பெற்றோர்கள் பார்வையில்* *ஸ்கூல்களும்,மதரஸாக்களும்*

 



*பெற்றோர்கள் பார்வையில்*

*ஸ்கூல்களும்,மதரஸாக்களும்*

============================


ஸ்கூல்கள், காலேஜ்கள் எவ்வளவு தூரமாக இருந்தாலும் சரி,

அதிகமான கண்டிஷன்களும், 

அதிகமான பாடச் சுமைகளும், அதிகமான பணம் கட்டி படிக்கின்ற பள்ளிக்கூடங்களில் சேர்க்கவே இன்றைய பெற்றோர்கள் விரும்புகிறார்கள்.


ஆனால்.....

மக்தப் மதரஸாக்கள் 

வீட்டின் பக்கத்தில் இருந்தாலும் சரி அடுத்தடுத்த தெருவில் இருந்தாலும் சரி அதிகமான கண்டிஷன்கள், 

அதிகமான பாடச் சுமைகள், 

எந்த வகையான கண்டிஷன்களும் கட்டணங்களும் இல்லாமல் இருந்தாலும்,

அங்கே பிள்ளையை ஓத சேர்ப்பதற்கு பெற்றோர்கள் முன் வரமாட்டார்கள்.


ஸ்கூல்களில், காலேஜ்களில் அதிக கண்டிஷன் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

ஆனால்.....

மக்தப் மதரஸாக்களில்  எந்தவிதமான கண்டிஷன்களும் இல்லாமல் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்.


ஸ்கூல்களில் காலேஜ்களில் எந்த வகையான விடுப்பும் இல்லாமல் எல்லா நாட்களிலும் மிகச் சரியாக பிள்ளைகள் சென்று படிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். 

ஆனால்...

மக்தப் மதரஸாக்களுக்கு

அவரவர் இஷ்டத்திற்கு வருவோம் போவோம் உஸ்தாத்கள் யாரும் எதுவும் சொல்லக்கூடாது என்று விரும்புகிறார்கள்.


ஸ்கூல்களுக்கு காலேஜ்களுக்கு எவ்வளவு பணம் கட்டவும் தயாராக இருக்கிறார்கள்.

ஆனால்...

மக்தப் மதரஸாக்களில் 

ஒரு சில நூறு ரூபாய்கள் கூட செலவழித்து உஸ்தாது சொல்லும் கிதாபு புக்ஸ்கள் வாங்க அவர்கள் விரும்புவதில்லை.


ஸ்கூல்கள் காலேஜ்கள் அவைகளுக்கான புத்தகங்கள் நோட்டுகளை, அட்டை போட்டு மிகவும் பாதுகாப்பாக அழகாக அமைத்துக் கொடுப்பார்கள். 

ஆனால்.... 

மக்தப்மதரசாக்களின் குர்ஆன் கிதாபுகளை மிகவும் அலட்சியப்படுத்தி, அட்டை போடவோ, அதை பாதுகாக்கவோ செய்ய மாட்டார்கள், கிழிந்து கந்தர்வகோலமானாலும் பிள்ளைகளுக்கு அதை கொடுத்தே அனுப்புவார்கள்.


ஸ்கூல்களுக்கு, காலேஜ்களுக்கு பிள்ளைகளை அனுப்புவதற்காக நேரத்தோடு எழுந்து, உணவு சமைத்து அதற்கான எல்லா ஏற்பாடுகளையும் வியர்வை சிந்தி செய்து அனுப்புவார்கள், ஆனால் மதரஸாக்களுக்கு எந்த வகையான முன்னேற்பாடுகளும் இல்லாமல் உறங்கிக் கொண்டே பிள்ளைகளை மதரஸாவுக்கு போ...மதரசாவுக்கு போ... என்று சொல்லி அனுப்பி வைப்பார்கள்.


ஸ்கூல்களுக்கு காலேஜ்களுக்கு செல்லும் குழந்தைகளை குளிக்க வைத்து, அழகாக டிரஸ் செய்து, பவுடர் அடித்து, சீவிமினிக்கி அழகிய தோற்றத்தில் அனுப்புவார்கள்.

ஆனால்....

மதரஸாவிற்கு இரவு உடையோடு, பழைய அழுக்கு உடையோடு முகம் கழுவியும் கழுவாமலும், பல் விலக்கியும், விலக்காமலும் ஏனோதானோ என்று அனுப்பி வைப்பார்கள்.


ஸ்கூல் காலேஜ்களுக்கு வாசல் வரை வந்து, வாகனங்கள் வரும் இடத்திற்கு வந்து, பிள்ளைகளை சிரித்த முகத்தோடு டாட்டா சொல்லி அனுப்பி வைப்பார்கள்.

மாலையில்

பிள்ளைகள் வரும்பொழுது வாசலில் வந்து பைகள், டிபன் பாக்ஸ் எல்லாம் வாங்கிக் கொண்டு சிரித்த முகத்தோடு உள்ளே அழைத்துச் செல்வார்கள்.

ஆனால்...

மதரஸாவிற்கு அனுப்பும் பொழுதும், திரும்பி வரும் பொழுதும் வாசல் வரைகூட வரமாட்டார்கள்.

திரும்ப வரும் பிள்ளைகளை இன்முகத்தோடு உள்ளே அழைத்துச் செல்லவும் மாட்டார்கள்.


ஸ்கூல் காலேஜ்களில் இருந்து பிள்ளைகள் வீட்டிற்கு வரும் பொழுது இன்று என்ன படித்தாய்? என்ன சொல்லிக் கொடுத்தார்கள்?

என்ன ஹோம் ஒர்க?

என்று ஸ்கூலினுடைய காலேஜினுடைய நிலவரங்கள் எல்லாம் கேட்டு தெரிந்து கொள்வார்கள் 

ஆனால் 

மதரஸாவில் இருந்து வரும் பிள்ளைகளிடத்தில் என்ன ஓதினாய்? என்ன சொல்லிக் கொடுத்தார்கள்? என்ன ஹோம் ஒர்க்? என்றெல்லாம் எதையுமே கேட்க மாட்டார்கள்.


இரவுகளில் பிள்ளைகளை படித்தாயா? ஹோம் ஒர்க் செய்தாயா? என்றெல்லாம் ஸ்கூல் நிலவரங்கள் விஷயத்தில் கவனமாக இருப்பார்கள். 

ஆனால்.... 

இரவு நேரங்களில் பிள்ளைகளை நாளைய பாடம் ஓதினாயா? தெரியுமா? என்று எதைப் பற்றியும் கேட்க மாட்டார்கள்.


பிள்ளைகளின் படிப்பு முன்னேற்றத்திற்காக எந்த தியாகமும், எல்லா தியாகமும் செய்ய முன் வருவார்கள். 

ஆனால்....

பிள்ளைகள் குர்ஆனை கற்றுக் கொள்ள வேண்டும். 

இஸ்லாத்தையும், இஸ்லாத்தின் உடைய சட்ட திட்டங்களையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக

மதரஸாவில் ஓதி முடிப்பதற்காக எந்த வகையிலும் தியாகம் செய்ய முன்வர மாட்டார்கள்.


இதுதான் இன்றைய முஸ்லிம்கள் தங்களுடைய பிள்ளைகளின் மார்க்க கல்வி முன்னேற்ற

விஷயங்களில் உள்ள ஈடுபாடுகள்.


இன்னும் சொல்ல ஏராளம் இருக்கிறது. 

போதும் என்றே நினைக்கிறேன்.

புரிந்து கொள்வார்கள் பெற்றோர்கள்.


ஹாபிழ் 

M,S, முஹம்மது ரபீக், மிஸ்பாஹி.


கருத்துகள்