ஒரு முஸ்லிமின் அடையாளம் எது...? லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஒரு முஸ்லிமின் அடையாளம் எது...? லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், ஆகஸ்ட் 29, 2016

ஒரு முஸ்லிமின் அடையாளம் எது...?

ஒரு முஸ்லிமின் அடையாளம் எது...?

''நீர் முஸ்லிம் என்பதற்கு என்ன அடையாளம் ''என்று ஒருவரிடம் கேட்டால் அதற்க்கு அவரின் பதில் என்னவாயிருக்கும் ..? என் பெயர் அப்துல் ரஹ்மான்  பெயரை வைத்து உனக்கு தெரியாதா ''நான் ஒரு முஸ்லிம் என்று சொல்வார்.

ஒருவரின் பெயரை வைத்து ''இவர் முஸ்லிம் என்று கணிக்க முடியுமா ? பெருமானார் [ஸல்] அவர்களின் காலத்தில் எத்தனை பேர்கள்  ''முஸ்லிம் பெயர்களை தாங்கி கொண்டார்கள் '' ஆனால் அவர்கள் முஸ்லிமாக இல்லை.

ஒருவர் முஸ்லிம் என்பதற்கு  ''அவர் அணிந்த தொப்பியை வைத்து கூறமுடியுமா ?   நிச்சயமாக அப்படியும் சொல்லிவிட முடியாது! ஒரு முஸ்லிம் தொப்பி போடுவார் , போடாமலும் இருப்பார்.