எல்லோரையும் நேசிப்போம்

அல்லாஹ்வின் திருப்பெயரால் ...........

இன்று நம்மிடத்தில் அன்பு இருக்கிறதா  என்று கேட்டால், நிச்சயமாக இல்லை என்றுதான் பதில் வரும். ஒருவரையொருவர் நேசிக்கிறோமோ இல்லையோ ஆனால் குறைக் கூறிக்கொண்டு திரிகிறோம். ஒருவர் மற்றவர் மீது விமர்சனம் செய்கிறார் , இவர் அவரை இழிவாக பேசுகிறார். ஒரு ஜமாஅத் இன்னொரு ஜமாத்தை குறைக் கூறுகிறது . இப்படித்தான் நாம் எல்லோரும் வாழ்ந்துகொண்டுயிருக்கிறோம் . அன்பு , நேசம் ,பாசம் எல்லாம் எங்கே போனது ? என்று தெரியவில்லை !



ஒரு இயக்கம் அந்த இயக்கத்தின் முன்னால் கொள்கை தான் இருக்கிறது, பின்னாடிதான் அன்பு இருக்கிறது. அவர்களுக்கு முன்னால் கொள்கை மட்டும் தெரிகிறது , பின்னால் இருக்கும் அன்பு தெரியவில்லை.  எந்த ஒரு இயக்கமாக இருந்தாலும் அன்பை முன்னே வைத்து பிறகு கொள்கையை பின்னாடி வைத்தால் , அன்புக்கு முன்னால்  எந்த குறையும் , பொறாமையும், கெட்ட எண்ணமும் இருக்காது.  ஸஹாபாக்கள் அவர்கள் எப்படி வாழ்ந்துகாட்டினார்கள்? அவர்கள் ஒருவரையொருவர் நேசித்து , அன்புடன் பழகி வந்தார்கள். மாறுப்பட்ட கருத்துக்கள் இருந்தாலும் . அவர்கள் யாரையும் வெறுக்கவில்லை, ஒதுக்கி வாழ்வில்லை . ஏன்  நாம் மட்டும் இப்படி இருக்கிறோம் ?

நபி (ஸல்) அவர்கள் ஸலாமின் முக்கியத்துவம் கருதி அதைக் கடைபிடிக்க வேண்டுமென ஆர்வமூட்டினார்கள். அந்த ஸலாமின் மூலம் இதயங்கள் இணைகின்றன. மனித மனங்களில் நேச ஊற்றுக்கள் பொங்குகின்றன. அது தனிமனித வாழ்விலும் சமூகத்திலும் மனத் தூய்மையையும் நெருக்கத்தையும் ஏற்படுத்துகிறது.

எனவேதான் ''ஸலாம் கூறுவதால் அன்பு ஏற்படுகிறது. அது சுவனத்தினுள் சேர்ப்பிக்கும் ஈமானை மனித இதயங்களில் போதிக்கிறது '' என நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ''எவனது  கைவசம் எனது ஆன்மா இருக்கிறதோ அவன் மீது ஆணையாக  ! நீங்கள் ஈமான் கொள்ளாதவரை சுவனம் புகமாட்டீர்கள் . நீங்கள் ஒருவருக்கொருவர் நேசம் கொள்ளாதவரை ஈமான் கொண்டவர்களாக மாட்டீர்கள்  . நான் உங்களுக்கு ஒரு விஷயத்தை அறிவித்துத்  தரட்டுமா ? அதை நீங்கள் செய்தால் உங்களிடையே நேசம் உண்டாகும். உங்களிடையே ஸலாமை பருப்புங்கள்.''
நூல் ஸஹீஹ் முஸ்லிம் )

நம்மிடத்தில் அன்பு வளரவேண்டும். நாம் எல்லோரையும் நேசிக்கவேண்டும் !
நாம் எல்லோருடன் அன்பாக பழக வேண்டும் ! நாம் எல்லோரிடமும் ஸலாம் கூற வேண்டும்  ! அவர் இந்த ஜமாத்து , இவர் அந்த இயக்கம் , அவர் அந்த கொள்கை உள்ளவர் என்று  பிரித்து பார்க்காமல் . நாம் எல்லோரும் முதலில் முஸ்லிம் ! பிறகு நீங்கள் யாராவதாக இருந்துகொள்ளுங்கள்  ! அது உங்களுக்கும், அல்லாஹ்வுக்கும்  உள்ளது . நாம் ஸலாம் சொல்லி , அன்பை வளர்ப்போம் !

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : '' அல்லாஹ்விடம் மனிதர்களில் சிறந்தவர் யாரெனில் அவர்களில் ஸலாமை முந்திச் சொல்பவரே !''
நூல் ஸுனனுன் அபூதாவூத் )
அல்லாஹ் மிக்க அறிந்தவன்.
சத்திய பாதை இஸ்லாம் 

கருத்துகள்