பெற்றோர்களே உங்கள் பிள்ளைகளை உயர்பண்புகளை கொண்டு வளர்ப்பீர்கள் !

பெற்றோர்களே உங்கள் பிள்ளைகளை உயர்பண்புகளை கொண்டு வளர்ப்பீர்கள் !
அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பம் செய்கிறேன்.
உபகாரம், மகிழ்ச்சி, போதுமென்ற தன்மை ஆகிய குணங்களால் அலங்காரம் பெற்ற உள்ளங்களைக் கொண்டுதான் பிள்ளைகளை மிக உயர்ந்த ஸ்தானத்தில் பெற்றோர்களால் கொண்டுபோக முடியும்.


பிள்ளைகளுக்கு உலக கல்வியை மட்டும் போதிக்கும் பெற்றோர்களாலாக இருக்கக்கூடாது .   மார்க்க கல்வியை அவசியம் பிள்ளைகளுக்கு போதிக்கவேண்டும் .அதுமட்டுமின்றி ,  ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக பெற்றோர்கள் வாழ்ந்துகாட்டவேண்டும் பிள்ளைகளுக்கு முன்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நற்பாக்கியம் அல்லாஹ்விடமிருந்து  கிடைக்கிறது. ஒழுக்கம் பெற்றோர்களிடமிருந்து கிடைக்கிறது.
நூல் அல் அதபுல்முஃப்ராத் )

பிள்ளைகளுக்கு ஒழுக்கம் அவசியம் இருக்கவேண்டும்.

மார்க்க அறிவுள்ள முஸ்லீம் தமது பிள்ளையின் உள்ளத்தினுள் நுட்பமான வழிகளைக் கொண்டு ஊடுருவி உயர் பண்புகளையும் நல்லறிவையும் எப்படி விதைப்பது என்று நிச்சயமாக பெற்றோர்கள் அறிந்திருப்பார்கள் .

குழந்தை வளர்ப்பின் நுட்பமான வழிமுறைகள்:
1 . பெற்றோர் தன்னை அழகிய முன்மாதிரியாக ஆக்க வேண்டும்.
2 . பிள்ளைகளுடன் மனம் விட்டு கலந்து பழக வேண்டும்.
3 . அவர்களை முகமலர்ச்சியுடன் அரவணைத்து அன்பு காட்டவேண்டும்.
4 . அவர்களுக்கு ஊக்கமளித்து உற்சாகமூட்ட வேண்டும்.
5 . அனைத்து பிள்ளைகளுடன் அன்புடன் நடந்து நீதத்தையும் சமத்துவத்தையும் பேணவேண்டும்.
6 . முற்றிலும் பலவீனமடைந்துவிடாமல் நளினமாகவும் கொடூரத்தனமின்றி சற்று கடினமாகவும் அவர்களுக்கு உபதேசித்து நேர்வழிகாட்டி செம்மைப்படுத்த வேண்டும்.

நேர்மையான , திறந்த சிந்தனையுள்ள, பொறுப்புகளை ஏற்றுக் கொள்வதற்கு  தகுதியான , தயாளத்தன்மை பெற்ற நல்ல பிள்ளைகளை இதுபோன்ற சூழ்நிலைதான் உருவாக்க முடியும்.

இஸ்லாமிய அடிப்படையையும் குரானின் கட்டளைகளையும் பின்பற்றும் நல்ல குடுபங்களில் இவ்விஷயத்தை தெளிவாக காணலாம்..

அல்லாஹ்வின் மார்க்கத்தையே நாங்கள் பின்பற்றுவோம். அல்லாஹ்வைவிட  மார்க்கத்தால் மிக அழகானவன் யார்? நாம் அவனையே வணங்குவோம் என்று கூறுவீராக! (அல்குரான் ) 2 :138 )

பெற்றோர்களே ! உங்கள் பிள்ளைகளை உங்கள் மரணத்திற்கு பின்  உங்களுக்காக துஆச் செய்யும் ஒரு ஸாலிஹான பிள்ளைகளாக ஆக்குங்கள்.

கருத்துகள்