ஆண்ட்ராய்டு போனும் அண்ணலாரின் உம்மத்தும்! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆண்ட்ராய்டு போனும் அண்ணலாரின் உம்மத்தும்! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, செப்டம்பர் 17, 2016

ஆண்ட்ராய்டு போனும் அண்ணலாரின் உம்மத்தும்!

ஆண்ட்ராய்டு போனும் அண்ணலாரின் உம்மத்தும்!

செல்பியும் செல்போனும் பேஸ்புக்கும் வந்ததில இருந்து இந்த வருசம் வரை நம்ம சமுதாயம் உம்ரா வித் செல்பி, ஹஜ் வித் செல்பின்னு ஹரம் ஷரீபில் நின்னு கஃபா பின்னணில செல்பி நன்மைகளை (?) வாரி குவிச்சிட்டு இருந்தது.

இஹ்ராம் கட்டுனதில இருந்து, கால் டாக்சில ஏறுனது முதல் ஏரோப்ளேன்ல ஏறி உட்கார்றதுன்னு ஒரே அப்டேட் அலப்பறைதான் போங்க.

இப்ப முத்திப் போச்சோ இல்ல முன்னேறிப் போச்சோ தெரியல,

இந்த வருசம் செல்பி இப்தார் ஆரம்பிச்சுட்டாங்க.

பள்ளிவாசலோ, பக்கத்துவீடோ, தனது வீடோ எங்க நோம்பு திறந்தாலும் போட்டோ தான்.

அவங்க நோம்பு திறக்க யாராவது ஸ்பான்சர் பண்ணியிருந்தாலோ, அல்லது  பள்ளி வாசல்ல  பக்கத்துல யாராவது இருந்தாலோ,  ஆறு அம்பதுக்கு போட்டோ அப்லோடு ஆகியிருக்கும்.