எனது மனைவியை விட அழகானவர்களாக ஏனைய பெண்களை காண்கிறேன்.... ஏன்?

 



எனது மனைவியை விட அழகானவர்களாக ஏனைய பெண்களை காண்கிறேன்.... ஏன்?


 கட்டாயம் வாசிக்கவும்


அறிவுஞானமும் முதிர்ச்சியும் கொண்ட ஒரு சன்மார்க்க மேதையிடம் ஒருவன் சென்று, தனது பிரச்சினையை இவ்வாறு முறைப்பட்டான்.


"எனது மனைவியை முதன் முதலாய் பார்த்து மயங்கிய போது, அவளை போன்ற ஒரு பெண்ணை இறைவன் உலகில் படைக்கவில்லை என்பது போல் உணர்ந்தேன்...


அவளுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்ட போது, அவளை போன்ற பலரை கண்டேன்...


அவளை திருமணம் முடித்த பின்னர் அவளை விட அழகான பலரை கண்டேன்...


திருமணம் முடித்து சில வருடங்கள் கடந்த பின்னர், மற்ற பெண்கள் அனைவரும் எனது மனைவியை விட  அழகானவர்களாக எனக்கு தெரிந்தார்கள்..."


ஏன் எனக்கு இது போன்றதொரு கையறு நிலை ஏற்பட்டிருக்கின்றது?!


#ஞானி: இதனை விட கசப்பான ஒரு விடயத்தை நான் உனக்கு சொல்கிறேன். கேள்..


உலகில் உள்ள பெண்கள் அனைவரையும் நீ திருமணம் முடித்துவிட்டாய் என்று வைத்துக்கொள்.  அவர்கள் அனைவரையும் விட அழகானதாகவும் ரம்யமானதாகவும்

'வீதிகளில் தறிகெட்டு திரிகின்ற நாய்கள்' உனக்கு தென்படும்..!


ஏனென்றால்,பிரச்சினை இருப்பது உனது மனைவியிடத்தில் அல்ல....உன்னிடத்தில்.


மனிதனுக்கு பேராசை மிக்க உள்ளமும் , மதி மயங்கும் பார்வையும் வழங்கப்பட்டுள்ளது.

அவை இறைவனுக்கு முன்னால் தமது வெட்க உணர்வை இழந்து விடுவது தான் பிரச்சினை. இவ்வாறான ஒருவனின் கண்களை மண்ணறையின் மண் மாத்திரம் தான் மறைக்க முடியும்.


ஆரம்பத்தில் இருந்ததை போன்று, உலகிலேயே அழகான பெண்ணாக உனது மனைவியை மாற்றுவதற்கு ஒரு விடயத்தை சொல்லித் தரட்டுமா?


அவன்: ஆம்.சொல்லுங்கள்.


#ஞானி : உனது பார்வையை தாழ்த்திக் கொள்


அல்குர்ஆன் குறிப்பிடுகின்றது.


" நபியே நீங்கள் விசுவாசிகளுக்கு அவர்களுடைய பார்வையை தாழ்த்திக் கொள்ளுமாறும், அவர்களுடைய கற்பை பேணிக்கொள்ளுமாறும் சொல்லுங்கள். அதுவே அவர்களை தூய்மைப்படுத்தும். அவர்கள் செய்பவற்றை அல்லாஹ் மிகவும் நுணுக்கமாக கண்காணித்து கொண்டிருக்கின்றான்."


நீ எதை செய்தாலும் உனது கையில் இல்லாதவற்றை தான் மிக அழகானதாகவும் மிக சிறந்ததாகவும் காண்பாய். ஆனால் அவற்றை நீ பெற்றுக் கொள்ளும் போது அவை உனது கண்களுக்கு சாதாரணமானதாகவே தென்படும்.


உன்னிடம் இருப்பதை பொருந்திக் கொள்.

உன்னை கப்ரில் கொண்டு போய் மூடும் வரைக்கும் அழகின் பின்னாலும், உலக இன்பங்களின் பின்னாலும் நீ அலைந்து திரிந்து கொண்டே தான் இருப்பாய்.


சுயநலவாதியாக இருக்காதே!

உன்னைப்போன்றே அடுத்தவர்களுக்கும் ஆசாபாசங்கள் இருக்கின்றன என்பதை புரிந்து செயற்படு.


இவை அனைத்தையும் விட உன்னதமானதொரு விடயத்தை சொல்லித் தருகின்றேன். கேள்..


இறைவனை வணங்குவதிலும், நல்ல காரியங்கள் செய்வதிலும் திழைத்திரு. அதற்காக உனது நேரங்களை செலவிடு..

இதற்காகவே வாழ்ந்தவர்களை தவிர இதன் சுவையை வேறு எவரும் அறிய மாட்டார்கள்.


கருத்துகள்