அல்லாஹ்வை நினைப்போம்! வெற்றி பெறுவோம்! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அல்லாஹ்வை நினைப்போம்! வெற்றி பெறுவோம்! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், ஜூலை 03, 2018

அல்லாஹ்வை நினைப்போம்! வெற்றி பெறுவோம்!

அல்லாஹ்வை நினைப்போம்! வெற்றி பெறுவோம்!
 Thanks  Mohammed Rizwan
முன்னுரை

உலகில் மனிதனை படைத்த நோக்கமே படைத்த இறைவனை வணங்குவதற்காகத் தான். ஆனால், மனிதனோ தன் மனோயிச்சைக்கு கட்டுப்பட்டவனாக கட்டுப்பாடின்றி வாழ்கிறான். அவ்வாறு இல்லாமல் மனிதன் ஒழுக்கமாக நன்னெறியில் முறைப்படி வாழ இறைவன் சில எளிய வழிமுறைகளை கற்றுத்தந்துள்ளான். அவைகளை தொடர்ந்து கடைபிடித்து வாழ்ந்தாலே சொர்க்கத்தி இலகுவாக எட்டலாம்.

அல்லாஹ்வை நினைப்போம்! அர்ஷின் நிழலி­ல் இருப்போம்!

ஷைத்தானின் தாக்கம் உமக்கு ஏற்பட்டால் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுவீராக! அவன் செவியுறுபவன்; அறிந்தவன். (இறைவனை) அஞ்சுவோருக்கு ஷைத்தானின் தாக்கம் ஏற்பட்டால் உடனே சுதாரித்துக் கொள்வார்கள்! அப்போது இவர்கள் விழித்துக் கொள்வார்கள்.
(அல்குர்ஆன் 7:200, 201)