அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. மேலும் அவர்கள், 'உங்களில் நற்குணமுள்ளவரே உங்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) நூல்: புகாரி 3759 கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்? . எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.

வியாழன், பிப்ரவரி 24, 2011

நற்குணங்களும் நர்மனங்களும்!

அல்லாஹ் தஆலா கூறிகிறான் :நம்பிக்கையாலர்களுக்காக உம்முடைய (பணிவென்னும் )இறக்கையைத் தாழ்த்துவீராக !
அளவற்ற அருளானின் அடியார்கள் எத்த்கையவர்கலேன்றால் ,பூமியில் மீது பணிவாக அவர்கள் நடப்பார்கள் .
பெருமானார் ஸல்  அவர்களின் பொன்மொழிகள் :
உண்மை விசுவாசி தன நற்குணத்தால் பகலெல்லாம் நோன்பு நோற்று ,இரவெல்லாம் வணங்க கூடியவரின் பதவியை அடைந்து விடுவார் ,,என்று ரசூலுல்லாஹி (ஸல் ) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் ஆயிஷா (ரலி )அவர்கள் அறிவிகிறார்கள் .
ஈமான் உடையவர்களில் அழகிய குணம் படைத்தவரே பூரணமான விசுவாசம் (ஈமான் )உடையவர் .உங்களில் மிகச் சிறந்தவர் தன் மனைவிமார்களுடன் நன்முறையில் நடந்து கொள்பவரே ,,என்று ரசூலுல்லாஹி (ஸல் ) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி ) அவர்கள் அறிவிகிறார்கள் .
கியாமத் நாளன்று ) முஃமினுடைய அமல்களை எடைபோடும் தராசில் நற்குணத்தைவிட அதிக பாரமான செயல்கள் வேறு எதுவுமிருக்காது ,,என்று ரசூலுல்லாஹி (ஸல் )அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூதர்தா (ரலி ) அவர்கள் அறிவிகிறார்கள் .
அல்லாஹ் வின் உதவிகொண்டு நாம் அல்லாஹ் வின் புனித வேதத்திலிருந்தும் ,நபி பெருமானார் (ஸல் ) அவர்களின் பொன்மொழிகள் இருந்தும் நற்குணத்தை பற்றி பார்த்தோம் ,அதனைப் பற்றி நாம் விளங்கிகொண்டோம் .நற்குணம் ,,ஒவ்வொரு முஸ்லிம் ஆண் பெண் இருவரிடமும் இருக்க வேண்டிய முக்கிய குணம் அதுதான் நற்குணம் .பெருமானார் ஸல் அவர்கள் சொன்னதாக ஒரு ஹதீஸை பார்த்தோம் : பகலெல்லாம் நோன்பு வைத்து இரவெல்லாம் வணங்கி வந்தவரின் அந்தஸ்தை இந்த நற்குணம் உள்ளவர் பெற்றுகொள்வார் !எவ்வளவு பெரிய பாக்கியம் ,அதுமட்டும்மின்றி ,இன்ஷாஅல்லாஹ் மறுமையில் தராசில் அதிகம் கணக்ககூடிய செயல் இந்த நற்குணம் தான் என்பதை நாம் நபி பெருமானார் ஸல் அவர்களின் பொன்மொழிகள் மூலமாக தெரிந்துகொண்டோம் !அல்லாஹ் ரொம்ப மெலினமானவன், தன் அடியார்களிடம் இந்த மென்மையை விரும்புகிறான் .யாரிடம் இந்த நற்குணம் உள்ளதோ அவர்தான் மனிதர்களிடம் மென்மையாக நடந்துகொள்வார் .நற்குணத்தை பற்றி அதிகமான ஹதீஸ்கள் இருக்கின்றன :ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லீம்க்கு ஏதாவது தீமை செய்தால் அல்லது திட்டினால் ,பாதிக்கப்பட்ட முஸ்லிம் அவரை மன்னித்து விடுவார் இது நற்குணத்தில் உள்ளவை .இதுபோன்று ,மனிதர்களிடம் கொடுக்கல் வாங்கல் இருந்து நல்ல முறையில் ஒரு முஸ்லிம் நடந்துகொள்வார் என்றால் அதுவும் நற்குணம் .மக்களிடம் யார் ஒருவர் மென்மையாகவும் ,இறக்கமாகவும் இருக்கிறாரோ அல்லது பழகிராரோ அவரை அல்லாஹ் விரும்புகிறான் என்று நபி பெருமானார் ஸல் அவர்களின் ஹதீஸில் பார்க்கலாம் !மென்மை, நல்ல முறையில் நடந்துகொள்வது ,நல்ல முறையில் மக்களிடம் பழகுவது , கொடுக்கல்,வாங்கல் ,வியாபாரம் ,இப்படி ஒரு முஸ்லிம் ஆணோ அல்லது பெண்ணோ நடந்து கொள்வது இது தான் நற்குணம் ,இந்த சிறந்த குணமான நற்குணம் நம் எல்லோரிடமும் இருக்கவேண்டும் !இதை அடைவதற்கு நாம் நம் உயிர்க்கு மேலான நபி பெருமானார் (ஸல் ) அவர்களின் வழி முறையில் போனால் தான் இந்த சிறந்த குணத்தை அடையமுடியும் !அவர்களை பின்பற்றுவதின் மூலமாக தான் நாம் இந்த நற்குணத்தை அடைய முடியும் என்பதை நாம் விளங்கிக்கொள்ளவேண்டும் .அல்லாஹ் நம் அனைவருக்கும் அந்த பாக்கியத்தை தந்து ,அருள் மழை நம்மீது பொழிந்து, இறுதி வார்த்தை லா இலாஹா இல்லல்லாஹு என்ற கலிமாவை மொழிந்து ,இன்ஷாஅல்லாஹ் நாம் அனைவரும் சொர்க்கம் அடைவோம் !ஆமீன் ... 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!