முஸ்லிம் நரகில் நிரந்தரமாக இருப்பானா? லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
முஸ்லிம் நரகில் நிரந்தரமாக இருப்பானா? லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், மார்ச் 23, 2017

முஸ்லிம் நரகில் நிரந்தரமாக இருப்பானா?


بسم الله الرحمن الرحيم


முஸ்லிம் நரகில் நிரந்தரமாக இருப்பானா?

இணைவைத்தல் கொலை செய்தல் தற்கொலை செய்தல் வட்டி வாங்குதல் விபச்சாரம் புரிதல் மது குடித்தல் மற்றும் பல்வேறு தீமையான காரியங்களை அல்லாஹ் தடைசெய்துள்ளான்.

அடியான் உலகில் வாழும்போதே தான் செய்த பாவத்திலிருந்து விலகி அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரினால் அல்லாஹ் இணைவைப்பு உட்பட அனைத்து பாவங்களையும் மன்னித்துவிடுகிறான். ஆனால் பாவத்திலிருந்து விடுபடாமலும் மனம் திருந்தாமலும் மரணித்தால் அவனை மன்னிப்பதும் மன்னிக்காமல் தண்டிப்பதும் இறைவனுடைய தனிப்பட்ட விருப்பமாகும்.

அல்லாஹ்வுக்கு இழைக்கப்படும் மாபெரும் அநீதியான இணைவைப்பை செய்தவர் அதிலிருந்து மீளாமல் அதேக் கொள்கையில் மரணித்தால் அவனை இறைவன் மன்னிக்கவேமாட்டான். அவன் நரகில் என்றென்றும் நிரந்தரமாக கிடப்பான்.