சனி, ஜூன் 19, 2021

ஒரு முஸ்லிம், இஸ்லாத்தின் அடையாளமாவானா?

 






லண்டனில் வசிக்கும் ஒரு முஸ்லிம் தான் குடியிருக்கும் இடத்திலிருந்து வேலை செய்யும் இடத்திற்கு தினமும் பேருந்தில் பயணம் செய்வார், குடியிருக்கும் இடத்திற்கு புதிதாக வேலை மாற்றலாகி வந்திருந்தார் அவர்.


பேருந்தில் சில நாட்களில் அதிகமான பயணிகள் இருப்பார்கள்; சில நாட்களில் ஒருசிலர் இருப்பார்கள். ஆனாலும் தொடர்ந்து அவர் ஒரே பேருந்தில் குறிப்பிட்ட நேரத்தில் பயணம் செய்தார்.

சனி, ஜூன் 12, 2021

ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்

 



  ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும். இந்த குறளில் கூறப்படும் ஒழுக்கத்தின் மதிப்பை அறிந்தவர்களுக்கு இஸ்லாம் என்றால் என்ன என்பது எளிதாகப் புரிந்துவிடும். இன்று தனி நபர் வாழ்விலும் குடும்ப வாழ்விலும் சமூக வாழ்விலும் ஒழுக்கம் என்பது இல்லாமல் போனதால் நாட்டில் தீமைகள் கட்டுக்கடங்காமல் பெருகுவதையும் அதனால் பெரும்பாலான மக்கள் விரக்தியின் விளிம்புக்கே சென்றிருப்பதையும் நாம் அறிவோம். இன்று நாம் அனைவரும் விடைதேடிக் கொண்டிருக்கும் கேள்வி இதுவே: மனித வாழ்வில் அந்த ஒழுக்கத்தை எவ்வாறு உண்டாக்குவது?

வீட்டினுள் நுழையும் போது கூறவேண்டியது

 வீட்டினுள் நுழையும் போது கூறவேண்டியது : اَللّٰهُمَّ اِنِيْ اَسْاَلُكَ خَيْرَ الْمُوْلِجِ وَخَيْرَ الْ مُخْرِجِ بِسْمِ اللّٰهِ وَلَجْنَا وَبِسْمِ اللّٰهِ خَرَجْنَا وَعَلَى اللّٰهِ رَبَّنَا تَوَكَّلْنَا۰ " எவரேனும் தம் வீட்டிற்கு திரும்பி வந்து ( உள்ளே ) நுழையும் பொழுது , ' அல்லாஹூம்ம இன்னீ அஸ்அலுக ஃகய்ரல் மூஃலிஜி வஃகய்ரல் முஃக்ரிஜி பிஸ்மில்லாஹி வலஜ்னா வபிஸ்மில்லாஹி ஃகரஜ்னா வ அலல்லாஹி ரப்பனா தவக்கல்னா ' ( இறைவா ! நிச்சயமாக நான் வீட்டினுள் நுழைவதில் நன்மையையும் , வெளியில் புறப்படுவதில் நன்மையையும் உன்னிடம் வேண்டுகிறேன் . அல்லாஹ்வின் பெயரைக் கொண்டு நாம் உள்ளே செல்கின்றோம் . அல்லாஹ்வின் பெயரைக் கொண்டு நாம் வெளியில் புறப்படுகிறோம் . மேலும் , நம் இறைவனான அல்லாஹ்வின் மீதே நாம் நம்பிக்கையும் கொண்டிருக்கிறோம் !) என்று கூறிய பிறகு தம் குடும்பத்தினருக்கு ' ஸலாம் ' கூறவும் " என்று கூறினார்கள் . அறிவிப்பவர் : ஹழரத் அபூ மாலிகில் அஷ்அரீ ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள் . ஆதாரம் : அபூதாவூத் . " மகனே ! நீர் உமது வீட்டாரிடம் சென்றாலும் ஸலாம் கூறவும் . உமது ஸலாம் உமக்கும் , உமது வீட்டாருக்கும் அபிவிருத்தி நல்கக் காரணமாகும் " என்று நபிபெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் என்னிடம் கூறினார்கள் . அறிவிப்பவர் : ஹழரத் அனஸ் ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள் . ஆதாரம் : திர்மிதீ . 

புதன், பிப்ரவரி 03, 2021

தன்னம்பிக்கை

 




என்ன வாழ்க்கை இது என்று

நொந்து கொள்பவர்களுக்காக

இந்த தன்னம்பிக்கை பதிவு.


கடைசி வரை படியுங்கள்

அந்த பெண்ணின் அசாத்திய

மன துணிச்சல் நம்முள்ளும்

ஊடுருவி உற்சாகப்படுத்தும்...

ஞாயிறு, அக்டோபர் 18, 2020

மறு உலகப் பயணம் திரும்ப வர முடியாத ஒருவழிப் பயணமே!



வாழ்வாதாரம் தேடி வ


ளைகுடா நாடுகளுக்குச் செல்பவர்கள் வாக்களிக்கப்பட்ட வேலைகளுக்கு மாற்றமான வேலைகளில் மாட்டிக் கொள்வார்கள். வங்கியில் பியூன் வேலை என்று நம்பி வந்தேன்; ஆனால் எனது கஃபீல் வயற்காட்டில் தூக்கிப் போட்டு விட்டான்.


கார் டிரைவர் வேலைக்கு வந்தேன்; ஆனால் எனது கஃபீல் என்னை காட்டில் ஆடு, ஒட்டகம் மேய்க்கும் வேலையில் தூக்கிப் போட்டு விட்டான். கம்பெனியில் மேனேஜர் என்று சொல்லி என் ஏஜண்ட் என்னை அனுப்பி வைத்தான்; இங்கு என்னை சமையல் வேலையில் தள்ளி விட்டான்.


எட்டு மணி நேர டூட்டி, இரண்டு மணி நேரம் ஓட்டி (ஓவர் டைம்) என்றார்கள்; ஆனால் இங்கு 18 மணி நேர டூட்டி; உண்ண உணவில்லை; உறங்க நேரமில்லை. பகல் நேரத்தில் கடுமையான வெயில்! இரவு நேரத்தில் தாங்க முடியாத குளிர்!