அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. மேலும் அவர்கள், 'உங்களில் நற்குணமுள்ளவரே உங்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) நூல்: புகாரி 3759 கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்? . எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.
கணவனைத் திருப்திப்படுத்து ....... லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கணவனைத் திருப்திப்படுத்து ....... லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், மார்ச் 05, 2020

சொர்கத்தில் துணைகள்(ஒரு அருமையான கட்டுரை )


இவ்வுலக வாழ்கையில் நேர்வழியில் நடக்கும் தம்பதிகள் மறுவுலகிலும் சொர்கத்தில் தம்பதிகளாக வாழ்வார்கள் என்பது குர்ஆனிலும் ஹதீஸிலும் வந்துள்ள கருத்தாகும்.

இதில் கிளப்பப்படும் ஐயங்களையும் தெளிவான விளக்கங்களையும் காண்போம்.

ஐயம் 1:ஆண்களுக்கும் பெண்களுக்கும் நற்கூலி உண்டு என்று திருக்குர்ஆனில் கூறப்படுகிறது. உதாரணத்திற்கு திருக்குர்ஆனின் 33:35 வசனத்தில் பல வித நன்மைகள் செய்யும் ஆண்கள், பெண்கள் என்று கூறிவிட்டு அவர்களனைவருக்கும் மன்னிப்பையும் மாபெரும் கூலியையும் அல்லாஹ் தயார் செய்து வைத்துள்ளான் என்று கூறப்படுகிறது. இதன்படி சொர்கத்தில் கொடுக்கப்படும் பரிசுகள் ஒவ்வொன்றும் ஆண்களுக்கு கொடுக்கப்படுவது போல் பெண்களுக்கும் கொடுக்கப்படும். அந்த வகையில் ஆண்களுக்கு ஹுருன் ஈன் எனும் சொர்கத்துப் பெண்கள் மனைவியராக்கப்படுவது போல் பெண்களுக்கும் அதுபோன்ற சொர்க்க ஆண்கள் கணவர்களாக்கப்படும் என்று புரிய முடிகிறது இது ஒர் ஐயம்.

சனி, ஆகஸ்ட் 12, 2017

கணவனை மதிக்காத இன்றைய மனைவிகள்!

கணவனை மதிக்காத இன்றைய மனைவிகள்!
அன்பு சகோதரிகளே!
இன்று நம்மிடத்திலே உள்ள கெட்ட செயற்பாடுகளில் ஒன்றுதான் கட்டின புரிசனையே அவர் இல்லாத நேரத்தில் கேவலமா பேசுறது.
சில கணவன்மார் சமூகத்திலே தாழ்ந்த நிலையில் இருந்தாலும் மனைவியை பொறுத்த வரை அவர்தான் நமக்கு எல்லாமே என்பதை நாம் மறந்து விடக்கூடாது.
நம்ம பெண்களில் பல பேர் கணவன்மாரை கணக்கெடுப்பதே இல்லை. சில வீடுகளிலே கணவன் அடிமையை போல இருபான். பொண்டாட்டியின் சத்தம்தான் புருசனின் சத்தத்தை விட அதிகாமா இருக்கும். சில பொண்டாட்டிமார் புரிசண்ட முகத்திலே ஏசுகின்றார்கள் “ஒன்ன சும்மாவா கலியாணம் முடிச்ச. 8, 10 ஏக்கர் காணியும் இந்தப்பெரிய வீடும் போதாக்குறைக்கு கடையையும் தந்துதான் கலியாணம் முடிச்ச. இது ஒண்டும் இல்லன்டா நீ முடிச்சிருப்பியா” ண்டு கொஞ்சம் கூட பயம் இல்லாமல் கணவனின் முன்னாலே கேட்கின்றார்கள்.

செவ்வாய், ஜூலை 11, 2017

கணவனைத் திருப்திப்படுத்து .......

கணவனைத்  திருப்திப்படுத்து .......

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

தாங்கொணாத துயரத்திலும் தங்கள் கணவருக்கு ஆற்ற வேண்டிய கடமைகளை குறைவின்றி ஆற்றி இறைதிருப்தியைப் பெற்றுக் கொண்டவர்கள் ஸஹாபிப் பெண்மணிகள்.

ஒருமுறை அன்சாரி ஸஹாபி ஹஜ்ரத் அபூதல்ஹா [ரலி] அவர்கள் தம் நோய்வாய்ப்பட்ட பாலகன் அபூ உமைர் என்பவரை வீட்டில் விட்டு வேலை தேடப்போனார்கள். அவர்கள் வெளியே சென்ற பின் இளம் பாலகர் அபூ உமைர் இறந்து விட்டார்.