அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. மேலும் அவர்கள், 'உங்களில் நற்குணமுள்ளவரே உங்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) நூல்: புகாரி 3759 கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்? . எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.

ஞாயிறு, பிப்ரவரி 10, 2019

கல்வி என்பது முஸ்லிமின் கட்டாயக் கடமையாகும்.

கல்வி என்பது முஸ்லிமின் கட்டாயக் கடமையாகும். கல்வியின் மூலமே அறிவு மேலோங்கும் எனபதை முஸ்லிம் உறுதி கொள்ளவேண்டும். உலகிலுள்ள அல்லாஹ்வின் அருட்கொடைகளை அறிந்துகொள்ள கல்வியைப் பயன்படுத்திக் கொள்வது கடமையாகும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ''கல்வியைத் தேடுவது ஒவ்வொரு முஸ்லிமுக்கு கட்டாயக் கடமையாகும். (ஸுனன் இப்னு மாஜா )

கல்வி இல்லாத காரணத்தினால்தான் பெரும்பாலும் முஸ்லிம்கள் மார்க்கத்தை விட்டுவிட்டு , மார்க்கத்தில் இல்லாத சொல்லாத காரியத்தில் ஈடுபடுகிறார்கள்.

கல்வி மற்றும் ஞானத்தின் மூலம்தான் மனிதன் தனது அறிவை சீர்படுத்திக்கொள்ள முடியும் என்பதால் கல்வி கற்றுக்கொள்வது கட்டாயக் கடமையாகும். இறுதி மூச்சுவரை கல்வியைத் தேடவேண்டும்.


கல்வியைத் தேடுவதில் முஸ்லிம் ஆர்வம்கொள்ள போதுமான காரணம் . அல்லாஹ் அறிஞர்களின் அந்தஸ்தை உயர்த்தி, இறை அச்சத்தை அவர்களுக்கே  சொந்தமாக்கி உள்ளான். இச்சிறப்புகளை ஏனைய மனிதர்களைவிட அறிஞர்களுக்கே வழங்கியுள்ளான் என்பதாகும்.

நிச்சயமாக அல்லாஹ்வுடைய அடியார்களில் அவனுக்குப் பயப்படுவதெல்லாம் (அறிவுடைய) கல்விமான்கள்தாம் . (அல்குரான் 35 :28 )

பிரகாசமான சிந்தனை உள்ளவர்கள் மட்டுமே உரிய முறையில் அல்லாஹ்வை அஞ்ச முடியும்.

(நபியே!) நீர் கேளும்! அறிந்தோரும் அறியாதோரும் சமமாவார்களா ? (இந்த குரானைக் கொண்டு) நல்லுபதேசம் பெறுவோ எல்லோரும் (கல்வி) அறிவுடையோரே. (அல்குரான் 39 : 9 )

மார்க்கக்கல்வியை மறந்து , உலக கல்வியை முக்கியத்துவம் கொடுக்கும் பெற்றோர்களே !  சிந்திக்கமாட்டீர்களா ! உங்கள் பிள்ளைகள் உங்களுக்கு பிறகு உங்களுக்காக துஆச் செய்யும் பிள்ளைகளாக ஆகுவதை நீங்கள் விரும்பவில்லையா ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!