மறுமையின் கேள்விக் கணக்கிலிருந்து தப்ப முடியாது!

அல்லாஹ்வின் திருப்பெயரால் ...

பெற்றோர்களே! ஒரு விஷயத்தைக் கண்டிப்பாக ஞாபகத்தில் வைத்துதான் ஆகவேண்டும்! '' நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளிகள்! உங்களுடைய பொருப்பைப் பற்றி மறுமையில் விசாரிக்கப்படுவீர்கள்'' என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதை மறந்துவிட முடியாது. குழந்தைகள் பருவ வயதை அடையும் வரை அல்லாஹ் -ரசூலை பற்றியும் , இஸ்லாத்தின் பர்ளு ஈமானின் விளக்கம், தொழுகை முறை, நோன்பு வைக்கும் விதம் எல்லாம் கற்றுக்கொடுத்து எப்படி எல்லாம் ''அமல் செய்ய வைத்திருக்கிறோம் என்பது பற்றி நிச்சயமாக கேட்கப்படுவோம் . வயிற்று பிரச்சனை தீராததால் மார்க்கப் பிரச்சனை பற்றிச் சிந்திக்க நேரம் இல்லை எனச் சொல்லி விசாரணையிலிருந்து தப்ப முடியாது. குழந்தைகளை சிறுவயதிலேயே தொழுகை, நோன்பு போன்ற காரியங்களில் பழக்கப்  படுத்த வேண்டும்! அவர்களுடைய வயதில் செய்து கொள்வார்கள்' என்று தப்பான கருத்தில் அலட்சியமாக இருப்பவர்கள், ((ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா ? '' என்ற பழமொழியைக் கேள்விப்  பட்டதில்லையா? 

பணம் பந்தியிலே! குணம் குப்பையிலே!

ஒரு தந்தைக்கு மகன் என்ற நிலையிலிருந்து- ஒரு பெண்ணுக்கு கணவன், ஒரு பிள்ளைக்கு தகப்பன் என்ற நிலையைப் பெறும்போது, குடும்பத் தேவை, பொருளாதார பிரச்சனை போன்றவை பல வண்ணங்களில் கோலமிடுகின்றன. அவனுடைய திறமைகளும் ஒரு சவாலாக எதிர்படுகின்றன ஆற்றலை அளவிட்டு சொல்லும் கோலமாக நீளுகின்றன. எந்த ஒரு துறையிலும் முனைந்து முன்னேற முடியாமல் அலையில் சிக்கயவன் போலத் தத்தளிக்கின்றான் மனிதன் . பெரும் பணக்காரர்களும் , அன்றாடம் உழைத்துப் பிழைப்பவர்களும், நடுத்தர நிலையில் உள்ளவர்களும், பல்வேறு சிக்கல்களை தீர்க்க முடியாதவர்களாகத் தடுமாறுகிறார்கள். பணம் இருந்தும் எதையோ பறிகொடுத்தவர்கள் போல் காணப்படுகிறார்கள். நிம்மதி இழந்து வேதனை படுகிறார்கள்.சூரியன் உதயமானத்திலிருந்து அஸ்தமிக்கும் வரை எதோ ஒரு விதமான பயமும், கவலையும் அவர்களுக்கு பின்னால் வந்து கொண்டே இருக்கிறது!- இப்படிச் சில மனிதர்கள்.

மனிதர்களுக்கு பணம் என்பது தேவையான ஒன்று தான் ! அதற்காகத் தன்னையே அழிக்கும் துறையில் இறங்கி விடக்கூடாது. பணம் இல்லாதவன் பிணத்துக்குச் சமம், ''பணம் பந்தியிலே! குணம் குப்பையிலே! என்ற பழமொழியை பெரியோர்கள் சொல்வார்கள்! எண்ணையை பூசிக்கொண்டு  தரையில் எவ்வளவுதான் உருண்டாலும் , ஒட்டுகிற மண் தான் உடலில் ஒட்டும் என்பதை ஞாபகப்படுத்த வேண்டும்!

அல்லாஹ்வுக்கு பொருத்தமான முறையில் நடப்பவர்கள்-ஐந்து வேளையும் தொழுது இறையருளை வேண்டுபவர்கள்-இறைவன் ஹலாலாக்கிய பொருளை விற்றுப் பொருளீட்டுபவர்கள்-மார்க்கம் அனுமதிக்கும் வகையில்    வியாபாரம் செய்பவர்கள் -சம்பாதிப்பதில் நெறியான முறைகளை கடை பிடிப்பவர்கள் எப்பொழுதும், எந்த நேரத்திலும் அஞ்ச வேண்டியதில்லை. எந்த அதிகாரிக்கும், நடுங்க வேண்டியதில்லை  . எந்த குற்றத்திற்கும் ஆளாக வேண்டியதில்லை.

இறைவனுக்கு அஞ்சி நடக்கும்போது, மனிதர்களிடம் ஒரு வித பரிவோடு-பாசத்தோடு நடக்கும் தன்மை ஏற்படுகிறது. அப்போது மனிதர்கள் எல்லோரும் நன்றி உள்ளவர்களாக நடந்து கொள்கிறார்கள். விசுவாசத்தோடு பழகுகிறார்கள்.மறைமுகமாகவோ-நேர் எதிரிடையாகவோ சூழ்ச்சி செய்யும் கெட்ட  எண்ணத்தை மாற்றிக் கொள்கிறார்கள். பொதுவாக, மனிதத் தன்மை இருக்கும் வரையில் மனித இனமே மதிக்கிறது.மனிதத் தன்மை மாறும்போது, எல்லாமே மாறுகிறது, வெறுப்பு வருகிறது! 

கருத்துகள்