நல்ல மனைவியின் நல்ல தன்மைகள்


 நல்ல மனைவியின் நல்ல தன்மைகள் 

 கணவர் வீட்டிற்கு வருவதற்கு முன் அவர் சந்தோஷப்படும் அளவுக்கு நல்ல ஆடைகள் அணிந்து தன்னை அழகு படுத்திக் கொள்ள வேண்டும் கணவர் வீட்டிற்கு வந்தபின் மனைவி அழகாக கண்கவரும் நிலையில் பார்க்கும் பொழுது உடல் அசதிகள் உள்ளத்தின் சுமைகள் கவலைகள் நீங்கி அதிக பாசம் நேசம் உள்ளவராக ஆகிவிடுவார் சில பெண்கள் எங்களுக்கு சமையல் துணி துவைப்பது வீட்டை சுத்தப்படுத்துவது பிள்ளைகளை பராமரிப்பது போன்ற பல பொறுப்புகள் இருப்பதால் நாங்கள் கணவன்மார்களே வரவேற்பது சந்தோஷப்படுத்துவது எப்படி முடியும்? என்று கேட்கிறார்கள்.

 இவ்வாறானவர்கள் சிரமமாக இருந்தாலும் தன் வேலைகளை கணவர் வீட்டிற்கு வருவதற்கு முன்பே முடித்துக் கொள்ள வேண்டும் இதனால் பல நன்மைகள் உண்டாகும் என்பதை மறக்கவேண்டாம் வீட்டிற்கு வந்த பின் சந்தோஷமான நிம்மதியான நிலை தென்படாவிட்டால் கணவரின் உள்ளத்தில் ஷைத்தானின் ஊசலாட்டங்கள் தவறான எண்ணங்கள் உண்டாகி மனைவியை வெறுக்கும் நிலை ஏற்படுவது ஆச்சரியமில்லை மனைவிமார்களின் உதடுகளில் எப்போதும் புன்சிரிப்பு இருப்பது மிக நல்லது சுளித்த கடுகடுப்பான முகம் சரியில்லை இந்த புன் சிரிப்பு சிரித்த முகம் வீடுகளில் நற்பாக்கியம் சந்தோஷ மனநிலையை உருவாக்குகிறது ஆடை மற்ற அலங்காரத்தை விட முயற்சி மிக முக்கியம் கணவன் மனைவியின் முக மலர்ச்சி சந்தோஷத்தை பார்த்தால் உள்ளதா நேசிப்பார் என் மனைவி எனக்கே சொந்தம் என்று நிறைவான எண்ணம் ஏற்படும்.

 இந்தப் புன்சிரிப்பு முகமலர்ச்சி மறுமையிலும் நன்மைக்கு காரணமாகும் புன்சிரிப்பை தர்மத்தில் சேர்க்கப்பட்டுள்ளது நீங்கள் உங்கள் சகோதரியிடம் புன்சிரிப்புடன் முகமலர்ச்சியுடன் நடந்து கொள்வது தர்மம் ஆகும் என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். ஒரு பெண் தூய்மையான உள்ளதால் உடல் ஆடை சுத்தத்தால் புன்சிரிப்பு முகம் மலர்ச்சியால்   அனைவரின் அன்பையும் பெறலாம் . முகமலர்ச்சியுடன் நடந்து கொள்வது நல்ல விஷயங்களைப் பேசுவது அவர்களுக்கு அன்பளிப்பு வழங்குவதை விட சிறந்ததாகும் .


 வீடுகளில் சந்தோஷமான மகிழ்ச்சியான நிலைகள் இருக்க வேண்டும் என்று ஒவ்வொரு கணவரும் கணவரின் சார்ந்த உறவினர்கள் உள்ளதால் விரும்புகிறார்கள். இந்த உயர்ந்த நல்ல விருப்பத்தை கவலைகள் சஞ்சலங்கள் நிரம்பியதாக மாறி விடுவதற்கு மனைவிமார்கள் தான் காரணம் என்றால் தவறில்லை மனைவி தன் யோசனை தன் விருப்பத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து தன் ஆசைகள் அனைத்தையும் கனவை நிறைவேற்றி செயல்படவேண்டும் என்று எதிர்பார்த்து கணவருடன்  விரோதமாக நடப்பதால் செழிப்பான நிலைகள் மாறி மோசமான நிலைகள் அன்பு பாசம் மாறி விரோதம் அமைதி நிம்மதி பறிபோய் வெறுப்பு குழப்பம் ஏற்பட்டு  பிள்ளைகளும் அடங்காதவர்கள் ஆகுவது கண்கள் காணும் காட்சி ஒரு நல்ல மனைவி தன்னை அடக்கிய ஆசைகள் விருப்பங்கள் எண்ணங்களை விட்டு கொடுப்பவராக தன் கணவனுக்கு முழுக்க முழுக்க கட்டுப்பட்டவன் கணவனுக்காக தன்னை அர்ப்பணித்த வீடு குடும்ப விஷயங்களில் அக்கறை உள்ளவராக மிக கவனமாக நடந்து கொள்வதால்  மிகச் சிறந்த தன்மைகள் நல்ல பயன் தரக்கூடியவை கள் .


 திருமணம் உயர்ந்த நோக்கத்தின் அடிப்படை வணக்கங்களில் ஒரு வணக்கம் அல்லாஹ்வின் மாபெரும் அருள் அல்லாஹ்வின் நெருக்கம் அன்பை பெற    வழி கணவன் மனைவி இரு சாரர்களிலும் அன்பு பாசம் நேசம் அற்பணிப்பு தன்மை போன்றவைகள்  உண்டாகுவது தான் திருமணத்தின் அடிப்படையான உண்மையான நோக்கமாகும். இம்மை மறுமையின் நற்பாக்கியங்கள் வெற்றிகளுக்கு காரணம் ஒரு முஸ்லிமான பெண் தன் கணவருக்கு வழிபட்டு அவர் சந்தோஷப்படி செயல்பட்டு தொல்லை கொடுப்பதில் இருந்து விடுவித்துக் கொண்டால் இம்மை மறுமையில் அல்லாஹ்வின் சந்தோஷம் திருப்தியை பெற்றவர்களாக ஆகிவிடுவார் முஸ்லிமான பெண் தன் கணவருக்கு கட்டுப்பட்டு நடக்கும் அளவுக்கு இல்லற வாழ்க்கையில் வெற்றி பெற முடியும். கணவரின் கடமைகளை உணர்ந்து செயல்படும் அளவுக்கு உங்களின் மதிப்பு மரியாதை அன்பு பாசம் அவர் உள்ளத்தில் அதிகமாகும்.


கருத்துகள்