அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. மேலும் அவர்கள், 'உங்களில் நற்குணமுள்ளவரே உங்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) நூல்: புகாரி 3759 கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்? . எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.

சனி, ஜனவரி 13, 2018

வாழ்க்கை துணை அமைவது எப்படி?

வாழ்க்கை துணை அமைவது எப்படி?
நல்ல  ஆண்களுக்கு ,மனைவி சரியாக அமைவதில்லை ,,நல்ல பெண்களுக்கு  கணவன் சரியாக அமைவதில்லை  எல்லாம் விதிப்படிதான் எல்லாம்,ஆனால் இதில் இறைவன் சொல்லும் கோட்பாடு  என்ன? விளக்கம்  தாருங்கள்?

🌿பதில்🌿

   கணவன்,மனைவி உறவில் நல்ல ஆண்களுக்கும், பெண்களுக்கும் சரியான மனவாழ்க்கை அமைவதில்லை என்று கூற இயலாது. சில இடங்களில் இவ்வாறாக அமையலாம். இது அடிப்படையிலேயே கவனிக்க வேண்டிய ஒரு விஷயம்.

   கணவன், மனைவி உறவை பொறுத்தவரை இஸ்லாம் வகுத்த வரையறைக்குள் கணவன் மனைவியையும், மனைவி கணவனையும் தேர்ந்தெடுக்கலாம்.

வெள்ளி, ஜனவரி 12, 2018

ஒரு நண்பனை எவ்வாறு தேர்வு செய்வது ...?

ஒரு நண்பனை எவ்வாறு தேர்வு செய்வது ...?
முஹம்மது நபி (ஸல்.) அவர்கள் “ஒரு நண்பனை எவ்வாறு தேர்வு  செய்வது, நண்பனோடு எவ்வாறு பழகுவது.!”இது பற்றி என்ன சொல்லியிருக்கார்.ஹதீஸ் ஆதாரத்தோடு பதில் வேண்டும்.!

இதோ அழகான பதில் ...

இவ்வுலகில் வாழும் மனிதர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கு என்று நண்பர்களையும் நட்பு வட்டாரத்தையும் கொண்டிருப்பார்கள். நண்பர்கள் இல்லாத மக்கள் இல்லை என்ற சொல்லும் அளவிற்கு எல்லோருக்கும் அவரவர்கள் தகுதிக்கேற்ப நட்பு வட்டாரங்கள் அமைந்து இருக்கும்.
  ஒருத்தருடைய கண்ணியத்தையும் நடத்தையையும் அவரின் நண்பர்களைக் கொண்டே கணித்து விடும் அளவுக்கு நண்பர்கள் கூட்டம்.

ஞாயிறு, ஜனவரி 07, 2018

இம்ரானின் மகள் மர்யம்[அலை]யின் நற்குணத்தை பெற்ற ஃபாத்திமா[ரலி]

இம்ரானின் மகள் மர்யம்[அலை]யின் நற்குணத்தை பெற்ற ஃபாத்திமா[ரலி]

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ

ஆகவே, அவரை [அந்தக் குழந்தையை] அவருடைய இறைவன் அழகியமுறையில் ஏற்றுக்கொண்டான். அதை நல்ல பயிராக வளரச் செய்தான். அதற்கு ஜக்கரியாவைப் பொறுப்பாக்கினான். மர்யம் இருந்த மாடத்திற்குள் ஜக்கரிய்யா நுழைந்த போதெல்லாம் அவருக்கருகில் ஏதேனும் உணவுப் பொருள்  இருப்பதைக் கண்டு, ''மர்யமே! இது உனக்கு எங்கிருந்து கிடைத்தது?'' என்று கேட்டார். அதற்கு அவர், ''இது அல்லாஹ்விடமிருந்து கிடைத்தது; அல்லாஹ், தான் நாடுவோருக்கு கணக்கின்றி வழங்குவான்'' என்று கூறினார்''
அல்-குர்'ஆன் 3 ;37

ஞாயிறு, டிசம்பர் 31, 2017

அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து -


அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து -


அல்லாஹ்வின் திருப்பெயரால் ...

அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

குர்ஆனையும் நபி வழியையும் பின்பற்றினால்தான் மனம் அமைதி பெறும்,
நேர்வழியும் கிடைக்கும். குர்ஆனையும், நபி(ஸல்)அவர்களின் வாழ்க்கையையும் பின்பற்றி நடந்தால், உள்ளங்கள் அமைதி பெற்று இம்மை மறுமை வாழ்வில் வெற்றி பெறலாம் இன்ஷாஅல்லாஹ்.

அபூஹூரைரா(ரலி)அறிவிக்கின்றார்கள்: ''ஒரு மனிதனின் அழகிய இஸ்லாமிய பண்புகளில்; அவன் தனக்கு அவசியம் இல்லாததை விட்டு விடுவதும் ஒன்றாகும்' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.' (திர்மிதீ.) ( ரியாளுஸ்ஸாலிஹீன்: 67 )