வழுக்கி விழும் வாலிபப் பெண்கள்
(கடந்த மே 27-2017 அன்று ஆங்கில இந்து நாளேட்டில் Predators on the prowl on social networking site) ‘சமூக வலைத்தளங்களில் இரை தேடி அலைகின்ற காமுக மிருகங்கள்’ என்ற தலைப்பில் ஒரு செய்தி வெளியானது. அந்தச் செய்தி ஆந்திரா மாநிலத்தில் நடக்கின்ற நிகழ்வுகளைப் படம் பிடித்துக் காட்டியது. பருவ வயதுப் பெண்களை வைத்திருக்கும் பெற்றோர்களுக்கு இது ஓர் எச்சரிக்கை மணி என்பதால் இதை வாசகர்களின் கவனத்திற்கு சமர்ப்பிக்கின்றோம்.)
சமூக வலைதளங்களில் சாதகங்கள், சாதனைகள் நிறைந்து இருப்பது போலவே அதில் பாதகங்களும் படுசாபக்கேடுகளும் நிறைந்திருக்கின்றன. அதற்கு ஓர் எடுத்துக்காட்டு தான் அண்மையில் விஜயவாடாவில் நடந்த ஒரு கோர, கொடூர சம்பவம்.