ஒரு முஸ்லிம் தனக்குத் தேவையற்றதில் ஈடுபடமாட்டார் .

ஒரு முஸ்லிம் தனக்குத் தேவையற்றதில் ஈடுபடமாட்டார் .

தனது இரட்சகனின் திருப்பொருத்தத்தை மட்டுமே இலட்சியமாகக் கொண்டு தனது ஈமானை வலுப்படுத்துவதில் ஆர்வமுடைய முஸ்லிம் தனக்குத் தேவையற்ற விஷயங்களில் ஈடுபடமாட்டார். தனிமனித சுதந்திரத்தைப் பாதிக்கும் வகையில் தனது மூக்கை நுழைக்காமல் பிறரைப் பற்றி பேசப்படும் வதந்திகளில் ஆர்வம் காட்டாமல் விலகி நிற்பார் . இவ்வாறான இழி குணங்களிலிருந்து மனிதனை மேம்படுத்தி வைத்திருக்கும் இஸ்லாமிய நற்பண்புகளை பற்றி பிடித்துக் கொள்வார்.


இன்று நம்மில் நிறைய பேர்கள் தேவையற்ற காரியங்களில் ஈடுபடுவது அதிகமாக இருக்கிறது. வதந்திகளை பரப்புவதும், பயன்பெறாத விஷயங்களை  பேசுவதுமாக இருக்கிறார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ''தனக்குத் தேவையற்ற விஷயங்களிலிருந்து  விலகியிருப்பது ஒருவரின் அழகிய இஸ்லாமிய பண்பில் உள்ளதாகும்.   (நூல்  திர்மிதி )

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: '' நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு மூன்று குணங்களை விரும்புகிறான் . மூன்று குணங்களை வெறுக்கிறான் .
உங்களிடம் அவன் விரும்பும் மூன்று குணங்கள்:
ஒன்று அவனையே நீங்கள் வணங்க வேண்டும் . இரண்டு அவனுக்கு எதையும் இணையாக்க கூடாது. மூன்று நீங்கள் அல்லாஹ்வின் கயிற்றை பற்றி பிடித்துக்கொள்ள வேண்டும். நீங்கள் பிரிந்துவிடக் கூடாது.

அல்லாஹ் உங்களிடம் வெறுக்கும் மூன்று குணங்கள்: ஒன்று அவர் சொன்னார்  (இவ்வாறு ) சொல்லப்பட்டது என்பது போன்ற வதந்திகளில்  ஈடுபடுவது. இரண்டு அதிகமாக கேள்வி கேட்பது .மூன்று செல்வதை வீணடிப்பது.  (ஸஹீஹ் முஸ்லிம்)

ஒரு நல்ல முஸ்லிமாக வாழந்து மரணிக்கவேண்டும் என்பதையே இஸ்லாம் மார்க்கம் விரும்புகிறது. நாம் எல்லோரும் ஒரு நல்ல முஸ்லிமாக வாழ அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள் புரியவேண்டும் ! 

கருத்துகள்