அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. மேலும் அவர்கள், 'உங்களில் நற்குணமுள்ளவரே உங்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) நூல்: புகாரி 3759 கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்? . எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.

வியாழன், ஜூலை 05, 2018

நான்கு வகையான மனிதர்கள்

நான்கு வகையான மனிதர்கள்
1⃣ வணக்கசாலிகள். மகிழ்ச்சிகரமான வாழ்க்கை

2⃣ வணக்கசாலிகள், சிரமமான வாழ்க்கை

3⃣ பாவம்செய்பவர்; மகிழ்ச்சிகரமான வாழ்க்கை

4⃣ பாவம் செய்பவர்: சிரமமான வாழ்க்கை

👉 இவ்வகை மனிதர்களில் நீங்கள் முதல் வகையாக இருந்தால்

அது இயல்பான ஒன்று. நல்லவருக்கு எல்லாம் நன்மையாகவே முடியும்.

விழிப்புணர்வுக்காக இந்த காணொளி அவசியம் பாருங்கள் ..


விழிப்புணர்வுக்காக இந்த காணொளி அவசியம் பாருங்கள் ..

செவ்வாய், ஜூலை 03, 2018

அல்லாஹ்வை நினைப்போம்! வெற்றி பெறுவோம்!

அல்லாஹ்வை நினைப்போம்! வெற்றி பெறுவோம்!
 Thanks  Mohammed Rizwan
முன்னுரை

உலகில் மனிதனை படைத்த நோக்கமே படைத்த இறைவனை வணங்குவதற்காகத் தான். ஆனால், மனிதனோ தன் மனோயிச்சைக்கு கட்டுப்பட்டவனாக கட்டுப்பாடின்றி வாழ்கிறான். அவ்வாறு இல்லாமல் மனிதன் ஒழுக்கமாக நன்னெறியில் முறைப்படி வாழ இறைவன் சில எளிய வழிமுறைகளை கற்றுத்தந்துள்ளான். அவைகளை தொடர்ந்து கடைபிடித்து வாழ்ந்தாலே சொர்க்கத்தி இலகுவாக எட்டலாம்.

அல்லாஹ்வை நினைப்போம்! அர்ஷின் நிழலி­ல் இருப்போம்!

ஷைத்தானின் தாக்கம் உமக்கு ஏற்பட்டால் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுவீராக! அவன் செவியுறுபவன்; அறிந்தவன். (இறைவனை) அஞ்சுவோருக்கு ஷைத்தானின் தாக்கம் ஏற்பட்டால் உடனே சுதாரித்துக் கொள்வார்கள்! அப்போது இவர்கள் விழித்துக் கொள்வார்கள்.
(அல்குர்ஆன் 7:200, 201)

புதன், ஜூன் 27, 2018

இரங்கல் தெரிவிப்பதின் ஒழுக்கங்கள்

இரங்கல் தெரிவிப்பதின் ஒழுக்கங்கள்

இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் கூறுவது நமது மார்க்கத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. அதனால் அக்குடும்பங்களின் துயரம் இலேசாகும், வலி குறையும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்: தமது சகோதரர் கவலையாக உள்ள நேரத்தில் அவரை ஆறுதல்படுத்துபவருக்கு மறுமைநாளில் ஆபரணங்களுடன்கூடிய கண்ணியமான ஆடை அணிவிக்கப்படும். (இப்னு மாஜா)

ஒருவர் இறந்தவர்களின் குடும்பத்திற்காக பிரார்த்தனை செய்வதும், அவர்களுக்குப் பொறுமையை நினைவூட்டி அதற்கு அல்லாஹ்விடம் உள்ள கூலியை அச்சமயத்தில் கூறுவதும் அவசியமாகும்.

செவ்வாய், ஜூன் 26, 2018

இஸ்லாமை முறித்துவிடும் பத்து நிபந்தனைகள்(அவசியமான கட்டுரை)

இஸ்லாமை முறித்துவிடும் பத்து நிபந்தனைகள்(அவசியமான கட்டுரை)

வணக்க வழிபாட்டில் அல்லாஹ்வுக்கு இணையாளர்களை ஏற்படுத்துதல்

குர்ஆன் கூறுகிறது: அல்லாஹ் தனக்கு இணைவைக்கப்படுவதை மன்னிக்கவே மாட்டான். இது அல்லாத பாவங்களைத் தான் நாடியோருக்கு மன்னித்துவிடுவான். (அல்குர்ஆன் 4:116)

எவன் அல்லாஹ்வுக்கு இணைவைக்கிறானோ, திட்டமாக அவனுக்கு அல்லாஹ் சொர்க்கத்தைத் தடைசெய்துவிடுகிறான். அவனுடைய தங்கிமிடம் நரகம்தான். அநியாயக்காரர்களுக்கு உதவி செய்வோர் யாரும் இருக்கமாட்டார்கள். (அல்குர்ஆன் 5:72)