ]

''அல்லாஹுத்தஆலா விடத்தில் துஆவை விடக் கண்ணியமான அந்தஸ்துள்ள  அமல் வேறில்லை '' என்று நபி [ஸல்] அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா [ரலி] அவர்கள் அறிவிக்கிறார்கள் .
நூல்-திர்மிதீ ]

துஆவைப் பற்றி இன்னும் ஏராளமான ஹதீஸ்கள் இருக்கின்றன.
துஆவின் சிறப்பை அறியாதவர்கள். துஆ கேட்பது ஒரு வணக்கம் , அந்த வணக்கத்தை எப்படி செய்யணும் என்பது சிலருக்கு தெரியாது. அவர்கள் முகநூலில் வாயிலாக கேட்கிறார்கள் , அதற்க்கு நிறைய பேர்கள் ஆமீன் என்று போடுகிறார்கள். இதனால் என்ன பலன் கிடைக்கப்போகிறது. இப்படி செய்வதினால் அல்லாஹ் ஏற்றுக் கொள்வானா ? என்பதையெல்லாம் சிந்திப்பதில்லை. துஆ எப்படி கேட்கவேண்டும் என்பதை நபிகள் நாயகம் [ஸல்] அவர்கள் கற்று கொடுத்துயிருக்கிறார்கள் . முறையாகவும் ,உள்ளச்சத்துடனும் , பணிவாக கேட்கவேண்டும். இப்படி முகநூலில் கேட்கமுடியுமா ?  துஆ என்பது ஒரு வணக்கம் அந்த வணக்கத்தை எப்படி முகநூலில் செய்யமுடியும்? இதை உலமாக்களிடம் கேட்டுப்பாருங்கள் .அவர்கள் உங்களுக்கு பதில் கூறுவார்கள்.

யாரவது உங்களிடம் ''எனக்கா அல்லாஹ்விடம் துஆ கேளுங்கள் என்று கூறினால்,  இன்ஷாஅல்லாஹ் என்று வெறுமணமே கூறி அப்படியே விட்டுவிடாதீர்கள். ஒருமுறையாவது அவருக்காக கேளுங்கள். நீங்கள் அவருக்காக என்ன கேட்கிறீர்களோ, அதையே திருப்பி அல்லாஹ் உங்களுக்கு தருவான்.

ஜாபர் பாக்கவி எழுதிய ஒரு கட்டுரை .. இது நான் எழுதியது அல்ல.

செல்பியும் செல்போனும் பேஸ்புக்கும் வந்ததில இருந்து இந்த வருசம் வரை நம்ம சமுதாயம் உம்ரா வித் செல்பி, ஹஜ் வித் செல்பின்னு ஹரம் ஷரீபில் நின்னு கஃபா பின்னணில செல்பி நன்மைகளை (?) வாரி குவிச்சிட்டு இருந்தது.

இஹ்ராம் கட்டுனதில இருந்து, கால் டாக்சில ஏறுனது முதல் ஏரோப்ளேன்ல ஏறி உட்கார்றதுன்னு ஒரே அப்டேட் அலப்பறைதான் போங்க.

இப்ப முத்திப் போச்சோ இல்ல முன்னேறிப் போச்சோ தெரியல,

இந்த வருசம் செல்பி இப்தார் ஆரம்பிச்சுட்டாங்க.

பள்ளிவாசலோ, பக்கத்துவீடோ, தனது வீடோ எங்க நோம்பு திறந்தாலும் போட்டோ தான்.

அவங்க நோம்பு திறக்க யாராவது ஸ்பான்சர் பண்ணியிருந்தாலோ, அல்லது  பள்ளி வாசல்ல  பக்கத்துல யாராவது இருந்தாலோ,  ஆறு அம்பதுக்கு போட்டோ அப்லோடு ஆகியிருக்கும்.

கூடவே, கூட இருந்த இன்னாருக்கு இன்னத செய் அல்லாஹ்னு துஆவும்.

அருமை சமுதாயமே! ஆண்டவன் பேஸ்புக்ல அக்கவுண்ட் வச்சி, அப்பப்ப ஓபன் பண்ணி பாத்து, அதுல வர்ர துஆக்களை அக்செப்ட் பண்றான்னு நெனச்சீங்களா?

அப்டீல்லாம் இல்லைங்க;  நோம்பு துறக்குற நேரத்துல கைல மொபைலை நோண்டாம, கையேந்தி வேண்டுங்க அவன்கிட்ட.

அந்த நேரத்து துஆவை அவன் கபூலாக்குவான்.

அவனுக்காக நோம்பு வச்சு, நாடி நரம்பெல்லாம் தளர்ந்திருக்கையில் கேட்கும் துஆவை அவன் மறுப்பானா?

அதை விட்டுட்டு, அஞ்சு பைசாக்கு உபயேகமில்லாத லைக்குக்கு ஆசப்பட்டு, மறுமை லைபை இழந்திடாதீங்க.

ஆமாங்க. லைக்கு என்ன செய்யும்? மீசானில் நன்மையின் தட்டை கனக்கச் செய்யுமா?

அர்ஷில் நிழல் தருமா?

ஹவ்ளுல் கவ்சரில் ஒருவாய் தண்ணி தருமா?

ஆனால் இப்தார் நேரத்தினதும் இத்யாதி நேரத்தினதும் பிரார்தனைகள் இதையெல்லாம் பெற்றுத்தரும் இன்ஷா அல்லாஹ்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!