ஞாயிறு, அக்டோபர் 18, 2020

மறு உலகப் பயணம் திரும்ப வர முடியாத ஒருவழிப் பயணமே!



வாழ்வாதாரம் தேடி வ


ளைகுடா நாடுகளுக்குச் செல்பவர்கள் வாக்களிக்கப்பட்ட வேலைகளுக்கு மாற்றமான வேலைகளில் மாட்டிக் கொள்வார்கள். வங்கியில் பியூன் வேலை என்று நம்பி வந்தேன்; ஆனால் எனது கஃபீல் வயற்காட்டில் தூக்கிப் போட்டு விட்டான்.


கார் டிரைவர் வேலைக்கு வந்தேன்; ஆனால் எனது கஃபீல் என்னை காட்டில் ஆடு, ஒட்டகம் மேய்க்கும் வேலையில் தூக்கிப் போட்டு விட்டான். கம்பெனியில் மேனேஜர் என்று சொல்லி என் ஏஜண்ட் என்னை அனுப்பி வைத்தான்; இங்கு என்னை சமையல் வேலையில் தள்ளி விட்டான்.


எட்டு மணி நேர டூட்டி, இரண்டு மணி நேரம் ஓட்டி (ஓவர் டைம்) என்றார்கள்; ஆனால் இங்கு 18 மணி நேர டூட்டி; உண்ண உணவில்லை; உறங்க நேரமில்லை. பகல் நேரத்தில் கடுமையான வெயில்! இரவு நேரத்தில் தாங்க முடியாத குளிர்!

வெள்ளி, ஆகஸ்ட் 21, 2020

நபிகளார் சந்தித்த சங்கடங்கள்..!



ஒவ்வொரு மனிதனும் அவரவர் வாழ்கையில் ஏராளாமான சங்கடங்களை சந்தித்து இருக்கிறோம்.சில சங்கடங்கள் நம்மையே பாதித்து இருக்கிறது என்றாலும் அதிலிருந்து ஏராளாமான பாடங்களை கற்று இருப்போம். அதே போன்று தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய வாழ்கையிலும் சில நிகழ்வுகள் நடந்து இருக்கின்றன. அந்த நிகழ்வுகள் உண்மையில் நமக்கு கற்றுத்தரும் பாடம் என்ன.? என்பதை  காண்போம்..


நவிகளாரின் நற்குணம் 


முஹம்மதே.! நீர் மகத்தான குணத்தில் இருக்கிறீர்.


(திருக்குர்ஆன்:68:4.)


கடுகடுப்பானவராகவும் கடின உள்ளம் கொண்டவராகவும் நீர் இருந்திருப்பீரானால் உம்மிடமிருந்து அவர்கள் வெருண்டோடியிருப்பார்கள்…

வியாழன், ஆகஸ்ட் 13, 2020

மறுமையின் முதல் நிலை மண்ணறை.!

 மறுமையின் முதல் நிலை மண்ணறை.!


மண்ணறை வேதனையிலிருந்து முஸ்லிம்கள் அனைவரும் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுவது மிகமிக அவசியமாகும். ஏனென்றால் நபி (ஸல்) அவர்களின் பல்வேறு ஹதீஸ்கள் மண்ணறையில் நடைபெறும் வேதனைகள் பற்றி எச்சரிக்கின்றன. எனவே முஸ்லிம்களாகிய நாம் இவைகள் பற்றி அறிந்து அதனிலிருந்து பாதுகாப்பு பெற முயலவேண்டும்.


மண்ணறை வேதனை


“காலையிலும், மாலையிலும் அவர்கள் நரக நெருப்பின் முன் கொண்டுவரப்படுவார்கள்; மேலும் நியாயத் தீர்ப்பு காலம் நிலைபெற்றிருக்கும் நாளில் ‘ஃபிர்அவ்னுடைய கூட்டத்தாரைக் கடினமான வேதனையில் புகுத்துங்கள்’ (என்று கூறப்படும்)”


(அல்-குர்ஆன் 40:46)

வெள்ளி, ஜூலை 10, 2020

மனிதநேயம்

மனிதநேயம்!!
கவின் என்பவர் வேலைத்தேடும் ஒரு பட்டதாரி இளைஞர். அவர் தன் வீட்டிற்கு செல்லும் வழியில் தொலைவிலிருந்த மின்கம்பத்தில் ஒரு சிறு துண்டு காகிதம் எழுதி தொங்கவிடப்பட்டிருந்ததை பார்த்தார். தொலைவில் இருந்ததால் அதில் என்ன எழுதியிருக்கிறது என்று அவருக்கு தெரியவில்லை. அதை தெரிந்து கொள்வதற்காக அதன் அருகில் சென்று பார்த்தார்.

அக்காகிதத்தில் அதில் என்னுடைய 50 ரூபாய் தொலைந்துவிட்டது. யார் கையிலாவது கிடைத்தால் தயவு செய்து இந்த முகவரியில் கொண்டு வந்து தருமாறு கேட்டு கொள்கிறேன். மேலும், அக்கடிதத்தில் தனக்கு கண்பார்வை சரியாகத் தெரியாது எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. 

திங்கள், ஜூலை 06, 2020

மனஅழுத்தம் என்ன செய்வது ?



வேலைகளைத் தள்ளி வைப்பது மன அழுத்தத்தை அதிகரிக்கும். செய்ய வேண்டியதை தாமதப் படுத்தாமல் செய்யுங்கள்.
எந்த ஒரு வேலையையும் முன் கூட்டியே திட்டமிடுங்கள். செல்லவேண்டிய இடத்திற்கு சற்று முன்கூட்டியே செல்ல பழக்கப் படுங்கள். பத்து நிமிடத்தில் செல்லமுடிந்த இடத்துக்கு இருபது நிமிடத்திற்கு முன்பாகவே புறப்படுங்கள்.

வீட்டில் பொருட்களை அதனதன் இடத்தில் ஒழுங்காக அடுக்கி வையுங்கள். அவசரமாய் தேடுகையில் அகப்படாத பொருள் மன அழுத்தம் தரும்.

குழப்பம், கவலைகளை உள்ளுக்குள் புதைக்காமல் கணவன்/மனைவி அல்லது நண்பர்களிடம் பகிருங்கள்.