best articles லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
best articles லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், டிசம்பர் 12, 2016

அருள் வளம் (பரக்கத்) பெறுவது எப்படி?

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! இஸ்லாம் என்பது இறைவனால் மனித குலத்திற்கு அருட்கொடையாக வழங்கப்பட்ட மார்க்கம். இந்த மார்க்கத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம்களாகிய நமக்கு இறைவன் வழங்கி இருக்கிற அருட்கொடைகளில் ஒன்றான பரக்கத்தைப் பற்றியும், அதனை பெறுவதைப் பற்றியும் இந்த உரையிலே பார்க்க இருக்கிறோம்.

அபிவிருத்தியின் அவசியம்
இவ்வுலுகில் வாழ்வதற்கு எத்தனையோ வழிகள் இருக்கின்றன. அதில் ஏதாவது ஒரு வழியை பின்பற்றி மனிதன் வாழ்ந்து கொண்டிருக்கிறான். ஆனால் எல்லாருடைய வாழ்விலும் மகிழ்ச்சி நிலைத்திருப்பதில்லை. வரும் வருமானம் போதுமானதாக இருப்பதில்லை. எவ்வளவு சம்பாதித்தாலும் கடன் இல்லாமல் இருப்பதில்லை. இப்படி ஏராள மானோர் வாழ்ந்து வருகின்றனர்.
நம் வாழ்வில் இந்த குறைகளை இல்லாமல் ஆக்குவதற்கு என்ன வழி முறை இருக்கிறது. இந்த குறை எவ்வாறு போக்குவது? படைத்தவனின் உதவியின்றி இக்குறையை போக்க முடியாது. அவனின் அருள்வளம் (பரக் கத்) நமக்கு கிடைத்துவிட்டால் நம் வாழ்வில் நன்மையை காணலாம். இறை வனின் மறைமுகமான அந்த அருள்வளம் (பரக்கத்) கிடைப்பதற்குரிய வழி என்ன? அவனின் பரக்கத் கிடைக்காமல் போவதற்குரிய வழி என்ன? என்பதை அறிந்தால் பரக்கத்தை நிரந்தரமாக்கிக் கொள்ள நாம் முயற்சிக்கலாம். இதற்கு மக்களிடம் இருக்கும் வழிமுறைகள் என்ன? நபிகளார் காட்டிய வழி முறைகள் என்ன?

ஞாயிறு, டிசம்பர் 11, 2016

மலக்குகளின் துஆவைப் பெறுவோர்கள்


அல்லாஹ்வின் திருப்பெயரால்.......
இறைவனின் படைப்புகளில் மிக அற்புதமான படைப்பு மலக்குகள் ஆவார்கள். என்னதான் மனிதன் சிறந்த படைப்பாக இருந்தாலும், சிந்திக்கும் திறன் இருந்தாலும் இறைவனுக்கு மாறுசெய்யும் குணம் அவனிடம் அதிகமாகவே இருக்கிறது. ஆனால் மலக்குமார்கள் இறைவனின் கட்டளையை அப்படியே பின்பற்றி நடப்பவர்கள். இறைவனுக்கு மாறு செய்யவே தெரியாதவர்கள்.
திருக்குர்ஆனில் இறைவன் இவர்களைப் பற்றி கூறும்போது தங்கள் இறைவனின் கட்டளைக்கு மாறுசெய்ய மாட்டார்கள் என வர்ணிக்கின்றான். இவர்கள் இறைவனின் வேலையாள்கள். இந்த நல்லோர்கள் நமக்காக துஆ செய்தால் எப்படி இருக்கும். மலக்குகள் நமக்காக துஆ செய்வது சாதாரண விஷயமா? அவர்களின் துஆவில் நாம் இடம்பெறுவது நமக்கு கிடைத்த மிகப்பெரும் பாக்கியமே. ஏனெனில் இறைவன் நமக்காக துஆ செய்யுமாறு கட்டளையிட்டால் மட்டுமே மலக்குகள் துஆ செய்வார்கள். தாமாக துஆ செய்ய மாட்டார்கள்.
நம் மக்கள் ஹஜ்ரத்மார்களின் துஆவில் இடம்பிடிப்பதை பாக்கியமாக கருதி அவர்களிடம் கூனிக்குறுகி ஹஜ்ரத் எனக்காக துஆ செய்யுங்கள் என்று கொஞ்சுகிறார்கள்; குழைகிறார்கள். மக்களை ஏமாற்றி வயிற்றுப்பிழைப்பு நடத்தும் தொழிலில் முதல் இடம் வகிக்கும் தரங்கெட்ட முரீதுகளின் துஆ தங்களுக்கு கிடைப்பதற்காக அவர்களின் காலடியில் தவமாய் தவம் இருக்கி றார்கள். இவர்களின் துஆவை அல்லாஹ் கண்டுகொள்வானா? என்பது தனி விஷயம்.

ஞாயிறு, நவம்பர் 27, 2016

பயிரிடப்பட வேண்டிய காலம்👌👍🚀🚓 [படிக்க தவறாதீர்கள்!]

பயிரிடப்பட  வேண்டிய காலம்👌👍🚀🚓 [படிக்க தவறாதீர்கள்!]
மனித வாழ்வு, ஏற்றத் தாழ்வுகளை கொண்டது. வாழ்க்கையில் சில நேரங்களில் சிலவற்றை இழப்போம், சிலவற்றை பெறுவோம். ஆனால், ஒரே ஒரு இறைவனின் அருள் மட்டுமே இழந்தால், மீண்டும் பெற முடியாமல் போய் விடுகிறது. அது தான் காலம் என்பதை நாமெல்லாம் மிகவும் நன்றாக அறிந்து வைத்திருக்கிறோம். எனவே தான் மனிதன் மிகவும் மதிக்கும் செல்வமான பொன்னோடும், கண்ணோடும் ஒப்பிட்டு, காலம் பொன் போன்றது எனவும், கண் போன்றது எனவும் சித்தரிப்பதை பார்க்கிறோம்.
பல நாட்கள் செய்து கொண்டிருந்த பணிகளை சில நோடி பொழுதுகளில் செய்யக்கூடியளவிற்கு காலத்தை சுருக்கி விட்ட நவீன உலகத்தில், தினங்களை கொண்டாடுவதில் தான் காலத்தை கழிக்கின்றனர். பெரும்பாலோர். அனுதினமும் ஏதாவது ஒரு பெயரில் தினங்களை கொண்டாடும் மனிதர்கள், இந்த காலத்தை உரிய வகையில் பயன்படுத்தாவிட்டால் திண்டாடும் நிலை தான் ஏற்படும் என்பது தான் நிதர்சனம்.

சனி, நவம்பர் 26, 2016

இஸ்லாமும் மருத்துவமும் 🍍🌿🌲🐥

இஸ்லாமும் மருத்துவமும் 🍍🌿🌲🐥
செல்வங்களிலே மிகப்பெரும் செல்வமாக மக்களால் கருதப்படுவது நோயற்ற ஆரோக்கியமான வாழ்வு. நிழலின் அருமை வெயிலில் அவதியுறுபவனுக்குத்தான் தெரியும் என்பார்கள். அதுபோல் நோயாளிகளிடம் கேட்டால்தான் நோயற்ற வாழ்வின் அருமை பெருமை புரியும்.
பல கோடிகளுக்கு அதிபதிகளாக இருந்தும் தங்களைப் பீடித்துள்ள நோய்களின் காரணத்தால் தாங்கள் விரும்பியதை உண்டு அனுபவிக்க முடியாத அவஸ்தையை அவர்களிடம் கேட்டால் மனம் வெதும்பி அது பற்றி விவரிப்பார்கள்.

விரும்பியதை உண்டு மகிழ முடியாது என்பது மட்டுமல்ல, நோயினால் விரும்பிய செயல்களை ஆற்றவும் இயலாது போகும்.
எனவேதான் இஸ்லாமும் நோயற்ற வாழ்வை பெரும் பாக்கியம் என்று சொல்கிறது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மனிதர்களில் அதிகமானோர் இரண்டு அருட்செல்வங்களின் விஷயத்தில் (ஏமாற்றப்பட்டு) இழப்புக்குள்ளாகி விடுகின்றனர்.
1. ஆரோக்கியம்
2. ஓய்வு
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: புகாரி 6412

இன்றைக்கு நோயில்லா வாழ்க்கை என்பது பகல் கனவு என்று கருதுமளவு அரிய விஷயமாகி விட்டது.