நேர்மை [அண்ணல் நபி [ஸல்]அவர்கள்] லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நேர்மை [அண்ணல் நபி [ஸல்]அவர்கள்] லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், ஆகஸ்ட் 01, 2016

நேர்மை [அண்ணல் நபி [ஸல்]அவர்கள்]

நேர்மை [அண்ணல் நபி [ஸல்]அவர்கள்]
அல்லாஹ்வின் திருப்பெயரால் .................
இன்று மக்களிடம் சுத்தமாகத் துடைத்தெடுக்கப் பட்டது நேர்மையாக. மக்களுக்கு நன்மை செய்ய வேண்டியவர்களிடம் நீதியைப் பார்க்க முடியவில்லை. அநீதியும் அக்கிரமும் அவர்களின் உள்ளத்தில் நிரந்தரமாக குடிகொண்டு விட்டன. பணமும் பதவியுமே  அவர்களின் குறிக்கோளாக மாறி விட்டது. இப்படிப்பட்ட தலைவர்களைத்தாம் நாம் பார்க்கிறோம். இன்று இந்தியாவில் அநீதிகளும் , அக்கிரமங்களும் , அநியாயங்களும்  தலை விரித்து ஆடுகிறது. பேய்கள் ஆட்சி செய்தால் பிணம் திண்ணும்  கதைதான் ஆகும்! 

1400 ஆண்டுகளுக்கு முன்னால்  வாழ்ந்த அந்த உத்தமர் முஹம்மது [ஸல்] அவர்கள் நேர்மையின் உறைவிடமாகத் திகழ்ந்துள்ளார்கள் . நீதிக்கு மறுபெயராக அவர்கள் வாழ்ந்துள்ளார்கள்.