கண்ணியம் அனைத்தும் அல்லாஹ்விற்கே சொந்தம்

அல்லாஹ்வின் திருப்பெயரால் ....
 
அல்லாஹ்தஆலா கூறுகின்றான்: 
எவர் கண்ணியத்தை நாடுகிறாரோ, அப்போது கண்ணியம் அனைத்தும் அல்லாஹ்விற்கே சொந்தம் ; (என்பதை அறிந்து கொள்ளவும்) அவன் பக்கமே மணமான (தூய்மையான) சொல் ஏறி செல்கின்றது ; நல்ல அமல் அதனை உயர்த்துகிறது ; எவர் தீமைகளுக்குச் சூழ்ச்சி செய்கின்றனரோ அத்தகையோருக்குக் கடுமையான வேதனையுண்டு; அவர்களுடைய சூழ்ச்சி அழிந்துவிடும்.( அல்குரான் 35-10)

மனிதன் உலகில் பெற்றிடும் கண்ணியங்களும் , கவுரவங்களும், மரியாதைகளும் ஒரு பொருட்டல்ல ; உண்மையான கண்ணியங்கள் அல்லாஹ்வுக்கே உரித்தானவை. அவரனிடமிருந்து கண்ணியத்தை பெற முயல வேண்டும். செல்வங்களைக் குவிப்பதாலும், செல்வாக்கைப் பெருக்குவதாலும், அதிகாரம் வகிப்பதாலும், ஆதிக்கம் செலுத்துவதாலும் அந்த கண்ணியம் கிட்டுவதில்லை . நல்ல சொல்-அதாவது வணக்க வழிப்பாடு திக்ரு செய்தல், கலிமா தய்யிபா போன்றவை அவன்பால் சென்று கொண்டேயிருக்கும்.இது போன்றே நம்முடைய நல்ல அமல்களும், அவன்பால் சென்று கொண்டேயிருக்கும். அவற்றை தடுத்து நிறுத்த எவருக்கும் அதிகாரமில்லை; அவற்றுக்கு நற்கூலி தருபவனும் அல்லாஹ்தான் !

நாம் இதன்மூலம் கண்ணியத்தைப் பற்றி அறிந்திருக்கலாம்.... போலியான கண்ணியம் எப்படி கிடைக்கும் என்பதை நீங்கள் இந்த உலகத்தில் அறியலாம்..
அல்லாஹ்விடமிருந்து நமக்கு எப்படி கண்ணியம் கிட்டும் என்பதும், எதன்மூலம் நமக்கு கிட்டும் என்பதையும் இறை வசனம் மூலம் நாம் அறியமுடியும் !


கருத்துகள்