அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்! எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.��

ஞாயிறு, ஆகஸ்ட் 20, 2017

கவலையிலிருந்து விடுபட ஒரு பிரார்த்தனை ...

கவலையிலிருந்து விடுபட ஒரு பிரார்த்தனை ...

அந்த இளைஞனின் முகத்தில் அளவுக்கு மீறிய சோகம். துள்ளித்திரிய  வேண்டிய வயதில் , பட்டாம் பூச்சியாய் பாடித் திரிந்து மகிழ வேண்டிய பருவத்தில் இதென்ன துயரம்?  இளமையின் வசீகரத்தால் ஒளிரவேண்டிய அழகு முகத்தில் ஏன் கவலைக் கோடுகள்?

பக்கத்து வீட்டுப் பெரியவருக்கு மனம் தாளவில்லை . அந்த இளைஞனை அன்புடன்  அழைத்தார்  .   ''தம்பி , ஏன் ஒருமாதிரியாக இருக்கிறாய்? இளமைக்குரிய  துள்ளலோ , உற்சாகமோ உன்னிடத்தில் காணப்படவில்லையே  ! ஏதேனும் கவலைகளா ?
பெரியவரின் அன்பான மொழி கேட்ட மறுவினாடியே அந்த இளைஞன் அழுது விடுவான் போலிருந்தது , அவனுடைய கைகளில் முகத்தைப் புதைத்துக்கொண்டு விம்பினான். சற்றுநேரம் கழித்து அவனே பேசத் தொடங்கினான்.


''ஐயா ! , எனக்கு தந்தை இல்லை, நான் சிறுவனாக இருந்தபோதே அவர் மரணம் அடைந்துவிட்டார். நான்தான் மூத்தவன் . குடும்பப் பொறுப்புகள் முழுதும் ஏன் தோழில் ...! என் வாப்பா வாங்கிய கடனே ஏராளமாய் இருக்கிறது . எனக்குச் சரியான வேலை வாய்ப்பு இல்லை. நான் எப்படிபை ஐயா மகிழ்ச்சியாக இருக்கமுடியும் ?

பெரியவர் புன்னகை பூத்தார்..
''தம்பி, துயரங்கள் எல்லாருடைய வாழ்க்கையிலும் உண்டு. அவற்றை கண்டு சோர்ந்துவிடக்கூடாது . ஐவேளை தொழும் வழக்கம் உனக்கு உண்டா?

''ஆமாம் ஐயா ! தொழுகையை மட்டும் விடவே மாட்டேன்.
''நல்லது, உன்னைப் போலவே துயரத்தில் இருந்த ஒரு நபித்தோழருக்கு அண்ணல் நபி [ஸல்] அவர்கள் கற்றுத் தந்த ஒரு பிரார்த்தனையை நான் உனக்குச் சொல்லித் தரட்டுமா ..?
சொல்லுங்கள் ஐயா ..!
'' இறைவனே ! துக்கத்திலிருந்து , கவலையிலிருந்து என்னைப் பாதுகாப்பாயாக . ஆதரவற்ற நிலையிலிருந்தும் சோம்பலிருந்தும் , கஞ்சத்தனத்திலிருந்தும் என்னை பாதுகாப்பாயாக . கடன் சுமையிலிருந்தும் பிறர் என் மீது ஆதிக்கம் செலுத்துவதிலிருந்தும் என்னைப் பாதுகாப்பாயாக !

இந்த பிரார்த்தனையை ஓதினால் பலன் கிடைக்குமா? ஐயா "  ''நிச்சயமாக இன்ஷாஅல்லாஹ் ...!
காலையிலும் , மாலையிலும் தொழுகைக்கு பிறகு இதை விடாமல் ஓதிக் கொண்டிரு , நபிகளார் சொன்னபடி இதை ஓதி வந்த நபித்தோழர் கொஞ்ச நாள்களிலேயே துயரங்களில் இருந்தும் கடன் தொல்லைகளிலிருந்து விடுபட்டதாக அவரே சொல்லியுள்ளார் .
இதை மட்டும் ஓதினால் போதுமா?  நன்றாக கேட்டாய். இறைவன் மீது பாரத்தைப் போட்டு நீ செய்ய வேண்டிய முயற்சிகள்  அனைத்தையும் செய்ய வேண்டும். கூடவே இந்த பிரார்த்தனையும் ஓதிவரவேண்டும் . நிச்சயமாக இன்ஷாஅல்லாஹ் நல்ல பலன் விளையும் இது அனுபவபூர்வ உண்மை!

''நன்றி ஐயா! என்று கூறியபடியே  இளைஞன் பெரியவரிடம் விடைபெற்றுக் கொண்டிருக்கும்போது அவனுடைய தம்பி ஓடிவந்தான் . ''அண்ணா அண்ணா ! நீ இண்டர்வியூக்கு  போயிருந்த கம்பெனியில் உனக்கு வேலை கிடைத்து விட்டது. இதோ கடிதம் வந்திருக்கு.

பெரியவர் புன்னகையுடன் அவனைப் பார்த்தார் . அந்த இளைஞனின் கண்களிருந்து ஆனந்தக் கண்ணீர் . அவனுடைய இதயம் இறைவனுக்கு நன்றி சொல்லியது.

நபிகளாரின் அந்தப் பிரார்த்தனையை நாமும் ஓதிவருவமே !!!
நன்றி.. சமரசம்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!