ஞாயிறு, ஜூலை 30, 2017

மறுமையின் மஹ்ஷரில் நிழல் பெறும் ஏழு தரப்பினர் .

மறுமையின் மஹ்ஷரில் நிழல் பெறும் ஏழு தரப்பினர் .

உஷ்ணத்தின் உச்சக்கட்டம் கிழக்கு ஊரெல்லாம் பேசப்படுகிறது. காலை ஆறு மணிக்கே வியர்வை சொட்ட ஆரம்பிக்கிறது. நேரம் செல்லச் செல்ல நிலைமை மிக மோசம்தான். மின் விசிறியும் இல்லையெனில் மனிதனின் நடவடிக்கை அனைத்தும் ஸ்தம்பிதமாகிவிடுமளவுக்கு சூரியன் அதன் வெப்பத்தைக் கக்கிக் கொண்டிருக்கிறது.

சூட்டின் தாக்கம் பலரையும் பல விதமான வியாதிக்குள் சிக்கவைக்கிறது. சிறுவர் முதல் பெரியவர் வரை வியர்வைக்கூரு வீறு நடை போடுகிறது. சிலரைக் காய்ச்சலும், வாந்திபேதியும் வாட்டிக்கொண்டிருக்கிறது. சிறுவர்களை சின்னமுத்து எனும் அம்மை போன்ற நோய் அதட்டிக்கொண்டிருக்கிறது. சிலருக்குக் காலையில் 10 நிமிடங்கள் கூட தொடர்ச்சியாக நின்று கொண்டிருந்தால் மயக்கம் ஏற்படுகின்ற அளவுக்கு தாக்குப்பிடிக்க முடியவில்லை.

சனி, ஜூலை 29, 2017

தொழுகையை விட்டவன்



தொழுகையை விட்டவன்  

    புகழனைத்தும் வல்ல அல்லாஹ்வுக்கே! அவனைப் பயந்தவர்களுக்கே இறுதி முடிவு நல்லதாக அமையட்டுமாக, ஸலவாத்தும் ஸலாமும் மனிதருள் மாணிக்கமான முஹம்மது நபி (ஸல்)அவர்கள் மீதும் அவர்களின் வழியைப் பின்பற்றியோர் மீதும் உண்டாகட்டுமாக.

    தொழுகையை விட்ட என் சகோதரனே ! தொழுகையை உரிய நேரத்தில் நிறைவேற்றுவதில் அலட்சியமாக இருக்கும் என் நன்பனே! நீ உன் மனதில் என்னதான் நினைத்துக் கொண்டிருக்கின்றாய். உன்னைப் படைத்து உணவளித்து இரட்சித்துக் கொண்டிருக்கும் உன் றப்புக்கு ஸுஜூது செய்யும் அவசியம் கூட இல்லாதளவுக்கு – அவனது அருளே தேவையில்லாத அளவுக்கு நீ உன் விடயத்தில் தன்னிறைவு கண்டு விட்டாயோ! உனக்கு ஏற்படும் இன்னல்களில் துன்பங்களில் அவனது உதவியே தேவைப்படாதளவுக்கு நீ அவ்வளவு ஆற்றல் பெற்று விட்டாயோ!.

திங்கள், ஜூலை 24, 2017

மணமகள், மணமகனை தேர்வு செய்யும் முறைகள்!



மணமகள், மணமகனை தேர்வு செய்யும் முறைகள்!

அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும் உரித்தானது.

ஒருவனுக்கு திருமண வாழ்வு என்பது எவ்வளவு சந்தோசத்தையும் அவனுடைய வாழ்வில் உற்சாகத்தைத் தந்து அவனுடைய செயல்திறனை அதிகரிக்கச் செய்கிறதோ அதுபோலவே அதே திருமணம் ஒருவனுடைய வாழ்வையே கேலிக்குரியதாக ஆக்கி, அவனுடைய முன்னேற்றத்தையே முடக்கி ஒருவனை செயலற்றதாகவும் ஆக்குகிறது. அதற்காக மனித இனம் பல்கிப்பெருகுவதற்காக இறைவனால் ஏற்படுத்தப்பட்ட இந்த திருமண உறவுமுறையை ஒருவன் புறக்கணித்து வாழவும் இஸ்லாத்தில் அனுமதி இல்லை!

சனி, ஜூலை 22, 2017

பெண்கள் அறிய வேண்டிய முக்கிய விடயங்கள்

பெண்கள் அறிய வேண்டிய முக்கிய விடயங்கள்
இது பெண்களுக்கான ஒரு அழகிய கட்டுரை......
 அல்குர்ஆன் மற்றும் நபிமொழிகளின் நிழலில் - ஒவ்வொரு பெண்மணியும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள். நீங்கள் அவர்களிடம் ஆறுதல் பெறுதற்குரிய (உங்கள்) மனைவியரை உங்களிலிருந்தே உங்களுக்காக அவன் படைத்திருப்பதும்; உங்களுக் கிடையே உவப்பையும், கிருபையையும் உண்டாக்கியிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும்; சிந்தித்து உணரக்கூடிய சமூகத்திற்கு நிச்சயமாக, இதில் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன. (30:21)


மனைவியின் அழகிய வரவேற்பு

• பணியிலிருந்தோ அல்லது பயணத்திலிருந்தோ கணவன் வீட்டிற்கு வரும்போது அவரை நல்ல வார்த்தைகள் கூறி வாழ்த்துக்களுடன் வரவேற்று உபசரியுங்கள்.

ஞாயிறு, ஜூலை 16, 2017

அதிகாலையில் ஆண்களுக்கு எழும்புவது கடினமாக உள்ளதா?

அதிகாலையில் ஆண்களுக்கு எழும்புவது கடினமாக உள்ளதா?


அதிகாலை என்பது மாற்றத்தின் நேரம். உலகில் பல மாற்றங்களை அல்லாஹ்அதிகாலை
நேரத்திலேயே செய்கின்றான். எனவேதான் அதிகாலைத் தொழுகையை
நிறைவேற்றுபவர்களை
இஸ்லாம் வாழ்த்துகின்றது. வெறுமனே மீசையும் தாடியும் வைத்திருப்பவர்கள்
அல்லர் ஆண்கள்; மாறாகஅதிகாலைத் தொழுகையை செவ்வனே பள்ளிவாசலில்
நிறைவேற்றுபவர்களே உண்மையான ஆண்கள் என்று இஸ்லாம் பட்டப் பெயர்
சூட்டுகின்றது.