திங்கள், ஆகஸ்ட் 27, 2018

இளைஞர்களை ஈர்க்கும் இஸ்லாம்!

இளைஞர்களை ஈர்க்கும் இஸ்லாம்!

சமூகத்தில் மிக முக்கிய பிரிவினர்தாம் இளைஞர்கள். அந்த இளைஞர்களின் கரங்களில்தான் ஒரு நாட்டின், ஒரு சமுதாயத்தின் எதிர்காலமும், பாதுகாப்பும் அடங்கியிருக்கின்றன. ஒரு நல்ல சமூகத்தின் அடிப்படை அம்சம் என்பதே இளைஞர்கள்தாம்.

இளைஞர்களின் ஆற்றல், அறிவு, நேரம் போன்றவை ஆக்கபூர்வமான பாதையில் செலவழிக்கப்பட்டு அவர்களும், அவர்கள் மூலம் சமூகமும் பலனடைய வேண்டும் என்பதுதான் இஸ்லாம் காட்டித் தந்த பாதை.


நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இளைஞர்களிடம் காட்டிய அணுகுமுறையும், அவர்களிடம் பழகிய விதமும் ஆச்சரியத்தை அளிக்கிறது. ஆற்றல் மிக்க இளைஞர்களை அண்ணலார் சமூகத்தின் ஒரு முக்கிய அம்சமாக மாற்றிக் காட்டினார்கள். அவர்களை ஆக்கபூர்வமாக பயன்படுத்தினார்கள். அவர்களின் துடிக்கும் இள ரத்தத்தை சமூக நலன்களுக்கு பயன்படுத்தினார்கள்.

இஸ்லாமிய வரலாற்றில் ஒளிர்ந்து மின்னியவர்கள் பலர். அவர்களில் அதிகமானோர் இளைஞர்களாக இருந்தார்கள் என்பது இன்பமளிக்கிறது. அலீ இப்னு அபூதாலிப், ஜஅஃபர் இப்னு அபூதாலிப், உஸாமா பின் ஸைத், முஸ்அப் இப்னு உமைர், பர்ரா இப்னு ஆஜிப், ஸைத் இப்னு தாபித், அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ், அப்துல்லாஹ் இப்னு உமர், அம்ர் இப்னு அல் ஆஸ் போன்ற பிரபல நபித்தோழர்கள் அனைவரும் இளைஞர்களாக இருக்கும்பொழுது இஸ்லாத்தின் உயர்வுக்காக உழைத்தவர்கள்.

திருக்குர்ஆனும் இளைஞர்களின் பங்களிப்பை சிலாகித்துச் சொல்கிறது. குகைத் தோழர்கள் சம்பவத்தில் அவர்களை இளைஞர்கள் என்று சொல்கிறது. அண்ணலார் தம் இஸ்லாமியப் பிரச்சாரத்தைத் துவக்கிய ஆரம்ப காலகட்டங்களில் அவர்களுக்குப் பெரிதும் உறுதுணையாக இருந்த அபூபக்கர் (ரலி) அவர்களுக்கு இஸ்லாம் தழுவும்பொழுது வயது 37. அதன் பின்னர் உமர் (ரலி) அவர்கள் இஸ்லாம் தழுவும்பொழுது அவர்களுக்கு வயது 33. இப்படி இளமைப் பருவத்தினரின் உதவியுடன்தான் இஸ்லாம் வளர்ந்தது.

வானொலி. தொலைக்காட்சி, அலைபேசி, இணையதளம் (வாட்ஸ்அப், முகநூல்) என நவீன தொடர்பு சாதனங்களின் பட்டியல் நீள்கிறது. இவை மூலம் காதல், கத்தரிக்காய் என்று இளைஞர்கள் தங்கள் நேரங்களை வீணாகக் கழிக்கின்றனர்.

“அல்லாஹ்வின் நிழலைத் தவிர வேறு எந்த நிழலும் இல்லாத (கியாமத்) நாளில் அல்லாஹ் தனது நிழலில் ஏழு பேருக்கு நிழல் வழங்குவான்” என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்களே அதில் ஒரு பிரிவினர் அல்லாஹ்வின் வணக்கத்தில் வளர்ந்த இளைஞர்கள்.

மாஷா அல்லாஹ் இன்று அமெரிக்காவில் பெருவாரியான இளைஞர்கள் இஸ்லாத்தின் பக்கம் ஈர்க்கப்பட்டு வருகின்றனர்.

அவர்கள் இஸ்லாத்தில் தான் மன அமைதி உள்ளதாகவும்,வாழக்கையை எவ்வாறு வாழ வேண்டும் என்பதை இஸ்லாம் தான் முழுமையாக கூறுகிறது என்பதையும் கூறுகிறார்கள் .

நாகரிகத்தின் உச்சம் தோட்ட அமெரிக்காவில் இஸ்லாம் வேகமாக பரவி வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.....

இதற்கு சான்று பகர்க்கும் முகமாக சில முக்கியமான நபர்கள், பத்தரிக்கைகள் கூறும் கூற்றை இங்கு பார்ப்போம்.

இன்று அமெரிக்காவில் மிக வேகமாகப் பரவும் மதமாக இஸ்லாம் இருக்கின்றது, இது நம்முடைய பல்வேறு மக்களின் வாழ்க்கையில் வழிகாட்டியாகவும் நிலைப்பாட்டுக்கும் காரணமாக அமைந்துள்ளது. (அமெரிக்க அதிபர் கிளின்டனின் மனைவி ஹில்லாரி கிளின்டன், லாஸ் ஏஞ்சலஸ் டைம் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டி, மே 31,1996. பக்.3)

இன்று உலகில் அதிவேகமாக வளர்ந்து கொண்டிருக்கின்ற குழுவாக முஸ்லிம்கள் இருக்கின்றார்கள்.(மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலக்க குறிப்பு, USA Today பத்திரிக்கைக் குறிப்பு, பிப்ரவரி 17,1989 பக் 4A)

இஸ்லாம் அதிவேகமாக வளர்ந்து கொண்டிருக்கின்ற மதமாக இருக்கின்றது. (ஜெரால்டின் பாம், நியூஸ் டே பத்திரிக்கையின் மதம் பற்றிய எழுத்தாளர், மார்ச் 07, 1989 பக். 4).

இன்று அமெரிக்காவில் மிக வேகமாகப் பரவும் மதமாக இஸ்லாம் இருக்கின்றது. (ஆரி டு. கோல்டுமேன், நியூயார்க் டைம்ஸ் பிப்ரவரி 21,1989 பக்1 ).

மார்சியா. கே.ஹெர்மான்சென் சிகாகோவில் உள்ள லயோலா பல்கலைக்கழகத்தின் சமயத்துறை பேராசிரியர். அவர் இப்புதிய நூற்றாண்டுத் துவக்கத்தின் பல்வேறு வழிகளில் இளைஞர்கள் இஸ்லாத்தை அறிந்து கொள்கின்றனர் அது தங்கள் வாழ்வில் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தி மனதை அமைதிபடுத்தி வைக்கிறது என்று கூறுகிறார்கள் என்று கூறுகிறார்.

ஹோடா எல்-ஷர்காவி என்ற பெண்மனி கேம்பிரிட்ஜ் பள்ளிவாசலில் புதிய முஸ்லிம் பெண்களுக்கு உதவி செய்ய வகுப்புக்கள் நடத்துகிறார். இப்படி பல புதிய முஸ்லிம் பெண்கள் எல்லாம் கற்றறிந்து கல்விமான்களாக விளங்குகின்றனர். அவர்கள் சமய சகிப்புத்தன்மை கொண்ட பல்கலைகழக வளாகத்துடன் தங்களை இணைத்துக் கொண்டிருக்கின்றனர்.

லோரா கோவன் ஹார்வார்டு கல்லூரியின் ஜூனியர் கல்லூரி மாணவி. அவரின் வயது 20. அவரின் சக மாணவர் ஒருவர் அவருக்கு இஸ்லாத்தை அறிமுகப்படுத்தினார். பின்னர் தனது இஸ்லாமிய அறிவை இன்டர்நெட் மற்றும் கல்லூரி வகுப்பறை இவைகளில் வளர்த்துக் கொண்டார். சில மாதங்களுக்கு முன் ஷஹாதத் சொல்லி இஸ்லாத்தை ஏற்றார். இஸ்லாத்தைப் பற்றி நான் கண்டது, கேட்டது அனைத்தும் என் அறிவுக்குப் பொருத்தமாக இருக்கிறது. நான் தொழுகையை நிறைவேற்றிய ஒவ்வொரு வேளையிலும் என் தோளிலிருந்து பெரும் சுமை கீழிறக்கப்பட்டதாக உணர்கிறேன். அது வர்ணிக்க முடியாத உணர்வு. அந்த நேரத்தில் நான் தனிமையில் விடப்பட்டதாக உணர்கிறேன் என்கிறார் நெகிழ்வுடன்.

2015 களுக்கு முன்னாள் அங்கு 15 மதரஸாகள் இருந்து நிலையில் மாஷா அல்லாஹ் இன்று 200 க்கும் மேற்பட்ட மதரஸாக்கள் அமைந்துள்ளன.

நாகரிகத்தின் உச்சாணிக் கொம்பில் இருப்பதாக சொல்லப்படும் அமெரிக்காவில் இஸ்லாம் இவவாறெல்லாம் வேகமாக பெண்களை கவர்ந்துள்ளது. இவ்வாறு இஸ்லாம் அசுரபலத்தில் வளர்ந்து கொண்டுருக்கையில் சில விசமிகள் பொருக்க முடியாமல் சில தவறான ஆக்கங்களை நிறுவியும், அவதூறான செய்திகளை பரப்பியும் வருகிறார்கள், நாங்கள் ஒரு உண்மையை உங்களுக்கு சொல்லிக்கொள்ள விரும்பிகிறோம் அது இஸ்லாம் மட்டுமே உண்மையான மார்க்கம்,

நாம் படைத்தவர்களில் ஒரு கூட்டத்தார் இருக்கின்றார்கள். அவர்கள் சத்திய வழியைக் காட்டுகிறார்கள் அதைக் கொண்டு நீதியும் செலுத்துகிறார்கள். (அல்குர்ஆன் 7:181)

ஆதாரபூர்வமான ததகவல்களுக்கு விடியோவை பார்க்கவும்

Source

https://youtu.be/CTIlA80Kd5Y

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!