சுவனக்கோட்டை யாருக்கு? லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சுவனக்கோட்டை யாருக்கு? லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், ஜனவரி 13, 2016

சுவனக்கோட்டை யாருக்கு?[தொடர்ச்சி.....]இறுதிப் பகுதி]

அல்லாஹ்வின் கருணை ,அன்பு , நேசம் .
சுவனக்கோட்டை  யாருக்கு என்பதை
இதன் மூலம் அறியலாம்..
மன்னிப்பை நாம் மனபூரவாமாக
அள்ளித் தெளிக்கலாம்...
  அல்லாஹ்வின் திருபெயரால் ஆரம்பம் செய்கிறேன்...

அல்லாஹ்  கூறுகின்றான்..
''என் அடியார்களே! [உங்களில்] எவரும் வரம்பு மீறி தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்ட போதிலும், அல்லாஹ்வுடைய ரஹ்மத்தில் அவர் நம்பிக்கையிழக்க வேண்டாம்- நிச்சயமாக அல்லாஹ்  பாவங்கள் யாவையும் மன்னிப்பான்- நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவன்,, மிக்கக் கருணையுடையவன்'' [என்று நான் கூறியதை நபியே ] நீர் கூறுவீராக .
39..53]
இந்த ஆயத்தை ஆழமாக சிந்தித்துப் பார்க்கவும். யாராவது அப்படி அதிகமாக பாவங்கள் செய்து , ''இதுவரை நான் நிறைய பாவங்கள் செய்துவிட்டேன் இனி என்னை அல்லாஹ்  எங்கே மன்னிக்க போகிறான் என்று எண்ணிவிடக் கூடாது. அல்லாஹ்  மிக்கக் கருணையுள்ளவன் என்பதை மேலே கூறியுள்ள வசனம் ஒன்று போதும். அதே நேரத்தில்  நிறைய பாவங்கள் செய்யலாம் என்று அர்த்தம் கொள்ளக் கூடாது.  பாவங்கள் செய்துக் கொண்டு பிறகு பாவமன்னிப்பு கோரலாம் என்று இருந்துவிடக் கூடாது. ஒருவருக்கு எப்பொழுது, எப்படி மரணம் வரும் என்று சொல்ல முடியாது. கவனமாக மனதில் பதிய வைத்துக் கொள்ளவும்!

செவ்வாய், ஜனவரி 12, 2016

சுவனக்கோட்டை யாருக்கு?

அல்லாஹ்வின் திருபெயரால் ................
மன்னிப்பின் விரிந்த எல்லை ..
அல் அஃபுவ்  எனும் திருபெயரைத்தான் பெயராகக் கொண்டிருக்கும் இறைவனது மன்னிப்பு என்பது கற்பனையில்கூட நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு விரிந்த எல்லை கொண்டது. மூஸா [அலை] அவர்கள் அல்லாஹ்விடம் கேட்டார்கள். யா அல்லாஹ் ! உன்னை வழிபடும்  ஒரு நல்லடியான் உன்னை என் இறைவா! என்று அழைத்தால் நீ அவனுக்கு எவ்வாறு பதிலளிப்பாய்?.. அல்லாஹ்  கூறினான், இதோ வந்துவிட்டேன் என் அடியானே! என்று பதில் கூறுவேன் . மூஸா [அலை] கேட்டார்கள் அவ்வாறெனில் ஒரு பாவி உன்னை அழைத்தால் என்ன பதில் கூறுவாய்? ..அல்லாஹ்  கூறினான், இதோ வந்துவிட்டேன் என் அடியானே! இதோ வந்துவிட்டேன் , வந்துவிட்டேன் , என் அடியானே! என்று பதில் கூறுவேன். வியப்புடன் மூஸா [அலை] கேட்டார்கள். இறைவா! நல்லவனுக்கு ஒரு தடவை மட்டும் பதில் தரும் நீ, பாவிக்கு மட்டும் ஏன்  மூன்று முறை பதில் தருகின்றாய்? அல்லாஹ்  கூறினான், நல்லவன் என்னை அழைக்கும்போது அவன் செய்த நற்செயல்களை நினைத்தவாறு அழைக்கின்றான். ஆனால் பாவி எனது மன்னிப்பையும் கருணையையும் மட்டும் நம்பியல்லவா என்னை அழைக்கின்றான்! [இப்னு கஸீர் ]