கியாமத்தின் அடையாளமா

கியாமத்தின் அடையாளமா
கேட்டதை பார்பதை பரப்புபவன் பொய்யன்

இப்போது சமிப காலமாக ஒரு ஹதீஸ் உலாவிக் கொண்டு இருக்கிறது அதாவது

நபி(ஸல்)அவர்கள் சகாபாக்களிடம் பேசிக் கொண்டிருந்த போது.சகாபாக்கள் நபி அவர்களிடம் கேட்டார்கள் கியாமத் நாளின் கடைசி அடையாளம் எதுவென்று? நபி கூறினார் பள்ளியின் வாசல் மூடப்படும் பாங்கு ஓசை கேட்டூம் வீட்டிலே தொழுவார்கள்..ஜூம் ஆ--- லுகர் தொழுகையாக மாற்றப்படும் கொடிய நோய்கள் வந்து கொத்தாக இறப்பார்கள்.... அவ்வப்போது  ஓர் இரவில் மகதி (அலை)அவர்கள் ஊன்றுகோல் ஊன்றி வருவார் அவரை தொடர்ந்து தஜ்ஜால் தோன்றுவான் அதுதான் கியாமத் நாளின் கடைசி அடையாளம் ஆகும்......ஆகையால் தஜ்ஜால் ஆட்சி வந்தது -கியாமத் நெருங்கியது....... ஹதீஸ் 189:17


இங்கு குறிப்பிட்டுல்ல எண் 189:17
எந்த ஹதீஸிலும் இப்படிப்பட்ட எண் இலக்கம் பயண்படுத்தப்படவில்லை.

ஆதாரமற்ற இட்டுக்கட்டப்பட்ட செய்தி

அல்லாஹ் விற்க்கும் அவனது தண்டனைக்கும் அஞ்சிக்கொள்ளுங்கள்

நமது நபியவர்கள் கூறியதை கூட நினைத்து நீங்கள் பயப்படமாட்டீர்களா??

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'என் மீது பொய் சொல்லாதீர்கள்! என் மீது பொய் சொன்னவன் நரகத்தில் நுழையட்டும்!

அறிவிப்பவர் : அலி(ரலி)
ஆதார நூல்கள் : புகாரீ -106, முஸ்லிம் 2)

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'என் மீது கூறும் பொய் (உங்களில்) ஒருவரின் மீதும் கூறும் பொய்யைப் போன்றதன்று. யார் என் மீது வேண்டுமென்றே பொய்யுரைக்கின்றானோ அவன் தன் இருப்பிடத்தை நரகத்தில் ஆக்கிக் கொள்ளட்டும்!'
அறிவிப்பவர் : முகீரா(ரலி)
நூல்கள் : புகாரீ 1291, முஸ்லிம் 5

இந்த நபிமொழிகளை படித்தாவது திருந்துங்கள் அல்லாஹ்விற்கு அஞ்சிக்கொள்ளுங்கள்

பொய்யான செய்திகளை பரப்பாதீர்கள்
இன்னும் நிறைய பொய்யான செய்திகள் , வதந்திகள் வரும்! நாம் இன்னும் மார்க்க கல்வியை அறியாமல், திருக்குரானை படிக்காமல், அண்ணல் நபி (ஸல்) அவர்களின் பொன்மொழிகளை தெரியாமல் இருந்தோம் என்றால் . நிச்சயமாக பித்னாக்களில் நாம் விழுந்துவிடுவோம்! வரும் காலங்களில் ரொம்ப குழப்பங்கள் ஏற்படும் ! வாட்ஸ் ஆப்  மற்றும் முகநூலில் வரும் செய்திகள் பெரும்பாலும் பொய்யாகத்தான் இருக்கிறது! சில முஸ்லிம்கள் ஆர்வ கோளாறினால் சில தகவல்களை பரப்பி வருகிறார்கள்! அவர்களுக்கு அது உண்மையா அல்லது பொய்யா என்று தெரிவதில்லை !

இன்னும் சில காலங்களில் , 'இப்படி வரலாம்... ''தஜ்ஜால் வந்துவிட்டான் இன்ன இடத்தில் இருக்கிறான் என்று பரப்பி விட்டாலும் ஆசிரியப்படுவதிற்கில்லை ! நிறைய முஸ்லிம்கள் பெயரில் போலியான id  வைத்து , தவறான தகவல்களை பரப்பிக்கொண்டு வருகிறார்கள்! தயவு செய்து அவசரப்பட்டு எதையும் தெரியாமல் மற்றவர்களுக்கு ஷேர் செய்யவேண்டாம் !
நன்றி : மக்கள் மீடியா !
சத்திய பாதை இஸ்லாம் 

கருத்துகள்