அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. மேலும் அவர்கள், 'உங்களில் நற்குணமுள்ளவரே உங்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) நூல்: புகாரி 3759 கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்? . எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.

செவ்வாய், செப்டம்பர் 19, 2017

இசை தடை ஏன்?

இசை கேட்டால் மனம்அமைதி பெறும்  போது இஸ்லாத்தில் இசை தடுக்கபட்டிருப்பது ஏன் ?

இசையை பொறுத்தவரையில் அது மனிதனை மயக்கி தன்னிலை மறக்கச் செய்கிறது ! அதனால் தான் அதைக் கேட்கும் மனிதன் தன்னை மறந்து ஆடுவதைப் பார்க்கிறோம் ! ஆடாவிட்டால் கூட கைகளை கால்களை ஆட்டி, கண்களை மூடி  அந்த இசையோடு ஒன்றி விடுவதை பார்க்கிறோம் ! தன்னை மறக்கும் நிலை என்பது போதைக்கு ஒப்பானதாகும் ! இப்படி தன்னை மறப்பது  என்பது இஸ்லாத்தில் கிடையாது !


இறைவழிபாடான தொழுகையில் கூட தன்னை மறந்து விடும் நிலை இருக்கக் கூடாது என்பதற்காகத்தான் தொழுகை  பல நிலைகளைக் கொண்டதாகவும், அதில் எண்ணிக்கை அடிப்படையிலான பல இறைத்துதிகளைக் கொண்டாகவும் இருப்பதைக் காணலாம் !

மேலும் சிலர் அதில் மன அமைதி கிடைப்பதாக எண்ணுகின்றனர் ! அது கூட மதுவில் கிடைக்கும்      தற்காலிக மன அமைதி போன்றதுதான் !  இசையால் ஒரு மனிதனுக்கு அமைதி கிடைத்திருக்கும் என்றால் ஸ்டீவன்சன், மைகேல் ஜாக்சன் போன்றோருக்கு கிடைத்திருக்க வேண்டும் ! ஆனால் "இறை நினைவால் தான் இதயங்கள் அமைதியுறும்" எனும் இறை வசனத்தினபடி  அவர்கள் அமைதியைத் தேடி இஸ்லாத்துக்கு வந்தார்கள்!

தமிழகத்தை எடுத்துக் கொள்ளுங்கள் ! இசையினால் ஒருவருக்கு அமைதி ஏற்படுமெனில் அது 800 படங்களுக்கு மேல் இசையமைத்த இளையராஜாவின் மகன் யுவனுக்கு கிடைத்திருக்க  வேண்டும் ! அவர், அவரது தந்தை, சகோதரன் சகோதரி, சித்தப்பா என ஒரு இசைக் குடும்பத்திலே பிறந்து புகழின் உச்சத்தில் இருப்பவருக்கு    அந்த இசையால் அமைதி கிடைக்கவில்லை !  திருமண வாழ்வில் ஏற்பட்ட தோல்விகள், தாயின் மரணம் என அமைதி இன்றி வாழ்ந்த எனக்கு இஸ்லாம் அமைதியைத் தந்தது என்று இஸ்லாத்தை ஏற்ற செய்தியை பார்க்கிறோம்!

ஸ்டீவன்சன் தன்னுடையை பணம் புகழைத் தூக்கி எறிந்து விட்டு  யூசுப் இஸ்லாம் எனும் பெயரில் புகழ் பெற்ற இஸ்லாமிய அழைப்பாளராக இருந்து வருகிறார்!   ஆனால் இன்றும் கூட  விளங்காமல்  யுவன்சங்கர்  தொழில் முறையில்    இசையமைத்து  கொண்டிருக்கிறார் ! ஆனால் அமைதிக்காக அல்ல! ஆகையால் இசையால் அமைதி கிடைக்கும் என்பது ஒரு  பொய்யான பிம்பமாகும்!

இசை தடைக்கு இன்னும் பல காரணங்கள் இருக்கலாம் ! படைத்த இறைவன்தான்  அறிந்தவன்! அவன் கூறுகிறான் !

நீங்கள் விரும்பும் ஒன்றில் அனேக தீமை இருக்கும் ! நீங்கள் வெறுக்கும் ஒன்றில் அனேக நன்மை இருக்கும் !  இறைவனாகிய நானே அறிந்தவன் !  நீங்கள்   அறிய மாட்டர்கள்!  [திருக்குர்ஆன்][3]

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!