அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. மேலும் அவர்கள், 'உங்களில் நற்குணமுள்ளவரே உங்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) நூல்: புகாரி 3759 கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்? . எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.

சனி, அக்டோபர் 02, 2021

அழிவை நோக்கி செல்லும் சமூகம்

 





*எம் சமூகம் இந்த உலகை ஆளும் காலையில் ஏழு மணிக்கு மதரஸா சென்ற சமுதாயம் இன்று பள்ளி வாகனத்திற்காக காத்து நிற்கிறது. ஆம் .குர் ஆன் ஓதத் தெரியாத ஒரு சமுகம் உருவாகிக் கொண்டிருக்கிறது.😞*



*மாலையில் வீட்டில் ஓதிய எமது சமூகம் இன்று ட்யூசன் சென்று கொண்டிருக்கிறது. ஆம் .குர் ஆன் ஓதத் தெரியாத ஒரு சமுகம் உருவாகிக் கொண்டிருக்கிறது.😞*




*பள்ளிக்கூடம் விட்டதும் நம் சமூகம் –இன்று தெரு முனைகளில் பலர் சூழ அரட்டையில்... ஆம் .இஸ்லாம் தெரியாத ஒரு சமுகம் உருவாகிக் கொண்டிருக்கிறது.😞*



*பருவம் வரா சிறுவனிடம் இன்று பல பாலியல் படங்கள் அத்தா ஆசையாய் வாங்கிக் கொடுத்த ஆன்ட்ராய்டு. போனில்.. ஆம் .இறை. தெரியாத ஒரு சமுகம் உருவாகிக் கொண்டிருக்கிறது.😞*



*அத்தா அயல்நாட்டில்.. அம்மா டிவி நாடகத்தில்.. பிள்ளை தெரு முனைகளில்.. ஆம் .மார்க்கம் தெரியாத ஒரு சமுகம் உருவாகிக் கொண்டிருக்கிறது.😞*



*கைப்பந்து, கால்பந்து என மும்முரமாய் எம் சமூகம் தவறில்லை - பள்ளிக்கு அழைத்தால் மட்டும் நேரமில்லை என்ற பதில்.... ஆம் .தொழத் தெரியாத ஒரு சமுகம் உருவாகிக் கொண்டிருக்கிறது.😞*



*மகனைத் திருத்த முடியா தந்தை... மனைவியை கண்டிக்க இயலா கணவன்- கண்ட்ரோல் இல்லா குடும்பம். ஆம் .ஒழுக்கம் இல்லாத ஒரு சமுகம் உருவாகிக் கொண்டிருக்கிறது.😞*



*தன் கெத்தை காட்ட வேகம் ஓடும் மோட்டார் பைக்.. மங்கையர் பார்க்க தலையில் கரையான் தின்றது போன்ற முடி.. ஆம்.கஷ்டம் தெரியாத ஒரு சமுகம் உருவாகிக் கொண்டிருக்கிறது.😞*




*🤐சப்தமில்லாமல் ஒரு சமூகம் வீணாய் போய்க் கொண்டிருக்கிறது... பெற்றோர்களாகிய நம்மால் உருவாகிக் கொண்டிருக்கிறது... ஆம். நம்மால் ஒரு சமுகம் வீணாகப் போய்க் கொண்டிருக்கிறது.😞*



காலம் கடக்கும் முன்...விழித்துக் கொள்வோம்..

நம் சமூகத்தை காத்துக் கொள்வோம்..


எம் சமூகம் சரியாய் வளர

பெரிதாய் ஒன்றும் செய்ய வேண்டாம்...

பள்ளிவாசலோடு மட்டும் தொடர்பை ஏற்படுத்துங்கள்.

ஆம். பள்ளிவாசலோடு மட்டும் தொடர்பை ஏற்படுத்துங்கள்.


பாங்கு சொன்னவுடன் பள்ளிக்கு வரச் சொல்லுங்கள்.

எம் சமூகம் இந்த உலகை ஆளும்..

இன்ஷா அல்லாஹ்..🤲🏻



இப்படிக்கு.✒️

*🌹🌹 இமாம் 🌹🌹*




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!