பசியோடு கழித்த பொழுதுகள்!


= நபித்தோழர் அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “ஒரு நாள் நான் இறைத்தூதர் {ஸல்} அவர்களின் வீட்டிற்கு அவரைக் காண்பதற்காகச் சென்றேன். அப்போது, அண்ணலார் வீட்டில் உட்கார்ந்து தொழுது கொண்டிருந்தார்கள்.

நான் நபி {ஸல்} அவர்கள் தொழுது முடிக்கும் வரை காத்திருந்து விட்டு, தொழுது முடித்த பின் “அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் உட்கார்ந்து தொழ நான் கண்டேனே! உங்களுக்கு என்ன நேர்ந்து விட்டது?” என வினவினேன்.
அப்போது, நபி {ஸல்} அவர்கள் “அபூஹுரைராவே! பசிதான் காரணம்” என்றார்கள். அதைக் கேட்டதும் நான் அழுது விட்டேன். அப்போது, இறைத்தூதர் {ஸல்} அவர்கள் என்னை நோக்கி “அபூஹுரைராவே! இப்போது நான் என்ன சொல்லிவிட்டேன் என்று அழுகின்றீர்கள்? நாளை மறுமை நாளில் கேள்வி கணக்கின் கஷ்டத்தை உணரும் பட்சத்தில் உலகில் பசியோடு இருக்கும் நிலை ஒன்றும் பெரிதாகத் தெரியாது” என்று பதில் கூறினார்கள். ( நூல்: அபூதாவூத்)
= அகழ் யுத்தத்தின் போது அகழ் தோண்டிக்கொண்டிருந்த ஒரு நபித்தோழர் தம்முடைய பசியை முறையிட்டு விட்டு, நபி {ஸல்} அவர்களிடம் தாம் வயிற்றில் கல் ஒன்றை கட்டியிருப்பதைக் காண்பித்தார்.  நபி {ஸல்} அவர்கள் அதே பசிக்காக தாங்கள் வயிற்றில் கட்டியிருந்த இரு கற்களைக் காண்பித்தார்கள். ( நூல்: புகாரி )
= அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "இறைவா! முஹம்மதின் குடும்பத்தாருக்கு (பசியைத் தணிக்கத்) தேவையான அளவு உணவை வழங்குவாயாக!" என்று பிரார்த்தித்தார்கள். (முஸ்லிம்)
==========
“நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“நோன்பையும், தொழுகையையும், தர்மத்தையும் விட சிறந்த அந்தஸ்தில் உள்ள ஒன்றை அறிவித்துத் தரட்டுமா? என்று கூறிய போது நபித்தோழர்கள், ‘ஆமாம்’ என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், ‘பிரிந்திருக்கின்றவர்களுக்கு மத்தியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துதல் என்றார்கள்” (ஆதாரம்: அபூதாவூத்)

உத்தம நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கையை மறந்து வேறு ஒரு கலாச்சார வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பதின் காரணத்தினாலேயே இன்று ''உலகளவில் முஸ்லிம்கள்'' சோதனைகளுக்கு ஆளாக்கப்படுகிறார்கள்.
குழப்பங்கள் நிறைந்த இந்த காலக்கட்டத்தில்  உத்தம நபி (ஸல்) அவர்களின் வாழ்வை கடைப்பிடித்து வாழ்வது எவ்வளவு சிறந்தது ! நாம் முடிந்தளவு செயல்படுத்த வேண்டும்! (சத்திய பாதை இஸ்லாம்)
source:Thiruqurannarchydhimalar.blogspot.com

கருத்துகள்