அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. மேலும் அவர்கள், 'உங்களில் நற்குணமுள்ளவரே உங்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) நூல்: புகாரி 3759 கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்? . எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.

திங்கள், ஆகஸ்ட் 14, 2017

அண்ணலார் கூறிய அழகிய உவமைகள் ...

அண்ணலார் கூறிய அழகிய உவமைகள் ...
அல்லாஹ்வின் திருப்பெயரால்..
மலருக்கு மனம் அழகு ! மங்கைக்கு நாணம் அழகு! மொழிக்கு உவமை அழகு!
உவமைகள் இல்லாத மொழி ஊமை மொழி  என்று துணிந்து சொல்லி விடலாம்..

தமிழைத் போலவே அரபியும் தொன்மையான மொழிகளில் ஒன்று .

இறைத்தூதர் கூறிய இனிய உவமைகள் இரண்டை மட்டும் இங்கு எடுத்துக் கொள்வோம்.
 இந்த உலகில் தாம் இறைத்தூதராய் அனுப்பப்பட்டதின் நோக்கம் குறித்தும் தம்முடைய பணி எத்தகையது  என்பதையும் எவ்வளவு அழகாகச் சொல்கிறார்கள்  பாருங்கள்!

சனி, ஆகஸ்ட் 12, 2017

கணவனை மதிக்காத இன்றைய மனைவிகள்!

கணவனை மதிக்காத இன்றைய மனைவிகள்!
அன்பு சகோதரிகளே!
இன்று நம்மிடத்திலே உள்ள கெட்ட செயற்பாடுகளில் ஒன்றுதான் கட்டின புரிசனையே அவர் இல்லாத நேரத்தில் கேவலமா பேசுறது.
சில கணவன்மார் சமூகத்திலே தாழ்ந்த நிலையில் இருந்தாலும் மனைவியை பொறுத்த வரை அவர்தான் நமக்கு எல்லாமே என்பதை நாம் மறந்து விடக்கூடாது.
நம்ம பெண்களில் பல பேர் கணவன்மாரை கணக்கெடுப்பதே இல்லை. சில வீடுகளிலே கணவன் அடிமையை போல இருபான். பொண்டாட்டியின் சத்தம்தான் புருசனின் சத்தத்தை விட அதிகாமா இருக்கும். சில பொண்டாட்டிமார் புரிசண்ட முகத்திலே ஏசுகின்றார்கள் “ஒன்ன சும்மாவா கலியாணம் முடிச்ச. 8, 10 ஏக்கர் காணியும் இந்தப்பெரிய வீடும் போதாக்குறைக்கு கடையையும் தந்துதான் கலியாணம் முடிச்ச. இது ஒண்டும் இல்லன்டா நீ முடிச்சிருப்பியா” ண்டு கொஞ்சம் கூட பயம் இல்லாமல் கணவனின் முன்னாலே கேட்கின்றார்கள்.

வியாழன், ஆகஸ்ட் 10, 2017

இந்திய சுதந்திர போரில் முஸ்லிம்களின் பங்கு!

இந்திய சுதந்திர போரில் முஸ்லிம்களின் பங்கு!
இந்திய ‬முஸ்லீம்களின்‪ மறைக்கப்பட்ட ‬வீர வரலாறுகள் எண்ணிலடங்கா..!!""

இஸ்லாமிய தியாகிகள் இந்திய சுதந்திரப் போராட்டத்துக்காக தங்களின் உடல் , பொருள், ஆவியை தியாகம் செய்த பல இஸ்லாமியப் பெருமகன்களின் வரலாற்றை கண்டு வருகிறோம்.

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் சிறைக்கு சென்றவர்களிலும் உயிர்களை தியாகம் செய்தவர்களிலும் முஸ்லிம்கள்அவர்களின் மக்கள் தொகையின் விகிதாச்சாரத்தோடு ஒப்பிடும்போது மிக அதிகமாகவே இருந்தார்கள்
என்று பிரபல எழுத்தாளர் குஷ்வந்த் சிங் இல்லஸ்ட்ரேடட் வீக்லி பத்திரிகையில் எழுதி அது 20/12/1975 அன்று வெளிவந்தது.

சிந்தனையூட்டும் நபிமொழிகள்..

சிந்தனையூட்டும் நபிமொழிகள்..

நபி [ஸல்] அவர்கள் அருளியதை  ஹஜ்ரத் முஸ்தவரிதுப்னு  ஷத்தாத் [ரலி] அவர்கள் அறிவிக்கிறார்கள்.. '' அல்லாஹுத்தஆலாவின் மீது ஆணையாக ! மறுமைக்கு முன் உலகின் உதாரணம் . உங்களில் ஒருவர் தன் விரலைக் கடலில் முக்கியெடுத்துப் பிறகு தன் விரலில் எவ்வளவு நீர் ஒட்டிக் கொண்டுள்ளது என்று பார்த்துக் கொள்ளவும் !'' அதாவது கடலில் இருக்கும் நீரை கவனிக்கும் பட்சத்தில் விரலில் ஒட்டியுள்ள நீர் எவ்வாறு மிகக் குறைவானதோ அவ்வாறே மறுமையை கவனிக்கும் பட்சத்தில் உலக வாழ்க்கை மிகக் குறைவானது .
நூல்-முஸ்லிம்]

புதன், ஆகஸ்ட் 09, 2017

இன்று வேலி தாண்டும் மச்சான் மதினி உறவு‬!

இன்று வேலி தாண்டும் மச்சான் மதினி உறவு‬!


மச்சான் உறவு முறை என்பது இரண்டு வகைப்படும்.

ஒன்று மாமியின் மகன் மச்சான் என்ற உறவின் அடிப்படையில் அமைந்தது.
இரண்டாவது கணவனின் சகோதரன் அல்லது சகோதரியின் கணவன் என்ற முறையில் ஏற்படும் உறவு. இவர்களுடன் பேசுவதற்கு மார்க்தக்தில் தடையில்லை. ஆனால் இந்த அனுமதியை பயன்படுத்தி வரம்பு மீறக் கூடாது.


ஆனால் ‪‎நமது சமுதாயப் பெண்கள் இந்த உறவு விஷயத்திலும் கவணமற்றவர்களாகவே இருக்கின்றார்கள்‬. மாமி மகனுடன் கொஞ்சி விளையாடும் மதினிமார்கள் நமது சமுதாயத்தில் நிறையவே உண்டு. அதே போல் கணவனின் சகோதரர்களுடன் கொஞ்சிப் பேசும், கிள்ளிப் பழகும் மைத்துனிமார்களும் நமது சமுதாயத்தில் மலிந்து கிடக்கின்றார்கள். இப்படியானவர்களுக்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் எச்சரிக்கையைப் பாருங்கள்.