அடங்கும் நாள் ஒன்று வருமே! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அடங்கும் நாள் ஒன்று வருமே! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், ஆகஸ்ட் 13, 2020

மறுமையின் முதல் நிலை மண்ணறை.!

 மறுமையின் முதல் நிலை மண்ணறை.!


மண்ணறை வேதனையிலிருந்து முஸ்லிம்கள் அனைவரும் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுவது மிகமிக அவசியமாகும். ஏனென்றால் நபி (ஸல்) அவர்களின் பல்வேறு ஹதீஸ்கள் மண்ணறையில் நடைபெறும் வேதனைகள் பற்றி எச்சரிக்கின்றன. எனவே முஸ்லிம்களாகிய நாம் இவைகள் பற்றி அறிந்து அதனிலிருந்து பாதுகாப்பு பெற முயலவேண்டும்.


மண்ணறை வேதனை


“காலையிலும், மாலையிலும் அவர்கள் நரக நெருப்பின் முன் கொண்டுவரப்படுவார்கள்; மேலும் நியாயத் தீர்ப்பு காலம் நிலைபெற்றிருக்கும் நாளில் ‘ஃபிர்அவ்னுடைய கூட்டத்தாரைக் கடினமான வேதனையில் புகுத்துங்கள்’ (என்று கூறப்படும்)”


(அல்-குர்ஆன் 40:46)

செவ்வாய், ஜூன் 23, 2020

மறுமையின் கேள்விக் கணக்கிலிருந்து தப்ப முடியாது!

அல்லாஹ்வின் திருப்பெயரால் ...

பெற்றோர்களே! ஒரு விஷயத்தைக் கண்டிப்பாக ஞாபகத்தில் வைத்துதான் ஆகவேண்டும்! '' நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளிகள்! உங்களுடைய பொருப்பைப் பற்றி மறுமையில் விசாரிக்கப்படுவீர்கள்'' என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதை மறந்துவிட முடியாது. குழந்தைகள் பருவ வயதை அடையும் வரை அல்லாஹ் -ரசூலை பற்றியும் , இஸ்லாத்தின் பர்ளு ஈமானின் விளக்கம், தொழுகை முறை, நோன்பு வைக்கும் விதம் எல்லாம் கற்றுக்கொடுத்து எப்படி எல்லாம் ''அமல் செய்ய வைத்திருக்கிறோம் என்பது பற்றி நிச்சயமாக கேட்கப்படுவோம் . வயிற்று பிரச்சனை தீராததால் மார்க்கப் பிரச்சனை பற்றிச் சிந்திக்க நேரம் இல்லை எனச் சொல்லி விசாரணையிலிருந்து தப்ப முடியாது. குழந்தைகளை சிறுவயதிலேயே தொழுகை, நோன்பு போன்ற காரியங்களில் பழக்கப்  படுத்த வேண்டும்! அவர்களுடைய வயதில் செய்து கொள்வார்கள்' என்று தப்பான கருத்தில் அலட்சியமாக இருப்பவர்கள், ((ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா ? '' என்ற பழமொழியைக் கேள்விப்  பட்டதில்லையா? 

சனி, பிப்ரவரி 15, 2020

ஆடி ,ஓடித் திரிந்தாலும் , அடங்கும் நாள் ஒன்று வருமே!

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

நிரந்தரமில்லாத, அற்பமான ,சொற்பமான வாழ்வைப் பெரிதாக மதித்து, தவறான பாதையில், கெட்ட எண்ணத்தில், மூட நம்பிக்கையில், பாவமானச் செயலில் மூழ்கி விடுகிறோம். 50 அல்லது 70 ஆண்டு வாழ்வுப்  பயணத்தை, 50 ஆயிரம் ஆண்டு வாழப் போவது போல வெறும் கற்பனையில் தவிக்கிறோம். இறைவனின் பயம் இல்லாமல் அவனுடைய படைப்புகளுக்கு அஞ்சுகிறோம். இறைவன் மீது 'நம்பிக்கை ' இல்லாமல் சாதாரண மனிதர்களை நம்பி வாழ்கிறோம். அற்பமான ஆரம்ப நிலையையும் , இறுதியான மரணத் தருவாயையும் மறந்துவிட்டு, மனம் போன போக்கில் வாழ்க்கை நடத்துகிறோம்.பொய், புரட்டு, பித்தலாட்டம், குடி, சூது , விபச்சாரம் போன்ற பாதகச் செயல்களில் ஷைத்தான் சிக்கவைத்து விடுகிறான்.உலகையே சொர்க்கமாக மதித்து மதி மயங்கி, பாவத்தில் மூழ்கும் போது  வாழ்க்கையே நரகமாகி விடுகிறது.  ஏன் இந்த சூழ்நிலை?!⏳👈☝

ஞாயிறு, ஜூலை 10, 2016

ஆடி, ஓடித் திரிந்தாலும், அடங்கும் நாள் ஒன்று வருமே!

ஆடி, ஓடித் திரிந்தாலும், அடங்கும் நாள் ஒன்று வருமே!
அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பம் செய்கிறேன்...

நிரந்தரமில்லாத, அற்பமான, சொற்ப கால வாழ்வைப் பெரிதாக மதித்து, தவறான பாதையில், கெட்ட  எண்ணத்தில், மூட நம்பிக்கையில், பாவமானச் செயலில் மூழ்கிவிடுகிறோம். 50 ஆண்டு அல்லது 60 ஆண்டு வாழ்வுப் பயணத்தை 50 ஆயிரம் ஆண்டு வாழப் போவது போல வெறும் கற்பனையில் தவிக்கிறோம். இறைவனின் பயம் இல்லாமல் அவனுடைய படைப்புகளுக்கு அஞ்சுகிறோம். இறைவன் மீது  ''தவக்கல் ' [நம்பிக்கை] இல்லாமல் சாதாரண மனிதர்களை நம்பி வாழ்கிறோம். அற்பகான  ஆரம்ப நிலையையும், இறுதியான மரணத்  தருவாயையும் மறந்து விட்டு , மனம் போன போக்கில் வாழ்க்கை நடத்துகிறோம். பொய் , புரட்டு பித்தலாட்டம், குடி, சூது , விபச்சாரம், போன்ற பாதகச் செயல்களில் ஷைத்தான் சிக்கவைத்து விடுகிறான். உலகையே சொர்க்கமாக மதித்து மதி மயங்கி பாவத்தில் மூழ்கும்போது வாழ்க்கையே நரகமாகி  விடுகிறது. ஏன்  இந்த இழிநிலை?!