அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. மேலும் அவர்கள், 'உங்களில் நற்குணமுள்ளவரே உங்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) நூல்: புகாரி 3759 கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்? . எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.

சனி, ஜனவரி 30, 2021

ஆடம்பர வாழ்க்கை

 
ஒரு மிகப் பெரிய சாப்ட்வேர் நிறுவனத்தில் நாலாயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்ததாக அதன் நிர்வாக இயக்குனர் மீது குற்றம் சுமத்தப்பட்டு நீதிபதி முன் ஆஜர் படுத்தப்பட்டார் !

நீதிபதிக்கு அவரது அலங்கோலமான நிலை, உறக்கமின்றி சிவந்த கண்கள், அவமானத்தால் கூனிக்குருகி, நின்றவரை பார்க்கவே பரிதாபமாக இருந்தது !

"காலையில் உங்களுக்கு உணவு ஏதாவது கொடுத்தார்களா?''

"இல்லை' என்று தலையாட்டினார் இயக்குனர்.

நீதிமன்ற ஊழியரிடம் நான்கு இட்லி வாங்கி வருமாறு ஆணையிட்டார்.

இயக்குனரின் கையில் இட்லிப் பொட்டலம் கொடுக்கப்பட்டது.

"பரவாயில்லை. இங்கேயே அமர்ந்து நிதானமாக சாப்பிடுங்கள்.

அதற்குள் நான் இன்னொரு வழக்கு விசாரணையை முடித்து விடுகிறேன். என்றார் நீதிபதி.

இயக்குனரால் மூன்று இட்லிக்கு மேல் சாப்பிடவே முடியவில்லை.

பேந்தப் பேந்த விழித்தபடி நின்று கொண்டிருந்தார் இயக்குநர்.

"என்ன ஒரு இட்லியை வைத்து விட்டீர்கள்?

சாப்பிடுங்கள்.''

என்றார் நீதிபதி.

"முடியவில்லை ஐயா... என்னால் சாப்பிட முடியவில்லை.''

என்றார் இயக்குநர்.

"பார்த்தீர்களா? உங்களால் சாப்பிட முடிந்தது மூன்று இட்லிதான்.

அதற்கு மேல் உங்கள் வயிற்றில் இடமில்லை.

இதற்காகவா நீங்கள் 

நான்காயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்தீர்கள்? 

மனிதனின் அத்தியாவசியத் தேவைகள் மிகவும் குறைவானவை. ஆடம்பர தேவைகள்தான் அதிகம்.

*உங்கள் வயிற்றுக்குத் தீனி போடுவது எளிது.

அதற்கு நான்கு இட்லியே அதிகம்.*

*உங்கள் ஆடம்பரத் தேவைக்கு நான்காயிரம் கோடி என்ன...

நாற்பதாயிரம் கோடி கூடப் போதாது..''*

இயக்குனர் பெரிதாக குலுங்கி அழ ஆரம்பித்தார்.

அவர் மீதம் வைத்த *அந்த நான்காவது இட்லி அவருக்கு மட்டுமல்ல ,

நமக்கும் தான்*

கல்யாணமாகாமல், சந்தோஷமான குடும்ப வாழ்க்கை அமையாமல் மன வேதனையிலிருக்கும் நம் குழந்தைகளுக்கு கல்யாணம் செய்ய தடையாய் இருப்பபது....,

வசதி வாய்ப்புகள் இல்லாத நெருங்கிய உறவுகளிடம் அவர்களை ஒதுக்கி விட்டு, உங்கள் வசதிக்கு ஏற்ப வேறு இடத்தில் சொந்தம் கொண்டாடுவது... அல்லது ஒரு உறவின் பேச்சை கேட்டு, மற்றொரு உறவை நேசிக்க மறுப்பது...,

மனைவியின் பேச்சை கேட்டு, உடன் பிறந்த சொந்தங்களை மதிக்காமல் இருப்பது, அல்லது பேசாமல் இருப்பது...,

இது போன்ற பல வழிகளில் பாவங்களை செய்துவிட்டு,

புண்ணிய ஷேத்திரங்களுக்கு சென்று பரிகாரம் என முயற்சிப்பது பெரும்பாவம்.

அது கடப்பாரையை முழுங்கி விட்டு சுக்கு கசாயம் குடிக்கிற மாதிரி,

சந்தோஷத்திலே பெரிய சந்தோஷம்,

நம்மருகில் நம்முடன், நம்மை சுற்றி உள்ள சுற்றத்தாரை,

நம்மை தேடி வரும், வரப்போகும் சொந்தங்களையும் 

சந்தோஷப்படுத்தி பாருங்கள்


நாம் யாரும் 200 ஆண்டுகள் வாழ போவதில்லை. அடுத்த நொடி நமக்கு சொந்தமில்லை. யாரும் அடுத்தமுறை உங்களுக்கு, இந்த தலைமுறை சொந்தமாக பிறக்க போவதில்லை, இந்த தலைமுறையில் சகோதர, சோகதரியாக, மாமன், மச்சான், சித்தப்பா, சித்தி, பெரியப்பா, பெரியம்மா மற்ற எந்த உறவும், அடுத்த ஜென்மத்தில் தொடருமா இல்லையா என்பது நமக்கு தேரியாது... ஆகையால், முடிந்த வரை பகைமை பாராட்டாமல்,  நட்புடன் பழகி, நம்மால் முடிந்ததை செய்வோம்..
ஆடம்பர வாழ்க்கை 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!