அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. மேலும் அவர்கள், 'உங்களில் நற்குணமுள்ளவரே உங்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) நூல்: புகாரி 3759 கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்? . எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.

சனி, பிப்ரவரி 01, 2020

மலடி

மலடி ....பெண்களுக்கு பெண்களே வைத்த பெயர் மலடி ...                                                                                                                                                     திருமணம் முடித்த மறு வாரம் முதல் "ஸ்பெஷல் இல்லையா விஷேசம் இல்லையா?" என்ற மொக்கை கேள்விகளை காதில் கேட்டு, கேட்டு வெறுத்து போய் நான்கு மாதங்கள் கடந்தும் எந்த அறிகுறியும் என்னில் காணப்படவில்லை.

போதாக் குறைக்கு, சும்மா இருந்த மாமியாரின் வாலிலும் வேலை வெட்டி இல்லாமல் கதை அளந்து திரியும் சிலர் நெருப்பு கொடுத்து விட்டு செல்ல, அவரின் நச்சரிப்புகளும் காதைக் குடையத் தொடங்கியது.

சரியாக நான்காவது மாதம் நடுப்பகுதியில், என் கணவனின் சகோதரி இரண்டாம் பிள்ளைக்கு கருத்தரிக்க, வீட்டில் என் நிலமை தலைகீழாக மாறியது.


என் மைத்துனியுடன் சேர்ந்து கொண்டு
"ம்ம்ம் எல்லாருக்கும் காலம் வருது, செல ஆக்கலுக்கு எப்ப நல்லது நடக்குமோ" அப்பிடி இப்பிடி என்று வருவோர் போவோரிடம் குத்திக் கதைப்பதும்,

அவரை ஒரு வேலை செய்ய விடாமல் அவரின் ஆடைகள், அவரின் பிள்ளைகள் ஆடைகள் என்று அனைத்தையும் என்னை கழுவ சொல்வதும், நொடிக்கு நொடி,

"பிள்ள வயித்துக்காரி அதை செய்ய கூடாது, பிள்ள வயித்துக்காரி இதை செய்யக் கூடாது "
என்று என்னிடம் கூறி வேலை வாங்குவதும், என்று நாற்கள் நகர்ந்தது.

ஆனாலும், இது எதையும் பொருட்படுத்தாமல், என் மைத்துனியை ஒரு சகோதரி என்ற பார்வையில் பொறுமையாக கவனித்து கொண்டேன்.

அவரும் அதனை மிக நன்றாக பாவித்துக் கொண்டு என்னிடம் எவ்வளவு வேலை வாங்க முடியுமோ அவ்வளவுக்கு
(ஒரு வேலைக்காரி லெவலுக்கு ) வேலைகளை வாங்கிக் கொண்டார்.

ஒரு கட்டத்தில்,
என் மனதுக்கு, உடலுக்கும் சிறிது ஓய்வு தேவைபடுவதை உணர்ந்த நான், ஒரு வாரம் என் வீட்டில் இருந்து விட்டு வந்தால் நல்லம் என்ற என் எண்ணத்தை கணவனிடம் கூற, அவர் அதனை தன் உம்மாவிடம் போய் கூற,

"வயித்துல ஒரு புளு பூச்சி இல்லாத #மலடிக்கு என்ன அவசரம், அவளை இங்கு இருந்து வேலைகள செய்ய சொல், அக்கம் பக்கத்து பொம்புலகள் எந்த நாளும் விசேசம் இல்லையா இல்லையா என்று கேட்டு மானத்தை வாங்கி தள்ளுரால்கள்.
கடைக்கு கூட போக வெட்கமாக இருக்கு" அப்படி இப்படி என்று என் காதுகளில் விழும்படி ஆர்ப்பரிக்க,

அவருடன் சேர்ந்து என் மைத்துனியும்
"ஓ மாமி மட்டும் கஷ்ட்டப்படுரா, பாவமே, மூத்தத மொண்ட சூரி அனுப்பனும், நான் ரெஸ்ட் எடுக்கனும் புள்ள கெடக்கும் வர அவ இங்க இருக்கட்டும்" என்று கட்டளை போட,

சூடு சொரனை இல்லாமல் அதற்கு மண்டையை ஆட்டிக் கொண்டு வந்து என் முன்னால் நின்றார் என் கணவன், அனைத்தையும் கேட்டுக் கொண்டும் பொறுமையாக ,
"எனக்கு ஒரு மூன்று நாள் இருந்து விட்டு வந்தால் போதும் இண்டக்கு எல்லா வேலையையும் முடித்துட்டு போய் வருவோமா?"
என கணவனிடம் கேட்க,

என் மாமியும் மைத்துனியும் சேர்ந்து எல்லை மீறிய வார்த்தைகள் பிரயோகித்து அதிகாரம் காட்டி என்னை மட்டுப்படுத்த, எதனையும் கண்டு கொள்ளாமல் சொறனை அற்று இருந்த கணவனை நோக்கி" நான் இப்பொழுதே வீடு போய் ஆக வேண்டும்" என்று பொறுமை மீறிக் கூற,

வாக்குவாதங்கள் அதிகரித்து என் கணவனும், மாமியாரும் என் கன்னத்தில் அறைய, என் வீட்டுக்கு நான் தகவல் சொல்லி அவர்கள் வந்து அது ஒரு பூகம்பமே வெடிக்க,

இல்லாத பொல்லாத அனைத்தையும் கூறி #மலடி என்ற பட்டத்தையும் நடுவில் சேர்த்துக் கொடுத்து, ஒரு சிறு சண்டை விடயத்தை எப்படி எப்படி எல்லாம் ஊத முடியுமோ, அப்படி எல்லாம் அனைத்து பக்கங்களில் இருந்தும் ஊதி பெரிதாக்க, இரு பக்க கௌரவ சிக்கல்களுக்குள் சிக்கி சுமார் 8 மாதத்தில் #விவகாரத்தில் என் வாழ்க்கை வந்து முடிந்தது.

என் முன்னால் கணவன் நான் விவாகரத்து பெற்று நான்காம் மாதம் அவர் வீட்டுக்கு அருகில் இருந்த ஒரு பணக்காரியை மறுமணம் செய்து கொண்டார்.

பிள்ளை கிடைக்காமல் இருப்போரை வீடு வீடாக சென்று கதை கேட்டுத் திரியும் வேலை வெட்டி இல்லாதவர்களே!

குத்துக் கதைகள் கதைத்தும், மாமியார், மைத்துனையை தூண்டி விட்டு சண்டைகளை மூட்டி, கதை கேட்கும் ஊர் பலாய் கப்பல்களே!

வீட்டுக்கு வந்தவளை அடக்கி ஒடுக்கி வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் வாழும் மைத்தினிகளே

தன் மகன் ஆண் சிங்கம் என்று நினைத்துக் கொண்டு ஆட்டம் போடும் மாமியார்களே!

அடுத்தவன் கதை கேட்கவே பிறந்ததை போல் துளாவித் திரியும் சகோதரி களே!

ஒன்றை புரிந்து கொள்ளுங்கள்.

₹ திருமணம் செய்து கொடுப்பது தான் பெற்றோரின், பொறுப்பு தாரிகளின் கடமையே இல்லாமல், அவர்கள் பிள்ளைகள் பெற்றுக் கொள்ளும் விடயத்தில் தலை இடும் உரிமை எவருக்கும் கிடையாது.

₹ ஒருவர் திருமணம் முடித்த கையோடு " ஸ்பெஷல் இல்லையா? விஷேசம் இல்லியா? " என்று உங்களுக்கு சம்பந்தமே இல்லாத அடுத்தவர் #அந்தரங்க வாழ்க்கையில் தலை போட போகாதீர்கள்.

₹ திருமணம் முடித்த கையோடு பிள்ளையை சுமக்க வேண்டும் என்ற எந்த நியதியும் கிடையாது.

# ஓப்பன் (Open) ஆகவே சொல்வது என்றால்,

₹ அவர்கள் இளம் ஜோடி இருக்கட்டும், அல்லது காலம் தாமதித்து கூட முடித்து இருக்கட்டும், உங்களை போல் கல்யாணம் கட்டி அடுத்த மாதமே பிள்ளையை சுமக்காது, கொஞ்சம் #எஞ்சாய் பன்னி விட்டு பிள்ளையை பெற்றுக் கொள்ள திட்டம் போட்டு கூட இருக்கலாம்,

₹ சில சமயம் அவர்களது தொழில் ரீதியாக/ பொருளாதார ரீதியாக எதேனும் காரணத்திற்காக / திட்டத்திற்காக தாமதம் செய்யலாம்.

# அல்லது எதேனும் குறைபாடுகளுக்காக இரகசியமாக மருத்துவம் செய்து கொண்டிருக்கலாம், ( வாயைப் பிளந்து கதை கேட்டு விட்டு வீடு வீடாக " அப்பிடியாமே, இப்பிடியாமே " என கதை வித்துத் திரியும் எவரிடமும் அவர்கள் அவற்றை கூற வேண்டிய அவசியமே கிடையாது )

₹ "இன்னும் இல்லையா? இன்னும் இல்லியா? என்று கேட்டுத் திரிபவர்களுக்கு," ஆம்,இல்லை" என பதில் கூற கேள்வி கேட்பவர்கள் வைத்தியரும் கிடையாது அப்படித் தானே.

₹ ஏதேனும் தாமதம் வந்தால், உதவி செய்யும் நோக்கம் இருந்தால் அவர்களுக்கு நெருக்கமானவர்கள்/ கேட்கக்கூடியவர்கள் கேட்கக்கூடிய தகுதி உடையவர்கள், புத்தியுள்ள. அனுபவசாளிகள் இரகசியமாக, மனம் புண்படாமல் கேட்கலாம்,

₹ அதற்கும் விருப்பம் இருந்தால் மாத்திரம் அவர்கள் பதில் சொல்லிக் கொள்வார்கள், வற்புறுத்தி கேட்கும் உரிமை எவருக்கும் கிடையாது,

₹அல்லது எதேனும் சிக்கல் இருந்தால் அவர்கள் முன் வந்து சொல்வார்கள், அப்படி சொல்லும் போது அதனை மனிதாபிமானத்துடன் கேட்பதும், மறைக்க வேண்டியதை மறைக்கவும் தெரிந்த நாகரீக மனிதர்களாக வாழக் கற்றுக் கொள்ளுங்கள்.

₹ கர்ப்பம் ஆகாது போனால், பெண்ணை மட்டும் கேட்பது,
அவளை மாத்திரம் குத்திக் காட்டி பேசுவது போன்ற ஈனச் செயலை செய்ய வேண்டாம்.

.₹ பெண்களுக்கு மாத்திரம் அல்ல, பல சமயம் ஆண்களுக்கும் குறை இருக்கலாம், என்பதை தயவு செய்து புத்தி யோசனையோடு விளங்கிக் கொள்ளவும்.

₹ இதை அனைத்தையும் தாண்டி எது நடந்தாலும் நாங்கள் ஒற்றுமையாக வாழுவோம் என்ற நல் எண்ணத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் குடும்பங்களுக்குள் கல் எறிந்து சிதைத்துப் போடாதீர்கள்.

₹ இது போன்ற சந்தர்ப்பங்களில்,
ஒருவரை ஒருவர் பலி சுமத்திக் கொண்டு திரியாமலும், ஆண் என்ற திமிரில் பெண்ணை மாத்திரம் குறி வைக்காமலும் இருவரும் மருத்துவரை நாடி உரிய மருத்துவத்தை செய்வதோடு, பிரார்த்தனைகள் செய்யும் போது அல்லாஹ்வின் நாட்டப்படி நடப்பது நடக்கும்.

₹ அடுத்தவர் குறையை தேடுவதிலும்,அதை கதைத்து திரிவதிலும் காலத்தை நாசம் செய்யாமல், மனித நேயத்துடன் வாழப் பழகிடுவோம்.

விவாகரத்து பெற்று 6ஆவது மாதம், இந்த #மலடிக்கும்,
தனது மனைவியால் கை விடப்பட்ட ஒருவருடன் திருமணம் ஆகி, 2 மாதத்தில் அல்லாஹ்வின் அருளால் கர்ப்பம் அடைந்தது பிள்ளையும் கிடைத்து விட்டது.

பொய் பழி சுமத்தி, என்னை விவாகரத்து செய்த அவர்களது #மகனின் வாழ்க்கை இன்னும் குழந்தை இன்றி கேள்விக் குறியாகவே சென்று கொண்டிருப்பதை காணும் போது ,
அந்தப் பெண்ணை நினைத்து என் கண்களில் கண்ணீர் வராமல் போனதில்லை.

பிள்ளை பிறக்கவில்லை என்பதற்காக ஒரு பெண்ணை விவாகரத்து செய்பவனும்,செய்ய தூண்டுபவர்களும் மனிதர்களாகவே பார்க்கப் பட வேண்டியவர்கால்ய்கிடையது.

ஒரு.பெண் இந்த குறைபாட்டுகு உள்ளானால் அவள் கல்யாணம் செய்யும்.போது பிள்ளைகள் கனவோடு தான் வருவாள். அவள் பிள்ளை பிறக்குமா பிறக்காதா என்று ஆராய்ச்சி செய்து கொண்டு வருவதில்லை என்பதையும் புரிந்து விளங்கிய மனித நேயத்தோடு வாழ்ந்திடுவோம். வாழ்வோரை வாழ் விடுங்கள்.

copy, paste பன்னப்படாத இஸ்லாமிய, சமூக விழிப்புணர்வு ஆக்கங்களை அனைவருக்கும் பகிர்ந்து நன்மைகள் அடைந்திட இன்றே எமது இந்த பேஜ் இனை Like செய்து எம் ஆக்கங்களை்,Share செய்யவும்.

https://www.facebook.com/TheLifeofaperfectmuslim

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!